அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினால் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனிதர்களாகிய நாம் பின்தங்கி இருப்பதாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.
உண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றியே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திரங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய மனிதர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.
இன்று கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக என்பதை மறந்து அதை ஒரு அழுகுப் பொருளாகவே மாற்றி அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டன. காலையில் உதிக்கும் சூரியனின் ஒவ்வொரு அசைவிலும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தங்களின் தினசரி வேலைகளை செய்துவந்த மனிதர்கள். இன்று ஆயிரம் அதிநவீன வசதிகள் இருந்தும் தங்களின் நேரங்களை சரியாக பயன்படுத்த மறந்து தடுமாறும் நிலையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் யாரும் மறுக்க இயலாத உண்மை. சரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம்.
இப்படித்தான் ஒரு முறை ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். பிற புரதான காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
அந்தக் காலத்தின் சூரியனின் தோற்றம் மற்றும் சூரியனின் மறைவை வைத்து மட்டும்தான் நேரத்தைக் கணித்தார்களா நமது முன்னோர்கள் என்று பார்த்தால் அதையும் கடந்து பலப் பறவை இனங்கள் எழுப்பும் ஒலிகளைப் பயன்படுத்தியும் நேரத்தை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். நமக்கு தெரிந்த நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தத்தை வைத்து விடியலின் நேரத்தைக் கணக்கிடுவார்கள் என்பதை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த சேவல் அல்லாது மற்ற எந்தப் பறவை மனிதனின் நேர கணக்கீட்டிற்கு உதவியது என்பதையும் பார்த்துவிடலாம்.
கடிகாரம் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார்ந்திருந்தன. ஆகவே மேகமூட்டமான வானிலையில் அல்லது இரவில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவகாலம் மாறும்போது மீண்டும் அளவுத்திருத்தம் செய்யவேண்டியும் இருந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற்றிய, நீரினால் இயங்கும் ஒழுங்படுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையுடன் ஆரம்பகாலத்திலிருந்த கடிகாரமானது, கி.மு மூன்றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத்துக்குரியதாகும்.
பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியாளர்கள் கண்டுபிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சியால் இன்று கடிகாரத்தில் வளர்ச்சி பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே...!!
பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியாளர்கள் கண்டுபிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சியால் இன்று கடிகாரத்தில் வளர்ச்சி பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே...!!
பின் வரும் பறவைகளின் சத்தங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரத்தை கணக்கிட மிகவும் உதவியாக இன்றும் பயன்படுகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < > 3 மணி.
குயில் கூவும் நேரம் < > 4-00 மணி.
சேவல் கூவும் நேரம் < > 4-30 மணி.
காகம் கரையும் நேரம் < > 5-00 மணி.
மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < > 6-00 மணி.
என்ன நண்பர்களே..! இனி கிராமப் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்டு இருக்கும் பறவைகளில் ஏதேனும் ஒன்றின் சத்தத்தை காலை நேரத்தில் நீங்கள் கேட்க நேர்ந்தால் நேரத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆயிரம் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் இதுபோன்ற யதார்த்தங்களுக்கு நிகர் இந்த யதார்த்தங்களே என்பது மட்டும் திண்ணம்.
* * * * * * *
Tweet |
32 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள் - Panithuli shankar in Amazing news :
கடிகாரம் பற்றிய தகவல்கள் அறுமு. மற்றும் அந்த குருவிகள் சரியான நேரத்திற்கு கூவுமா?
அருமை .
பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ..
அருமையான விடயத்தை அழகாகச் சொன்னீர்கள் கிராமத்து பறவைகளையும் அசைபோட விட்டீர்கள்!
good share
(Sorry. NHM Writer not working)
கடிகாரம் பற்றிய தகவல்கள் மிக அருமை.
கண்ணை கவரும் கடிகாரம் மற்றும் பறவைகளின் படங்களும் அருமை.
கடிகாரம் பற்றி அறிய தகவல்களை தெரிந்து கொண்டேன். இப்போது இந்த பறவைகளை எல்லாம் எங்கே போய் கண்டு பிடிப்பது?
செம்போத்து எப்பொழுது வேண்டுமானாலும் கத்தும்.. இரவு இரண்டு மணிக்கு கத்தி கூட கேட்டிருக்கிறேன்..
அருமையான தகவல்கள்
புதிய தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!!
நேரம் வந்தாச்சு! நல்ல நேரம் வந்தாச்சு!
அருமையான தகவல்கள்...
கடிகாரத்தகவல்கள் அருமையாக இருந்தன! சின்னஞ்சிறு வயதில் இந்தப் பறவைகளின் குரலில் லயித்துப்போய் விடியற்காலையில் சுறுசுறுப்பாக எழுவது நினைவுக்கு வந்து விட்டது!
காலத்தின் அளவை பறவைகளைக்கொண்டு அழகாக பதிந்துள்ளீர்கள்.நன்றி
நல்ல தகவல்.
ஆச்சர்யமான தகவல்கள். அழகான படங்கள்.
கடிகாரம் பற்றிய தகவலும் படங்களும் நல்லா இருக்கு.
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கையின் படைப்பை விஞ்சமுடியுமா?
பகிர்விற்கு நன்றிங்க சங்கர்.
எனக்கு பிடித்தது பறவைகள் பற்றிய தகவல்கள் தான்
படங்களும் அருமை
படங்களும் பதிவும் அருமை. அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது பறவைகள் எழுந்திடும் நேரத்தை ஒப்பிட முயற்சிக்க வேண்டும்.
Very useful blog. Keep it up.
Hi This is my first time here.Luv ur posts.Neenga Thabu Shankar enum peyaril Ezhuthuvathunda.In case if its U,nice meeting U sir and I luvd reading ur Tamil Verses.Happy to join ur blog.
முடிந்தால் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_27.html பார்க்கவும்!
கடிகாரம் பற்றிய தகவல்கள் அருமை.கண்ணை கவரும் கடிகாரம் மற்றும் பறவைகளின் படங்களும் அருமை.மற்றும் ஒரு விசயம் நான் இதுவரை பறவைகளில்( செம்போத்து )எனும் பெயர் கேள்வி பட்டதும் இல்லை பறவையை பார்த்ததும் இல்லை..உங்கள் தகவலுக்கு முட்க நன்றி... ( என்னதான் இருந்தாலும் பறவைகளின் தகவல்கள் விஞ்சுமே தவிர இக்கால விஞ்ஞான வளர்ச்சியை மிஞ்ச முடியாது...!!! )
arumai
arumai
நல்ல தகவல்!
நிறைந்த தகவல்களுடன் அசத்தலான படங்களும் சேர்ந்து realy great work.
நன்றாக இருந்தது. கிரிக்கெட் விளயாடியபோது சூரிய கடிகாரத்தை பயன்படுத்தினீரா ? எல்க்ட்ரானிக் வாட்ச் ஐ பயன்படுத்தினீரா ?
ellam sariyana timela goovamanuthan doubt
nengal yar enakku dout.
i am iniyan.very nice.nan nampukiran but birds soundil erandu tan nampukiran.onru crow sound.ennonru seval sound.ta..ta.
Post a Comment