அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். தினம் தினம் ஒரு புதுமை கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு புது விடியலை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இந்த புதுமை என்னும் வார்த்தை இப்பொழுது சற்று வித்தியாசமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. அதற்கு காரணங்களும் உண்டு. ஆடை இன்றி பிறந்த மனிதன் இன்று வேற்றுக் கிரகத்திற்கு பறக்கும் அளவிற்கு தினமும் ஒரு புதுமை நிகழ்ந்துகொண்டே உள்ளது.
அறிவியல் ஆக்கத்திற்கா !? இல்லை அழிவதற்கா !? என்ற கேள்விகள் நம்மில் இருந்தும் இன்றைய நொடியில் ஏற்படும் புதுமைகளை கண்டு நம்மில் வியக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு விஞ்ஞானம் மனிதர்களின் இதயங்களை தன்பக்கம் மட்டுமே பார்க்கவேண்டும் என்ற அளவில் வசியம் செய்துவிட்டது என்று சொல்லலாம். இன்றையப் பதிவும் விஞ்ஞானம் சார்ந்த ஒன்றுதான் என்று சொல்லவேண்டும்.
இதுவரை நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய விஞ்ஞான வளர்ச்சிகளில் மனிதன் நிலவுக்கு சென்றதும் ஒன்று. இப்பொழுதும் அந்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் மிகவும் ஆர்வமாக ஒரு பதிலுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி '' நிலவில் மனிதனால் வாழ இயலுமா'' !? என்பது மட்டும்தான். ஆனால் இதுவரை நம்மில் பலருக்கு தெரியாத இந்த நிலவு பயணம் பற்றிய வினோதத் தகவல்கள் கொண்டப் பதிவுதான் இது என்று சொல்லலாம்.
ஆம் வாசகர்களே..! நம்மில் பலருக்கு நிலவிற்கு முதன் முதலில் பயணம் செய்த உயிரி ஒரு நாய் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால், அந்த நாய் பூமியில் இருந்து விண்கலம் புறப்பட்ட சில நிமிடங்களிலே இறந்து போனது என்றால் நம்புவீர்களா..!!? ஆம்..! உலகின் முதல் விண்வெளிப் பயணி ' லைக்கா ' என்கிற நாய். 1957 -ம் வருடம் நவம்பர் மூன்றாம் தேதி ரஷ்யாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் பறந்தது லைக்கா. இது சுற்றுப் பாதையில் நான்கு நாட்கள் உயிரோடு இருந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்தார்கள். உண்மையில் விண்கலம் கிளம்பும்போது பயத்திலேயே உயிரை விட்டுவிட்டது லைக்கா என்ற அந்த நாய். இந்த உண்மை கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து 2003 -ம் ஆண்டுதான் தெரிய வந்ததிருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
இது மட்டும் இல்லை இப்பொழுது சொல்லப் போகும் தகவலை வாசித்தால் நம்மில் பலருக்கு மிகவும் வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கக் கூடும். ஆம் இதுவரை நிலவில் முதன் முதலில் கால் வைத்த மனிதர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) என்றுதான் நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் உண்மையாகவே அவர் இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா... !?
நிலவிலே கால் பதித்தவர் ' என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருபவர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong). ஆனால், அவரோடு நிலவுக்குச் சென்ற பஸ் ஆல்ட்ரினை நம்மில் பலருக்குத் தெரியாது. உண்மையில் நிலவில் முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் ஆல்ட்ரின்தான். அவரைப் புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டவர்தான் ஆம்ஸ்ரோங். அமெரிக்க விண்கலம் நிலவில் இறங்கிய கொஞ்சநேரத்துக்கு தூசு மண்டலம் தரையை மறைக்க, புதைகுழியில் இறங்குவது போன்ற பயம் ஆல்ட்ரினுக்கு வந்துவிட்டது. எனவே அவர் இறங்கவில்லை.
இதை கவனிக்காமல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிவிட்டார். இந்த குற்ற உணர்ச்சியாலோ என்னவோ நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) நிலாவில் தன்னை ஒரு புகைப்படம்கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஆல்ட்ரினை மட்டுமே புகைப்படம் எடுத்தார். பூமி திரும்பிய ஆல்ட்ரின் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததில் ரொம்பவே நொந்து போனார். தன் காரில் ' Moon First ' என்று எழுதிக்கொண்டு முழு போதையில் வாழ்க்கையை வெறுத்து நீண்ட காலம் சுற்றித் தெரிந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு ஒரு அரிதான வாய்ப்புக் கிடைத்து திடீர் என்று நழுவிப்போனால் யாருக்குத்தான் வருத்தம் இருக்காது...!!
