நான்
உன்னையே நினைத்து
செத்துவிட்டேன் -நீயோ
என்னையே நினைத்து
வாழ்ந்து சாகிறாய் ...!
கவிதைக்கும் ..... தத்துவத்துக்கும்....?
கவிதைக்கும் தத்துவத்துக்கும் சிறு வித்தியாசம் .தான் .........
"காதலிப்பவன்" சொல்வது கவிதை..
"காதலித்தவன்" சொல்வது தத்துவம்.
அவள் படுக்கை அறையில்
கொசுக்களுக்கு வேலை இல்லை
ஏன் எனில்
மலர்ச் சோலையில் பட்டாம் பூச்சிகளே உண்டு.
மௌனம்
உன்னிடத்தில் எனக்கும் என்னிடத்தில்
உனக்கும் பேசிக்கொள்ள கோடி வார்த்தைகள் இருந்தும்
மௌனம் மட்டும் பிடித்திருக்கிறது
உனக்கும் எனக்கும்.......!!!!
இந்த கடியாரம்
அலுவலகத்தில்: இருக்கும் போது
மெதுவாகச் சுற்றுகிறாய்!!!!!
காதலியுடன் :இருக்கும் போது
வேகமாகச் சுற்றுகிறாய் !!!!
தனிமையில்: தவிக்கும் போது
சுழலவே மறுக்கிறாய் !!!!!!!!!!.
Tweet |
0 மறுமொழிகள் to Panithuli shankar Kavithaigal NEW - நியூதமிழ் கவிதைகள் - காதல் கவிதைகள் - ஹைக்கூ கவிதைகள் - நட்புக் கவிதை - இயற்க்கை kavith :
Post a Comment