14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!!

மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை "ஓட்டி'க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. "மராத்தா மந்திர்' என்ற தியேட்டரில், "தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.


ஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி ஷோவில் மட்டும் இந்தப் படம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.குறைந்த டிக்கெட் 18 ரூபாய். பால்கனி 22 ரூபாய். தம்பதிகள் தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக 10 ரூபாயில் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இந்தப் படம் பார்க்க வந்து விடுகின்றனர். மணிக்கணக்கில் உட்கார்ந்து படத்தை பார்த்தும், பேசிக்கொண்டிருந்தும் விட்டு கிளம்புகின்றனர். " இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று சிலர் கூறியது வித்தியாசமாக இருந்தது.

வாரத்தின் பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் சுமாரான கூட்டம் தான் இருக்கும்; அப்போதெல்லாம் தியேட்டரின் ஓரளவு வசூலுக்கு கைகொடுப்பது காதலர்கள் தான்; அவர்கள், தங்கள் ரொமான்சை அரங்கேற்றுவதற்காக இந்தத் தியேட்டருக்கு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்தத் தியேட்டர் நிரம்பி வழிகிறது; காரணம், ஷாருக்கின் இந்த படம் அருமையானது என்பதே. இந்தத் தீபாவளியோடு இந்தப் படம் வந்து 730 வாரங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இன்னும் இந்தப் படம் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டுதானிருக்கிறது

5 மறுமொழிகள் to 14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!! :

Unknown said...

Romba supparana news kuduththu irukkinga thanks .unkalutaiya web site oru naalaikku 2 muraiyaavathu padikkaavittaal enakku urakkame varaathu

I Lot Miss Your Web site

Unknown said...

Uunmayaakave ithaiyellaam eppadiththaan antha pakuthiyila valravunga poruththukkittaankalo romba kasttamaana visayam .
Romba risikkaththakka visayankalai koduththu irukkinga athuthaan Shankarnu unkalukku name vaiththu irukkanga poruththamana namethaan
thodarattum unkal pani

சுகன்யா said...

அம்மாடியோ ! இதுபோன்ற ஒரு தியாக செயல் எல்லாம் நம்மலால முடியாதுப்பா . எனக்கு ஒரு படத்தை ஒரு முறை பார்ப்பதே ஒரு மாதிரியா இருக்கும் . இதுல அவங்க எப்படித்தான் பொறுமையா 14 வருடம் இந்த படத்தை ஓட்டினாங்களோ ? கின்னஸ் சாதனைல சேர்க்கிறது தவறே இல்லை என்னை பொருத்த வரையில் .

சங்கர் உங்களின் அனைத்து படைப்புகளும் மிகவும் அர்ப்புதமாக இருக்கிறது .
என் எல்லா நண்பர்களிடமும் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் .

உங்களின் கரை தொடாத கனவுகள் தொடர்கதை எப்பொழுது வெளிவருகிறது மறக்காமல் தேறி விக்கவும் . வேலை அதிகம் இருப்பதால் பின்னொட்டம் இட இயலவில்லை . வருந்தவேண்டாம் .

அன்புடன் உங்கள்
சுகன்யா

sprajavel said...

aachariyamthan.... naan innum antha padam paarkavillai

suvaiyaana suvai said...

enna kodumai ithu!?