மரம் தின்ற மனிதர்கள் - பனித்துளி சங்கர் கவிதைகள் - Maram thinra manithargal Kavithaigal

ளமையும் இல்லை
இலைகளும் இல்லை
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ
.ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனி வரும்
அவன் தாகம் தீர்ப்பானோ....!????

னிதன் மகிழ்ந்து வாழ
அனைத்தும் தந்த மரங்களுக்கு
மனிதன் தந்த
பரிசு மரண தண்டனை..!

வெட்டப்படும் மரங்களின்
அழுகை சத்தம்
உயிர் வரை பாய்கிறது.....
தரைகளில் காய்ந்து கிடக்கும்
ஒவ்வொரு இலை சருகிலும்
காய்ந்து போன
குருதி வாசம் நாசி எட்டுகிறது.....

த்தனை பறவைகளின்
வீடுகள் சிதைத்தோம்....
எத்தனை பறவைக் குழந்தைகளின்
தாய்பால் பறித்தோம்......

வித விதமாய்
தினம் தினம் புதிது புதிதாய்
சிரித்த எத்தனை பூக்களின்
புன்னகைகளில்
பூகம்பம் விதைத்தோம்....

விதை ஊன்றி
உயிர் கொடுக்க வேண்டிய
மரங்களுக்கு
விதவை பட்டம் கொடுத்து
உடனே பாடையில் ஏற்றும்
பெருமை இந்த மகத்தான
மனித குலத்திற்கு மட்டுமே
உரிய சிறப்போ...!?
நாம் பூகம்பம் கண்டால்
வலி என்கிறோம்
பூக்கள் காயம் கண்டால்
அதன் விதி என்கிறோம்......
சிந்திக்கவும் பேசவும் தெரிந்த
மனூட அரக்கர்களுக்கே உரிய
சுயநலம்தான் இந்த மரக்கொலைகளோ...!?

சிறு நரை முடி உதிர்ந்தாலே
ஆயிரம் மருத்துவம் தேடும் நாம்.....
தினம் மரங்களின்
உடல்களை அறுப்பது ஏன்...!?

நேற்று என் முன்னோர்
நட்ட மரங்கள்
இன்றும் நாங்கள் வாழ
சுவாசம் தருகிறது....
நாளை வரும்
என் தலைமுறை சுவாசிக்க
எந்த கடைகளில் சுவாசம் வேண்டி
காத்துக் கிடப்பார்களோ....!?

ண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உள்ளுக்குள் நொறுங்கிப்
போகிறது இதயம் !.
* * * * * * *
- பனித்துளி சங்கர்.28 மறுமொழிகள் to மரம் தின்ற மனிதர்கள் - பனித்துளி சங்கர் கவிதைகள் - Maram thinra manithargal Kavithaigal :

கும்மாச்சி said...

அருமையான சுற்றுப்புற சூழல் பற்றிய ஒரு கவிதை.

மீ த பர்ஸ்ட்.

அரசியல்வாதி said...

இன்றய அரசியல்வாதியில்
எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)

ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்

குறையொன்றுமில்லை. said...

எண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நொறுங்கிப்போகிரது இதயம். ஆமாதான்
உங்க திரட்டில பதிவை இணைக்க முடிய்ல்லியே என்ன செய்யனும்?

சம்பத்குமார் said...

நாளைய தலைமுறைக்கு நாம் தரவேண்டிய உயிர்மூச்சு..

மரம் வளர்ப்போம்.மனிதம் காப்போம்

விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்க்கு மிக்க
நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

தேவன் மாயம் said...

மிக அருமை சங்கர்!

Anonymous said...

மிகவும் அருமையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கவிதை...
இந்த நேரத்தில் மிகவும் தேவையான கவிதை...

RAMA RAVI (RAMVI) said...

