வானவில் !!!

வானவில்லைப் பார்த்தால் ' பரவசமாக இருக்கிறது '.என்று குறிப்பிடுவோம் .


' பர ' என்றால் ' தெய்வீகம் ' ; ' வசம் ' என்றால் ' மூழ்குதல் ' ; ' பரவசம் ' என்றால் ' தெய்வீக உணர்வில் மூழ்குதல் ' என்று அர்த்தம் .வானவில் நம்மை பரவசப்படுத்துகிறது ; நெருக்கமானவர்களை சிந்தித்தாலோ , நேரடியாக சந்தித்தாலோ பரவசப்படுகிறோம் .


அப்படியானால் ...


வானவில் நமக்கு நெருக்கமானதா ?


ஆம் ! வானவில்லுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்க்கலாம் ...


வானவில்லில் ஊதா , அடர்நீலம் , நீலம் , பச்சை , மஞ்சள் , இளம்சிவப்பு ( ஆரஞ்ச் ) , சிவப்பு என ஏழு நிறங்கள் . நாம் ' வசிக்கும் ' உடலுக்குள்ளும் இதே ஏழு நிறங்கள் இதே வரிசைப்படி அமைந்துள்ளன .


சகஸ்ராஹாரம் , ஆக்ஞா , விசுத்தி , அநாகதம் , மணிபூரகம் , சுவாதிஸ்தானம் , மூலாதாரம் ஆகிய ஏழு சக்திமையங்கள் ( சக்கரங்கள் ) நமது உடலை இயக்குகின்றன .


உச்சந்தலையில் இருக்கும் சகஸ்ராஹார சக்கரத்தின் நிறம் ஊதா , புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞாவின் நிறம் அடர்நீலம் , தொண்டைப் பகுதியில் இருக்கும் விசுத்தியின் நிறம் நீலம் , இதயப் பகுதியில் இருக்கும் அநாகதத்தின் நிறம் பச்சை , மேல்வயிறு பகுதியில் இருக்கும் தொப்புள் பகுதியான மணிபூரகத்தின் நிறம் மஞ்சள் , தொப்புளின் கீழாக இரு விரற்கடை தூரத்தில் இருக்கும் நீர்வாய்ப் பகுதியான சுவாதிஸ்தானத்தின் நிறம் இளஞ்சிவப்பு , முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் மூலாதாரத்தின் நிறம் சிவப்பு .


சூரியனின் வெண்ணிற ஒளியில் ஊதா முதல் சிவப்பு வரையிலான ஏழு நிறங்கள் உள்ளன என்பதைத்தான் ,' சூரியக்கடவுள் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார் ' என்று ஆன்மிகம் குறிப்பிடுகிறது !


முதுகுதண்டின் கீழ் 'ஓம் ' என்று நினைத்து , அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே ' ந ' என்று நினைத்து , தொப்புள்கொடி புள்ளியில் ' ம என்று நினைத்தும்,


இருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் ' சி ' என்று நினைத்தும் , தொண்டைக்குழி மத்தியில் ' வா ' என்று நினைத்தும் , இரு புருவமத்தியில் ' ய ' என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் .


அதிசய சிற்பம் !


ராமாயணத்தில் வரும் வாலி சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களைக் காண வேண்டுமா ? அப்படியெனில் நாம் செல்லவேண்டிய தலம் தாராசுரம் அ / மி ஐராவதீஸ்வரர் திருக்கோவிலாகும் .


இங்கு வாலியும் , சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது . அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும் . ராமாயணத்தில் வரும் வாலி , சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பதுப் போல் இக்காட்சி அமைந்திருக்கும் . தாராசுரம் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது என்பது தெரியும் .

1 மறுமொழிகள்:

lolly999 said...

wow!!!wonderful!!!!