தினம் ஒரு தகவல் - பேரறிஞர் அண்ணா - கவிஞர் பனித்துளி சங்கர் - Indru oru thagaval - ARIGNAR ANNA

ன்பின் அனைத்து உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கம் உங்கள் அனைவரையும் நீண்ட நாட்களுக்குபிறகு மீண்டும் தினம் ஒரு தகவலில் சந்திப்பதில் மகிழ்ச்சி ! 

சரி நாம் நேராக மேட்டருக்கு  வருவோம் " நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்வதில் தவறு இல்லை . அறிஞர் அண்ணா அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டபோது, ' இன்னும் ஒரு நாள் அதைத் தள்ளிப்போட முடியாதா ? ' என்று கேட்டார் அண்ணா . ' நீங்கள்தான் பகுத்தறிவுவாதி ஆயிற்றே , நீங்களூமா நல்ல நாள் எல்லாம் பார்க்கிறீர்கள் ? ' என்று சிரித்தபடியே கேட்டார் அமெரிக்க மருத்துவர் . ' ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . இன்னும் ஒரு நாளில் முடித்துவிடுவேன் . அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது . அதனால்தான் அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட விரும்புகிறேன் ' என்றார் .
பகத்சிங்கைத் தூக்குத் தண்டனைக்காக அழைத்தபோதுகூட, ' இந்த புத்தகத்தின் இன்னும் சில பக்கங்களைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன் ' என்றார் . அண்ணாவுக்கு மறுநாள் குறித்து நிச்சயம் கிடையாது . பக்த்சிங்குக்கோ மரணமே நிச்சயமாக இருந்தது . மரணம் குறித்தே கவலைப்படாமல் வாசித்தவர்கள் அவர்கள். வாசிக்கும்போது வாழ்க்கையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? "0 மறுமொழிகள் to தினம் ஒரு தகவல் - பேரறிஞர் அண்ணா - கவிஞர் பனித்துளி சங்கர் - Indru oru thagaval - ARIGNAR ANNA :