//மனிதன் மகிழ்ந்து வாழ
அனைத்தும் தந்த மரங்களுக்கு
மனிதன் தந்த
பரிசு மரண தண்டனை..!//

மிகவும் அருமையான வரிகள்.சுற்றுப்புரசூழலை பாதுகாக்க வேண்டி ஒரு விழிப்புணர்வு கவிதை. நன்றி பகிர்வுக்கு.

கா.ந.கல்யாணசுந்தரம் said...

மரமில்லா வாழ்க்கை மரண வாழ்க்கைதான். மிகச் சரியாக கருத்துக்களை சொன்னீர்கள் சங்கர். வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

அருமையான கவிதை

rajamelaiyur said...

நல்ல வரிகள்

rajamelaiyur said...

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
மனிதம் மரத்த மனிதனால் துண்டாடப்படும் மரங்களினைப் பற்றிய அருமையான விழிப்புணர்வுக் கவிதை.

கதம்ப உணர்வுகள் said...

நாம நல்லாருக்கோமா? ரைட்...
நம்ம குடும்பம் நல்லாருக்கா ரைட்....
நாம வேலை செய்யும் இடம் நல்லபடியா இருக்கா ஓகே...
நாம தினமும் சாப்பிட கரெக்டா டைமுக்கு சாப்பாடு கிடைக்கிறதா? போதும்...
தினமும் சலிக்காம சீரியல் பார்த்து வலிக்காம வம்பு பேசி நம் பொழுதுகள் நல்லா போகுதா ஹப்பா முடிஞ்சுது நம்ம வாழ்க்கை ஜோரா போகுது....

சரி எல்லாம் சரி... ஆனால் கொஞ்சம் அதிலிருந்து வெளி வந்து யோசிக்க ஆரம்பிச்சால்....

மரநிழலில் உட்கார்ந்து கதை பேசி ஐந்துக்கல் விளையாடி சிலுசிலுன்னு காத்துல கயிற்றுக்கட்டில் போட்டு உட்கார்ந்து இயற்கை காற்றை சுவாசித்து.....

ராத்திரி ஆனால் மரத்தின் நிழலில் ஆனந்தமாக படுத்து நிலா பார்த்து நட்சத்திர வேட்டையாடி அப்படியே தாலாட்டு போல தென்றல் நம்மை உறங்கவைக்கும் காட்சியை நினைத்து பாருங்க அப்டின்னு சொல்ல வைக்குதுப்பா உங்க கவிதை வரிகள்....

நாம எப்படி தாரண்யமா மரத்தை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம நம் சுயநலத்துக்காக மட்டுமே சிந்தித்து வாழ்கிறோம்னு இங்க ஒவ்வொரு வரியாக சம்மட்டியால் அடிப்பது போல் உரைக்கிறதுப்பா கவிதை வரிகள்....

காற்று தருகிறது, நிழல் தருகிறது, காய் கனி தருகிறது.. வீட்டுக்கு வரும் குஞ்சுகுளுவான்களுக்கு விளையாட ஊஞ்சலாட இடம் தருகிறது.... நாம் மனம் மகிழ்ந்து தலையில் சூடிக்கொள்ள பூ தருகிறது... எல்லாம் தந்த தாயை முதியோர் இல்லத்துக்கு அனுப்பின பாவிகளை போல நாம் செய்வது என்ன? என்று நச் நு சாட்டையால் அடிப்பது போல கவிதை வரிகள் அமைச்சிருக்கீங்கப்பா....

வீட்டுக்கு ஒரு மரம் நட்டு வைக்கலாமே... முருங்கை சீக்கிரமா வளருமே.. வேம்பு நமக்கு நல்ல சுவாசத்தை மருந்தை தருமே...

இப்ப சிட்டியில் வீடு பார்த்தால் பெட்டி தீப்பெட்டி சைஸ்ல தான் இருக்கு...

பாரதியார் கூட அன்னிக்கே பாட்டெழுதி வெச்சார் வெறும் வீடு மட்டும் இருந்தால் போதாது வீட்டைச்சுற்றி மரங்கள் வேண்டும் என்று...

