2010 - உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்..!!

னைத்து நண்பர்களுக்கும்  வணக்கம். தொடர்ந்து பதிவுகள் தர இயலாத நிலையில் அதிக வேலை பளு. இருந்தாலும் இன்றையப் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வழக்கம் போல் நண்பர்கள் அனுப்பி இருந்த மடல்கள்  அனைத்திற்கும் பதில் அளித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் அனுப்பி இருந்த மடலை வாசித்த பொழுது மிகவும் வியப்பில் உறைந்துபோனேன். அவர் வைத்திருந்த தலைப்பே சற்று ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இருந்த போதிலும், அதை வாசித்து முடித்த பின்பு இன்னும் ஓய்ந்து போகாத அலைகளாய் பிரமிப்பு உள்ளம் எங்கும் ஒரு வியப்பை நிரப்பி சென்றது. ஆம் நண்பர்களே இந்த பிரமிப்பிற்கும் சிறப்பிற்கும் பிறப்பிடம் ஒரு தமிழனின் இதயத்தில் பூத்த முயற்சிகள் என்றால் நம்புவீர்களா  ! உண்மைதான். இதோ அந்த நண்பரின் மடல் தந்த தகவல் உங்களுக்காகவும் .....

ண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்மையுடனும், துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

ப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரொம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமைபட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பிடம் : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
து நினைத்துப் பார்க்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார். கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 .
 
ன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட..


நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பால் அபிஷேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிறீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலை படைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
தும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம் இதுதான்.
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விஷயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம் இங்குதான்.

துவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * * *  

18 மறுமொழிகள் to 2010 - உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்..!! :

Unknown said...

தன்னோட வாழ்க்கையையே அற்பணிச்சுக்கிட்டு சேவை செய்ற இவர் ஒரு ரியல்ஹீரோங்க..

Unknown said...

இப்பதிவின் மூலமாக இந்த விசயத்தை சொன்னதற்கு நன்றிங்க.. வோட்டு போட்டாச்சு.. ஒருத்தரே நிறைய ஓட்டு போடமுடியுதுங்க.. நிறைய ஓட்டு போட்டுட்டேன்..

Asiya Omar said...

ஓட்டு நிறைய போட்டாச்சு.பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

சுதர்ஷன் said...

மிக்க நன்றி பனித்துளி ஷங்கர் ... உங்கள் ப்ளாக்கில் போட்டால் நிச்சயம் பொய் சேரும் நன்றாக .. வாழ்த்துக்கள் ..நன்றிகளுடன்

Chitra said...

பதிவுலகில் பாபு said...

தன்னோட வாழ்க்கையையே அற்பணிச்சுக்கிட்டு சேவை செய்ற இவர் ஒரு ரியல் ஹீரோங்க..

...true

விஷாலி said...

இப்படி பட்டவர்களால் தான் இன்றும் நம் நாட்டில் அன்பு நிலைத்து இருக்கிறது நன்றி நண்பரே

விஷாலி said...

நீங்க சொன்ன மாதிரி ஓட்டும் போட்டாச்சி நன்றி நண்பரே

ம.தி.சுதா said...

/////நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பால் அபிஷேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம்/////
சரியாகச் சொன்னீர்கள் சகோதரா.... கடவுளே இந்த மனிதனை தரணி உள்ளவரை வாழ வைக்க மாட்டாயா..??

மதுரை சரவணன் said...

மதுரைக்காரர் பற்றிய பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Sharah said...

Hi Shankar When i come to read this mail, i realized a Single drop of tear fluid and falling from eye.Here i Need to share a few thngs .In this world everyone wants to do something wants to help others ,but no one comes to do this (me also)but U Mr Narayanan...U r the man of my dreams , you are my roll model, i have no words to say about your work....finally i need to share you guys This is one of the best mail i had ever seen in my life...I will definitly help your organization as much as I can!!!I wish you Mr Narayanan, You will deserve for CNN Title... All The Best Shankar Sir your way of presentation amazing...Thanks Milton J

Sharah said...
This comment has been removed by the author.
பிரதீபா said...

என்னவொரு சேவை மனம் இந்த மனிதருக்கு! ஒரு சதவீதமேனும் நானும் செய்ய உறுதி எடுக்கிறேன்.

Anonymous said...

நல்ல தகவல்... nandri

'பரிவை' சே.குமார் said...

நண்பரே... அவருக்கு நானும் என் நண்பர்களும் வாக்களித்து விட்டோம்.

அவர் குறித்து நானும் பதிவிட்டிருக்கிறேன்..

பாருங்கள்...

http://vayalaan.blogspot.com

Matangi Mawley said...

Nijamaagavey ivar Hero thaan... Oru naal- sumaar 2 varusham munnaadi.. ethechchiyaa channel maththum pothu sun tv la kaalela ivar petti paarthaen! athukkapram oru 2 days thookkam illa! ulagaththula naama ennavellaaththiyumo paaththu varuththa padarom/parithaapa padarom.. aanaa atha paththi naama enna senjom?? "nammaala enna seiyya mudiyum"? ngara ennam!

athukkapram India Today(english) la 1 yr munnaadi ivara paththi article vanthathu..

He is truly a HERO! I ve already voted!

தமிழ்க்காதலன் said...

ஒரு தமிழன் மீதான உங்கள் தமிழுணர்வுக்கு நன்றி சங்கர். உங்களைப் போலவே நிறைய நல்ல தமிழ் உள்ளங்கள் உள்ளதைக் காணும்போது .... நம் அடுத்த தலைமுறையும் வாழும் என்கிற நம்பிக்கைப் பிறக்கிறது. வலைப்பூ பக்கம் வந்து போங்கள். நன்றி.

Murugeswari Rajavel said...

சிறப்பான பதிவு.

Hemalakshmi said...

தன்னோட வாழ்க்கையையே அற்பணிச்சுக்கிட்டு சேவை செய்ற இவர் ஒரு ரியல்ஹீரோங்க.