உணவுகள் எங்கே
எங்களின் உயிர்களும் அங்கே.
உடை இன்றி பிறந்தோம்
ஏனோ இந்த உடலின்றி பிறக்க மறந்தோம்..!?
அழியாத இந்த மண்ணைக்
கட்டியாளத் துடிக்கும் மானுடன்
ஏனோ நாளை அழியப்போகும்
மனிதனை மறந்துபோனான்..!
தேடிக் கிடைபதற்கும்,
உழைத்து உண்பதற்கும்
ஏதும் இல்லாத தூரங்கள்
பார்வைகளில் நிழலாடுகிறது.
சின்னஞ் சிறு குழந்தையில்
சிறுநீர் கழித்து வாழ்ந்த
என் மக்கள் இன்று கண்முன்
சிறுநீர் குடித்து தாகம் தீர்ப்பதா...!?
பற்றி எரியும் பசியில்
கொன்று உண்பதற்கு என்னை போன்ற
பசிகொண்ட மனிதனைத் தவிர
எதிரே ஒன்றும் இல்லை..!
உணவும்
, உடையும், இருப்பிடமும்தான்,
எங்களின் கனவாகிப் போனது
இந்த மரணம் கூடவா
எங்களின் வாழ்வில்
கானல் நீராகிப்போனது !?
கை நீட்டி கண்ணீர் விடுவதற்கும் ,
வாய் திறந்து கதறி அழுவதற்கும்
உணர்வுகள் இருந்தும்
உடலில் உதிரம் இல்லை.
பசி எடுக்க மருந்தொன்றுக்
கண்டான் மனிதன்
நாங்கள் பசி மறக்க ஏனோ
மருந்தொன்று காணாமல் மறந்தான்..!!
நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சில நாட்கள்
இந்த பூமியில் சுவாசித்திருக்கும். .!
உண்ண உணவின்றி மறித்துபோகும்
இந்த உன்னத வரம் எங்களுடன்
அழிந்துபோகட்டும்.
இயன்றவரை உணவுகளை வீணாக்காதீர்கள்...!!
- பனித்துளி சங்கர்
Tweet |
24 மறுமொழிகள் to பசி கவிதைகள் > சிதறும் உயிர்கள் - Panithuli shankar varumai kavithaigal in tamil :
முதல் கவிதை...
நீ அசத்து மக்கா கவிதையில்...!!!
தமிழ்மணம் இணைச்சி ஓட்டும் குத்தியாச்சி...
ஆம் உணவுகளை வீண் செய்யாமல் பயன்படுத்துவோம்..
மரணம் கூடவா கானல் நீராகிப்போனது?..
நல்ல வரிகள்..
மரணம் கூடவா கானல் நீராகிப்போனது?..
நல்ல வரிகள்..
அருமையான வரிகள்
அருமையான கவிதை
கண்டிப்பாக நண்பா, உணவை வீணாக்காமல் பயன்படுத்த முயற்சிக்கிறேன் நண்பா.
நல்ல விழிப்புணார்வு கவிதை. வாழ்த்துக்கள்
பசி எடுக்க மருந்தொன்றுக் கண்டான் மனிதன்!
நாங்கள் பசி மறக்க ஏனோ மருந்தொன்று காணாமல் மறைந்தான்!
அருமையான வரிகள்!
சிறந்த கவிதை!
//நீங்கள் தினமும் சிதறவிடும்ஒவ்வொரு சோற்று பருக்கையிலும்எங்களின் உயிர்இன்னும் சில நாட்கள்இந்த பூமியில் சுவாசித்திருக்கும். .! //
வலி(மை)யான வரிகள் நண்பரே!
//உண்ண உணவின்றி மறித்துபோகும் இந்த உன்னத வரம் எங்களுடன்அழிந்துபோகட்டும்.இயன்றவரை உணவுகளை வீணாக்காதீர்கள்...!! //
//பசி எடுக்க மருந்தொன்றுக்கண்டான் மனிதன்நாங்கள் பசி மறக்க ஏனோமருந்தொன்று காணாமல் மறந்தான்..!!//
அருமையான வரிகள்.அழகான கவிதை.
உணவில்லா மனிதர்களின்
பசியின்உணர்வின் வரிகள்
எழுப்பிய வினாக்கள் மனதை பிசிகிறது
கவிஞரின் சமூக உணர்வுக்கு என் சலாம்
அருமையான கவிதை.
மனதை உலுக்குகிறது...
நமக்கு இறைவன் தந்த வரப்பிரசாதங்களுக்கு...நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும்...
அற்றார் அழிபசி தீர்க்க-குறள்
அறிவுரை தன்னை நோக்க-பொருள்
பெற்றார் உணவினை காக்க-உணர்வு
பெங்கிய கவிதனை ஆக்க-கண்
உற்றார் உணர்ந்திட வேண்டும்-வாழ
உயிர்தனை காத்திட யாண்டும்-என
நற்றாய் ஆகியே சங்கர்-இங்கே
நவின்றீர் நன்றி சங்கர்
வலைப்பக்கம் வாருங்கள்
புலவர் சா இராமாநுசம்
manasa thodum vartha thalaiva
படிப்பதற்கே கண்களை மறைக்கவிருந்த உதிரத்தை கண்ணீர் முந்திக்கொண்டதே,
அனுபவித்து வாழும் எம் தோழமை நிலை மாற நானும் என்னால் இயன்ற செயல் செய்வேன்,
ஏற்க்கனவே நான் செய்து வரும் சமூக சேவைக்கு வேகம் தந்து விட்டீர்கள் ...
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
நீரோடை க்காக
மகேஷ்...
சங்கர், இண்ட்லில அதிக ஃபாலோயர்ஸ் உள்ள ஒரே பிளாக்கர் நீங்கதானாமே? வாழ்த்துக்கள்
மனதை நெகிழ்த்தும் வரிகள்!
உண்மை...முடிந்தவரை வீணாக்காமல் இருக்கவேண்டும் நண்பா!
உண்மை...முடிந்தவரை வீணாக்காமல் இருக்கவேண்டும் நண்பா!
beautiful
நல்ல கவிதை.
இவை கவிதை அல்ல
Post a Comment