(நன்றி. கூகுள் தேடுபொறி படங்கள்)
என்ன வாசகர்களே..!! இந்தத் தகவலும் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் அரு அரியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
நேசத்துடன்
பனித்துளி சங்கர்
* * * * * *
Tweet |
21 மறுமொழிகள் to நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இல்லை..!! - Moon first - Indru oru thagaval :
இப்படி ஒரு ஆங்கில வாக்கியம் சொல்லுவார்கள் " Oppourtunity will be given only once, if you miss it , you will not get it again".
பாவம் ஆல்ட்ரின்
அப்போ தலைப்பு பிழைதானே!!!
இப்போ நீல் ஆம்ஸ்ட்ர்ரோங் என்ன பன்னுராரு? நிலவுக்கு போய் வந்ததுல இருந்து அவருடைய எந்த செயற்பாடோ, போட்டோவோ இல்லையே!!!
//உங்கள் நண்பன் said...
இப்படி ஒரு ஆங்கில வாக்கியம் சொல்லுவார்கள் " Oppourtunity will be given only once, if you miss it , you will not get it again".//
ம்ம் உண்மைதான் நண்பரே..!! வாய்ப்புகள் கிடைக்கும் போது கோட்டை விட்டால் அதன் பிறகு ”கோட்டுவா” தான் விட வேண்டும். ஹி.. ஹி.. ஹி... தங்களது கருத்துக்கு நன்றி.
//Mohamed Faaique said...
அப்போ தலைப்பு பிழைதானே!!!
இப்போ நீல் ஆம்ஸ்ட்ர்ரோங் என்ன பன்னுராரு? நிலவுக்கு போய் வந்ததுல இருந்து அவருடைய எந்த செயற்பாடோ, போட்டோவோ இல்லையே!!//
தலைப்பின் நோக்கம் ஆல்ட்ரின் என்பவர்தான் நிலவில் கால் பதிக்க அலுவலக ரீதியாக அனுப்பப்பட்டவர் என்பதற்கான கூடுதல் சுவாரஸ்ய தகவலை தெரிவிக்கவே..!! இப்ப என்ன பண்ணுறாருன்னு வரும் பதிவுகள்ல சொல்கிறேன். புரிதலுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி நண்பரே..!!
nice
thanks
அருமையான புது தகவல் பனித்துளி நன்றி...!
ஹிட்லரின் நாஜி(NAZI) விஞ்ஞானிகள்தான் முதன் முதலில் நிலவில் கால் பதித்தார்கள் என்று ஒரு தியரி உண்டு...
அதன் பின் அமெரிக்கர்களின் நிலவுப்பயணமே ஒரு அப்பட்டனான பொய் என்றும், சோவியத்தான் முதலில் நிலவை அடைந்தாகவும் ஒரு செய்தி உண்டு.
ஹிட்லர் குறித்து மேலும் சில அமானுஷ்ய தகவல்கள் உண்டு அவருக்கு ஏலியன்கள் உதவியதாகவும், பிரபல மந்திரவாதி ரஸ்புதினின் ஆவியுடன் அவர் பேசியிருக்கிறார் என்றும் கதைகள் உண்டு.
அருமையான புது தகவல் நண்பரே...
இதுவரை கேட்டு அறியாத புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
Sir, oppurtunity never come again
அவர்கள் இருவருமே போகவில்லை என்று ரஷ்யா கூறுகிறதே நண்பா???
விக்கிலீக்ஸ் போல பல தகவல்கள் வந்துட்டே இருக்கே,,,,நல்ல பகிர்வுகள்......
sema matter ma
நல்ல பயனுள்ள தகவல் சங்கர். தொடருங்கள்.
விந்தையான தகவல் அண்ணா அடுத்த பதிவில் சிந்திப்போம்
தமிழில் SEO தகவல்கள்
நல்ல தகவல்...
ஆனால், ஒரு சிறு திருத்தம்!!!
"நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இல்லை..!! " என்ற தலைப்பு தவறு!
"நிலவில் கால் பதிக்க அனுப்பப்பட்ட முதல் மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இல்லை..!!" என்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து!
அருமையான புதிய தகவல் நன்றிகள் பல...........
thalaippu unmai tha konja nalaiku munnala india anupuna seyarkaikol muliyama kandupiditha thakaval padi
nilavula nni aamstrang kal vasathukana thadayame illanu india kandupidisuruku ana intha news sa velivitala pona varusam anupuna seyarkaikol athu appa oru oppantham amerikakuda india poturunthathala velividala kudiya sikiram veliya varum
Dear Admin,
Your post is entirely wrong. I am sorry to say this first.Does anyone know the truth that Armstrong and Aldrin have never gone to moon? There are a lot of proofs for this.
Post a Comment