கவிஞர் பனித்துளி சங்கர் - தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems SMS - Panithuli shankar tamil beautiful love poemsகரையான்களை மிக கொடியவை .... ......
என் இதயத்தை அரித்துக்கொண்டு
உன் நினைவுகள் ...


நேசிக்க மறந்த நெஞ்சம்......... 
சுவாசிக்க மறந்த இதயத்திற்கு
நேசிக்க கற்றுக்கொடுத்தாய்-அது
உன்னால் காயப்பட்டதாலோ என்னவோ,
மற்ற யாரையுமே நேசிக்க மறுத்துவிட்டது......


உடை..!! 
உங்களை பார்க்கும்படி
இருக்கவேண்டும்
"உங்களையே" பார்க்கும்படி
இருக்கவேண்டாம்..!!சுமைகள் ! 
இது மனதில் ஒளிந்திருக்கும்
மாற்றமில்லாத அழுத்தம்

தேவைகள் கூடும்போது - இந்த
சுமைகள் இன்னும் அதிகமாகும்

எல்லோரிடமும் ஒட்டிக்கொள்ளும்
ஏதாவது ஒரு நிலையில்

சுமைகள் !
இது தூக்கி நடக்கும் வரை அல்ல
தூரத்தை கடக்கும் வரைதான் .அம்மாவின் மடியிலோர் குட்டித்
தூக்கம்
நீடிக்க விடாத வேகத் தடை
நின்று கொண்டே பேருந்தில்
பயணம் ...!


என் கண்கள் என்ன கால்
டாக்ஸி யா?
உன்னை சாலை முனை வரை விட்டு
திரும்புகின்றன ...!மாலை ஐந்து மணிக்கு
சந்திக்கலாம் என்றவுடன்.
வழக்கத்துக்கு மாறாக
கடிகாரம் இன்று
வேகமாக ஓட தொடிங்கியது.மெல்லிய வெயில்
ஏசியின் மிதமான குளிர்
ஒரு கோப்பைத் தேநீர்- அறையில்
நானும் அவனும்
தேநீர் தீர்ந்தும்
பேசப்படாத வார்த்தைகள்
மீதமிருந்தது
நண்பர்களாயிருந்ததால்....!எட்டாவது சுரத்தை தேடும்
இசைக் கலைஞர்களுக்கு
இன்னும் எட்டவில்லையோ
என்னவளின் மெட்டி சத்தம்?
நீளும் பொழுதுகளில்
நீச்சலாடும் பார்வைகளில்
பயணமாகிறது காதல்
பார்வைகள் சங்கமிக்கும்
சாயங்கால பொழுதுகளில்
சத்தமில்லாமல் பூக்கிறது காதல்
சற்று என்றே
தீர்ந்துவிடும் அரவணைப்பில்
அழகாகிறது காதல்
புதிது புதிதாக
பூக்கும் ஆசைகளால்
கலையாமல் கலையாகிறது
கண்ணியக் காதல்...என் காதலி
நானும் உன் விழிகள் போல்தான்
நீ கண் விழிக்கும் முன் நானும்
விழிக்கிறேன் உன்னை காண ,,,,,
திருமணத்துக்கோ வேறு சுபகாரியத்துக்கோ
செல்லும்
போது ...ஏமாற்றுவதற்காக ..
ஒன்றுமே இல்லாத
ஒரு பெட்டியை அழகாக சுற்றி
அழகாக
கொடுப்பது வேடிக்கைக்கு மட்டும்
அல்ல
என் நிலையும் அதுதான்
நண்பனே ....!


உன் வாழ்க்கையில் பலரின்
வருகை மகிழ்ச்சியை தரலாம் ....
ஆனால்
எந்த ஒருவரின் வருகையால் ...உன்
வாழ்கை முழுமை அடைந்ததாய் நீ
உணர்கிரையோ ..
அவளே உன் உயிர் தோழி ..அழகானவளே,,,,,
நீலம்பூத்த வானமா,,,!!!
உன் விழிகள்
காற்றிலே அசைகின்ற
கடல் அலையா,,,!!!
உன் ஆடைகள்
மணற் சுமந்த
பாலைவனமா,,,!!!

நீ எறிந்த காகிதம்

நான் உனக்கு கொடுக்கும்
காதல் கடிதங்கள் எல்லாம் - நீ
எரிகிறாய் இல்லை எரிக்கிறாய்.
அவற்றின் மிச்சங்களை கூட
பத்திரமாக வைத்துள்ளேன்
உன் விரல்கள் தீண்டியதால்...
0 மறுமொழிகள் to கவிஞர் பனித்துளி சங்கர் - தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems SMS - Panithuli shankar tamil beautiful love poems :