மரம் வெச்சால் தானே குருவி காக்கை குயில் வந்து அமரும்.... நம் வீட்டில் வந்து நம்முடன் சிநேகபாவத்துடன் சிரிக்கும்?

மரத்தின் பயனை நாமறிந்தோம் உங்கள் கவிதை வரிகளால்....
இப்பவும் தாமதம் ஆகவில்லை இதை படித்தாவது சிந்திக்க துவங்கு மனிதான்னு நச் நு உறைப்பது போல் எழுதி இருக்கீங்க..1.காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணி லழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அங்கு
தூணி லழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்

காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணி யருகினிலே - தென்னைமரம்k கீற்று மிளநீரும் – அங்கு
கேணி யருகினிலே - தென்னைமரக கீற்று மிளநீரும
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்; 2.பத்துப் பன்னிரண்டு, பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன் பக்கத்திலே வேணும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன்
பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு

கத்துங் குயிலோசை, கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்,
கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்- என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
3.பாட்டுக் கலந்திடவே, பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக்

காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- என்றன்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்- என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும


அன்பு வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கங்கள் சங்கர்... உங்கள் தளம் ரொம்ப அருமையாக இருக்குப்பா...

Vairavan said...

ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனிவரும்
அவன் தாகம் தீர்பப்பானோ?மிக அருமையான வரிகள்.

உண்மை முகத்தில் அடிக்கிறது

Unknown said...

சூப்பர் கவிதை

Unknown said...

பனித்துளி சங்கரு...
விழுப்புரத்தில்
விடியல் விழிப்புணர்வு இயக்கம்
இருக்கவே இருக்கு...
கவலைய விடு...

சீனுவாசன்.கு said...

விடியல் விழிப்புணர்வு இயக்கம்
விழுப்புரம்
இருக்கவே இருக்கு...
கவலைய விடு...
உன் சார்பா ஒரு நூறுமரம்
வாங்கிகொடுத்தன்னா
புண்ணியமா போவும்...

Samantha said...

Suuuuuperb ... :)

Unknown said...

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

பனித்துளி சங்கர் said...

// @கும்மாச்சி said...
@அரசியல்வாதி said...
@suryajeeva said...
@Lakshmi said...
@சம்பத்குமார் said...
@தேவன் மாயம் said...
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
@Heart Rider said...
@RAMVI said...
@கா ந கல்யாணசுந்தரம் said...
@"என் ராஜபாட்டை"- ராஜா said...
@நிரூபன் said...//

அனைவரின் ஆதரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பர்களே..!!

பனித்துளி சங்கர் said...

@மஞ்சுபாஷிணி
ஒரு பதிவு அளவுக்கு ஊக்கப்படுத்தி கருத்திட்டு, பாரதியார் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி மிக நீண்ட கருத்துப் பகிர்வு அளித்தமைக்கு மிக்க நன்றிங்க தோழி..!!! தங்களது கருத்துகளே ஒரு விழிப்புணர்வு மிக்கதாக மிகவும் அருமையாக உள்ளது.

பனித்துளி சங்கர் said...

// @ Rajeswaran said...
@ வைரை சதிஷ் said...
@ saravanan said...
@ சீனுவாசன்.கு said...
@ Samantha said...
@ வைரை சதிஷ் said...//
அனைவரின் ஆதரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பர்களே..!!

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நீட் சங்கர்!!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

சுடும் வரிகள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

சுடும் வரிகள்

..சபரி.. said...

..அருமை நண்பா..
நாளைய சமுதாயம் தளைக்க, இக் கவிதைகள் வேர்களாவது மட்டும் நிச்சயம்..

நம்பிக்கைபாண்டியன் said...

கவிதை நன்று, தலைப்பு மிக அருமை!

aalunga said...

சிந்தனையைத் தூண்டும் நல்ல கவிதை..

தனக்கு உதவும் எந்த உயிரினத்திற்கும் மனிதன் அளிக்கும் பரிசு மரணம் தான்!