மந்திரப் புன்னகை கவிதைகள்


ண்ணங்களில் வண்ணங்கள்
பூசி செல்கிறது உந்தன்
இதழோரப் புன்னகை

 சில யதார்த்தங்கள் வழிந்து விழுந்திடும்
வியர்வைத் துளிகளாய்
கழிந்து போகிறது கால ஓட்டத்தில்

றக்க முயற்சித்து தோற்றுப்போன
எண்ணங்களின் தொகுப்புகளில்
இன்னும் குறையாத அணிவகுப்பாய்
மனக்கிடங்கில் சத்தமிடுகின்றன
உன் நினைவுகள் .

ணிகள் எதுவுமின்றியே
அறையப்படுகிறது எனது
எதிர்பார்ப்புகள் அனைத்தும்
உன் வருகை என்னும் சிலுவைகளில் .

யிரிழந்த தேகமாய் தினமும்
உனது உறவை தேடி தேடித்
தொலைந்துபோகிறேன் கனவுகளுக்குள்

நீ அருகில் இருக்கும்பொழுது
நொடிகளாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
இன்று தீர மறுத்து வருடங்களாய் வதம் செய்கிறது .
தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில்
எல்லாம் சாயம் இழந்த
வானவில்லின் பிம்பங்கள் .

டையப் போகும் நீர் குமிழியாய்
ஒவ்வொரு நொடியும்
துடித்துக்கொண்டிருக்கிறது இதயம்
விரைவில் வந்து தந்துவிடு சுவாசம்
உயிர் நின்றுபோவதற்குள் ,!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

23 மறுமொழிகள் to மந்திரப் புன்னகை கவிதைகள் :

Ramesh said...

//ஆணிகள் எதுவுமின்றியே
அறையப்படுகிறது எனது
எதிர்பார்ப்புகள் அனைத்தும்
உன் வருகை என்னும் சிலுவைகளில் .

//உடையப் போகும் நீர் குமிழியாய்
ஒவ்வொரு நொடியும்
துடித்துக்கொண்டிருக்கிறது இதயம்
விரைவில் வந்து தந்துவிடு சுவாசம்
உயிர் நின்றுபோவதற்குள் ,!

செம...அசத்தலான கவிதை...

உயிர் நின்று போவதற்குள்ங்கறதுக்கு பதிலா... குமிழ் உடைந்து போவதற்குள்..! அப்படின்னு முடிச்சிருந்தா இன்னும் நச்சுன்னு இருக்கும்னு தோணுது..

Unknown said...

கவிதை அருமை..

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு சங்கர்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை...

Praveenkumar said...

கவிதை மிகவும் அருமையாக உள்ளது நண்பரே..!

Unknown said...

ம்ம் கவிதை களை கட்டுது வழமை போலவே!!

நிலாமதி said...

கவிதை அழகாய் உணர்வாய் இருக்கிறது பாராட்டுக்கள்.

மாதேவி said...

எண்ணங்களில் வண்ணங்கள்பூசி செல்லும் புன்னகை அழகு.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமையாய் அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Unknown said...

கவித கவித

சூப்பர் சார்

விஷாலி said...

என்ன கவிஞ்சரே
கலக்குறீங்க

vasu balaji said...

நல்லாருக்கு:)

கதிர்கா said...

/*தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில்
எல்லாம் சாயம் இழந்த
வானவில்லின் பிம்பங்கள்*/

நல்ல வரிகள்

கதிர்கா said...

/*தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில்
எல்லாம் சாயம் இழந்த
வானவில்லின் பிம்பங்கள்*/

நல்ல வரிகள்

ரைட்டர் நட்சத்திரா said...

அருமை
by mtvenkateshwar.blogspot.com

ரைட்டர் நட்சத்திரா said...

அருமை
by mtvenkateshwar.blogspot.com

அன்பரசன் said...

சூப்பர்

Anonymous said...

எனக்காகவே எழுதி இருக்குற மாதிரி இருக்கு சங்கர். அருமை !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

moghi said...

"மறக்க முயற்சித்து தோற்றுப்போன எண்ணங்களின் தொகுப்புகளில் இன்னும் குறையாத அணிவகுப்பாய் மனக்கிடங்கில் சத்தமிடுகின்றன உன் நினைவுகள்"
அருமையான வரிகள் கவிஞரே:::::::::::::

செய்தாலி said...
This comment has been removed by the author.
செய்தாலி said...

தமிழ் இனிமையா .....?பொருள் சுமக்கும் கவிவரிகள் இனிமையா....? எதைச் சொல்ல்வது
வார்த்தைகள் இல்லை கவிஞரே .....

விஷாலி said...

நல்லா இருக்கு