பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல் - கொலைகாரன் சவப்பெட்டினைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி ! 

லா ஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியை கொலை செய்தவனின் சவப்பெட்டி ரூ . 39 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது .
லீ ஹார்வே ஆஸ்வல்டு என்பவனால் ஜான் எப். கென்னடி கடந்த 1963 ம் ஆண்டு, நவம்பர் 22 -ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் . பின்னர், 

போலீசாரால் கைது செய்யப்பட்ட லீ, 2 நாட்கள் கழித்து ஜாக் ரபி என்பவரால் கொலை செய்யப்பட்டான் . லீ இறந்த பின் அவனது உடல் டெக்சாஸ் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது .

இந்த நிலையில் லீ -ஐ அடக்கம் செய்ய பயன்படுத்திய மரத்திலான எளிய சவப்பெட்டி ஏலம் விடப்பட்டது . ஏலத்தின் போது 2 நபர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது . இறுதியில் அந்த சவப்பெட்டி ரூ. 39 லட்சத்துக்கு ஏலம் போனது .

0 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல் - கொலைகாரன் சவப்பெட்டி :