இயந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம்
இன்று சிறகுகள் முளைத்து
ஆனால்
இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும்
இன்னும் கலையாத கனவுகளாய்
மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன்
மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம்
இன்று தந்திர நரிகளாய்
வற்றிப்போன கண்ணீரிலும் ,
ஒட்டிப்போன வயிற்றிலும்
இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டுமே
கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்கிறான் ,
அஞ்சிக் கேட்டால் கோழை என்கிறான்
இவைகளில் இன்னும் மிச்சம் இருக்கும் சுதந்திரம்
எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே !
ஏற்றிக் கட்டிய கோவணம்,
சூரியனை மிரட்டும் இருட்டுத் தேகம் ,
வற்றிப்போன நதியாய் இவனின் இரத்தம்,
வற்றாத கடலாய் இவனின் உழைப்பு என
அனைத்தையும் குழைத்து ஏர் பிடித்து
பூமி கிளரிய பழைய மனிதன் இன்று
பாடப் புத்தகங்களில் மட்டுமே காட்சித் தருகிறான்.
வியர்வைகளை சேற்றில் மட்டுமே
சிந்தியதால்தான் என்னவோ
இன்னும் அழுக்காகவே இருக்கிறது
என் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை !
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * *
Tweet |
41 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் - எந்திரன் சிறகுகள் :
மிக மிக மிக அருமையான வரிகள் நண்பா..!! ரொம்ப யதார்த்தமான வரிகள் நண்பரே..!
தங்களின் கவிதை நிஜங்களின் ரணங்களை வெளிப்படுத்துகிறது.
அருமை நண்பரே..
மிக மிக மிக அருமை... வாழ்த்துக்கள்!
\\இவைகளில் இன்னும் மிச்சம் இருக்கும் சுதந்திரம்எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே !//\\வியர்வைகளை சேற்றில் மட்டுமே சிந்தியதால்தான் என்னவோஇன்னும் அழுக்காகவே இருக்கிறதுஎன் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை !//அருமையான வரிகள் நண்பா!
அழகான கவிதை நண்பரே
அருமையோ அருமை.
சமூக அக்கறை மிக்க வரிகள்!
உழவர்களின் நிலையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்.
நல்ல சிந்தனை.பாராட்டுக்கள்.
மிகவும் நன்றாக உள்ளது!
மனதில் தைத்த வரிகள் !
மாற வில்லை அந்த வலிகள்!
கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்கிறான் ,
அஞ்சிக் கேட்டால் கோழை என்கிறான்
இவைகளில் இன்னும் மிச்சம் இருக்கும் சுதந்திரம்
எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே ///
நான் ரசித்த வரிகள்
அருமையான கவிதை நண்பரே... பிரமிக்க வைக்கிறீர்கள்
கவிதை நல்லா இருக்குங்க.பாராட்டுக்கள்.
நல்ல கருத்துக்கள் .. வாழ்த்துக்கள் ...! அப்புறம் .. ஜெயா டிவி - ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் .. கொஞ்சம் வந்து பாருங்கள்... ! http://erodethangadurai.blogspot.com/
//பிரவின்குமார் said...
மிக மிக மிக அருமையான வரிகள் நண்பா..!! ரொம்ப யதார்த்தமான வரிகள் நண்பரே..!//
கருத்துக்கு நன்றி நண்பரே..!
//அருண் said...
தங்களின் கவிதை நிஜங்களின் ரணங்களை வெளிப்படுத்துகிறது //
கருத்துக்கு நன்றி நண்பரே.
//அன்பரசன் said...
அருமை நண்பரே.. //
கருத்துக்கு நன்றி நண்பா..!
//என்னது நானு யாரா? said...
மிக மிக மிக அருமை... வாழ்த்துக்கள்!//
வாழ்த்தியமைக்கு நன்றி..!
//சிவா said...
வேங்கை said...
முகுந்த் அம்மா said...
தேவன் மாயம் said...
சைவகொத்துப்பரோட்டா said... //
தங்களது கருத்துக்கு நன்றி..!
//asiya omar said...
எஸ்.கே said...
marimuthu said...
சௌந்தர் said...
கவிதை காதலன் said...
ஜிஜி said...
ஈரோடு தங்கதுரை said...//
உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே..!
////மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம்
இன்று தந்திர நரிகளாய்
வற்றிப்போன கண்ணீரிலும் , /////
நல்லாயிருக்கிறது அருமை வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு..
நல்ல பதிவு..
மிகவும் அருமை..........:)))
இது போன்ற வரிகளுக்கு கருத்து எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றிசொல்ல கடமைப் பட்டிருக்கிறேன் ..... மிக மிக யோசிக்கவேண்டிய தருணம் இது நண்பரே http://maheskavithai.blogspot.com/
மிக அருமையான வரிகள் நண்பா
//ம.தி.சுதா said...
Prem said...
priya said...
Wonderful collections said...
rk guru said... //
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே..!
யதார்த்தமான கவிதை.
அருமை... வாழ்த்துக்கள்!
*/கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்கிறான் ,அஞ்சிக் கேட்டால் கோழை என்கிறான்இவைகளில் இன்னும் மிச்சம் இருக்கும் சுதந்திரம்எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே !/*இது உண்மை அண்ணா
அழகான கவிதை நண்பரே! மிக ரசித்தேன்!
ஃஃஃஃஃமந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம்
இன்று தந்திர நரிகளாய்
வற்றிப்போன கண்ணீரிலும் ,
ஒட்டிப்போன வயிற்றிலும்
இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டுமேஃஃஃஃஃ
ஒருவனின் யதார்த்த வரிகளித வாழ்த்துக்கள்...
"இந்திய விவசாயின் வாழ்க்கை - சூதாட்டம் " என்பார்கள்.. ஆனால் இன்றோ "இந்திய விவசாயின் வாழ்க்கை - சூன்யம் "என மாறிவிட்டதை அழகாய் படம் பிடித்திருக்கிறது உங்கள் கவிதை.
மிக பிடித்த வரிகள்...
///வற்றிப்போன கண்ணீரிலும் ,
ஒட்டிப்போன வயிற்றிலும்
இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டும்...///
//ஏர் பிடித்து
பூமி கிளரிய பழைய மனிதன் இன்று
பாடப் புத்தகங்களில் மட்டுமே காட்சித் தருகிறான். //
ரொம்ப நல்லா இருக்கு சங்கர் :-)
நல்ல சிந்தனை. நம் தேசத்தின் அவலம் சொல்லும் பாங்கு அருமை தோழா. எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறோம். இதை மாற்றும் நிலைக்கு நடைமுறை வழிகளில் காலெடுத்து வைப்பது யார். .? எப்போது.? ஏதாவது செய்தாக வேண்டும். படித்தவன் எல்லாம் காசுப் பார்க்கும் எந்திரமாகிப் போனான். பிழைப்பில்லாதவன்.., உழைக்காதவன்.., ரவுடி.., இவனெல்லாம் அரசியல்ல புகுந்து தேசத் தலைவனாகி.....?? எப்படி உருப்படப் போகிறோம்.? தெரியவில்லை. இளைய தலைமுறை அரசியல் நுழையாதவரை..... எந்த மாற்றத்தையும் வயோதிக அரசியல் நமக்கு தராது. நன்றி நண்பா.
வியர்வைகளை சேற்றில் மட்டுமே சிந்தியதால்தான் என்னவோ இன்னும் அழுக்காகவே இருக்கிறதுஎன் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை ! அருமையான வரிகள் நண்பா
@சே.குமார் தங்களது வருகைக்கும் வாழ்த்துககும் நன்றி நண்பரே..!!
@Jeyamaran உண்மைதான் நண்பரே..! தங்களது கருத்துக்கு நன்றி நண்பரே..!
@சிங்கக்குட்டி தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!
@தமிழ்க் காதலன். ஒரு பதிவைப்போன்ற விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பரே.
Post a Comment