Tamil jokes - தமிழ் SMS ஜோக்ஸ் -காதல் நகைச்சுவைகள்- மொக்கை லொள்ளு

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவருடனும் இணைந்து சிரித்து அதிக நாட்களை கடந்துவிட்டேன். அதற்காகத்தான் இந்த நகைச்சுவை பதிவு. வாழ்க்கை என்னும் இந்த சிறிய வார்த்தை போலவே இப்பொழுது உள்ள செயற்கையான வாழ்க்கை முறைகளினால் வாழும் நாட்களும் சுருங்கிப் போகத் தொடங்கிவிட்டது. எப்பொழுது பார்த்தாலும் வேலை, வேலை, பணம் என்று ஓடிகொண்டே இருந்தால் எப்பொழுதுதான் வாழ்வது...!? என்ற பதில் இல்லாத கேள்விகள் பல உள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு புறம்.

ன்று உழைத்துக்கொண்டே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் . நாளை வாழ்வதற்காக உழைக்காதீர்கள் . தினமும் இயன்ற வரை சிறிது நேரம் சிரித்து மகிழுங்கள். சிரிப்பு ஒரு தோற்று வியாதி ! இது அனைவருக்கும் பிடிக்கும் . தினமும் இயன்ற வரை யாரேனும் ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குங்கள். நாம் பணத்தால் செய்ய இயலாத பல அதிசய மாற்றங்களை இந்த சில நிமிட சிரிப்பு ஏற்படுத்திவிடும். சரி நண்பர்களே இன்று உங்களுடன் இணைத்து மகிழ இதோ சில நகைச்சுவை துணுக்குகள் பகிர்ந்திருக்கிறேன் வாசித்து மகிழுங்கள் .
* * * * * * *
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு...

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.
& & & & & & &

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

^  ^  ^  ^  ^  ^ ^
னவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

$ $ $ $ $ $ $
ம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.
அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.
# # # # # # #

னைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

@ @ @ @ @ @ @

ணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது...
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?.....
( ( * * * ) )

றிவாளி 1 : மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

அறிவாளி 2: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

அறிவாளி 1 : இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........
& & & & & & &

மலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே..!
@ @ @ @ @ @ @

யாருக்கிட்ட நான் பூனை இல்லை புலி ! Tamil Comedy Clip

* * * * * *

16 மறுமொழிகள் to Tamil jokes - தமிழ் SMS ஜோக்ஸ் -காதல் நகைச்சுவைகள்- மொக்கை லொள்ளு :

குறையொன்றுமில்லை. said...

சில ஜோக்ஸ்தான் தெளிவா இருக்கு. வெள்ளைக்கலர்ல உள்ள ஜோக்ஸ் சரியா தெரியவே இல்லே.

rajamelaiyur said...

Super jokes

MANO நாஞ்சில் மனோ said...

மாப்பு அடிச்சி கிளப்பு பட்டையை....

rajamelaiyur said...

Pls check one joke repeated

கிராமத்து காக்கை said...

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
அருமையான தத்துவம் வாழ்த்துக்கள்
சகோ

கிராமத்து காக்கை said...

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
அருமையான தத்துவம் வாழ்த்துக்கள்
சகோ

பாலா said...

கருத்துக்களும் ஜோக்குகளும் அருமை. கலர்தான் கண்ணை கலக்குது...

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப நன்னயிருக்கு சார். அதிலும் அந்த முதல் புலி ஜோக் ...ஹா..ஹா...

அம்பலத்தார் said...

கடிதாங்கமுடியலை ஜோக்ஸ் நல்லாயிருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ஜோக் ஓக்கே

F.NIHAZA said...

நல்லா இருந்திச்சி...

Anonymous said...

super jokes abbu keep it up

Jaleela Kamal said...

சிலது முதலே படிச்சிருந்தாலும் மறுபடி படிக்கும் போது இன்னும் நலல் இருக்கு

ஓப்பன் பண்ணா ரொம்ப எரரா இருக்கு கலரும் ரொம்ப டார்கக இருக்கு

ana said...

nalla jokes. i am kiyas

Unknown said...

நான்.சிரித்து மகிழ்வது உங்கள் நகைசுவை தான்்

Anonymous said...

படித்ததில் பிடித்தது

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு...