நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னால் வற்றிப் போனாய்
வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்த்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில்
ஏன் சேர்கிறாய்.
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல்
வானும் என் மண்ணும்
பொய்யாக கண்டேனே.
அன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே
வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை கண்டால்தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காற்றும் நாம் பூமி நமை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே
ஏ மச்சத் தாமரையே
என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய் போனாலும்
நம் காதல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்த்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையே
ஏன் வருகிறாய்
Tweet |
3 மறுமொழிகள் to நெஞ்சே நெஞ்சே நீ எங்கே.... !!! :
Hi dear.. I really enjoy your website.your website is like a "POKKISHAM" keep ongoing. Wish you all the best dear.
hai shakar...
Mudiyum varai muyarchi sei...
Unal mudiyum varai alla..
Nee ninaitha seyal mudiyum varai.
God bless u.
எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி !
உங்களின் கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .
குறை இருந்தால் என்னிடம் தெறிவிக்கவும் !
நிறை இருந்தால் உங்கள் நண்பர்களிடம் தெறிவிக்கவும் !
என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்
Post a Comment