! கவிதைகள் நிலா !

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே !
நிலா
காரிருள் மரத்தில் கனியாய் நிலா...
கலங்கிய கடலிலும் கலந்தது நிலா....

குதித்தோடும் ஆற்றிலும் குளித்தோடும் நிலா.....
காதலர்களின் கற்பனையில் கவிதையாய் நிலா...

ந்த ஊனக்கவிதையில் கூட உவமையாய் நிலா..
என் காலத் தெருவில்மட்டும் கானல்நீராய் நிலா..

ல்லா நிலைநீரிலும் நீந்துகின்ற நிலா...
என் நட்பு ஓடையில் நீரிருந்தும் நீ இல்லை.. நிலா....

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

20 மறுமொழிகள் to ! கவிதைகள் நிலா ! :

Chitra said...

welcome back!

எஸ்.கே said...

நிலாக் கவிதைகள் அருமை!

thiyaa said...

ஆகா ரொம்ப நல்லாயிருக்கு

'பரிவை' சே.குமார் said...

வாங்க சங்கர்...
ரொம்ப நாளாச்சு....
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் உங்களுக்கும்... நண்பருக்கும்..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதைகள் அருமை!

Unknown said...

நல்ல கவிதை நண்பரே..

தினேஷ்குமார் said...

//காரிருள் மரத்தில் கனியாய் நிலா... கலங்கிய கடலிலும் கலந்தது நிலா.... //நீரில் மறைந்து தவழ்ந்த நிலா கவிதை நல்லாருக்கு தொழரே

தமிழ்க்காதலன் said...

தோழர் சங்கருக்கு வணக்கம், நல்ல கவிதைதான். ஒரு சின்ன திருத்தம். "கானல்நீராய்" என இருக்க வேண்டும். மாற்றிக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.

நிலாமதி said...

என் நட்பு ஓடையில் நீர் இருந்ததும் நீ இல்லை நிலா.........ஒரு நாள் வருவா....

Kousalya Raj said...

நன்றாக இருக்கிறது உங்கள் நிலா....!!

http://rkguru.blogspot.com/ said...

கவிதைகள் அருமை!

Learn said...

அருமை

ஆர்வா said...

நிலவு எப்படி அழகோ.. தங்கள் கவிதையும் அப்படித்தான்..

ஆர்வா said...

உங்கள் வலைப்பூ லோட் ஆவதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்கிறது.. கொஞ்சம் சரி செய்யவும்..

Bharathi Annamalai said...

திரு. பனித்துளி சங்கர் அவர்களுக்கு கவிதை அருமையாக உள்ளது.. ஒரு சிறு சந்தேகம் இந்த கவிதையை எழுதியது யார்... இந்த கவிதை நண்பர் திரு.ராஜகோபால் அவர்களின் கவிதை. அவரது அனைத்து கவிதைகளும் எனது வலைப்பூவில் அவரது பெயரில் ஒரு தனிப்பிரிவில் வைத்துள்ளேன். அதனுள் செல்வதற்க்கான இணைப்பு இங்கே உள்ளது.. தயவு செய்தோடுத்தவர்களின் கவிதையை பிரசுரிக்கும்போது அவர்களின் அனுமதி பெற்று செய்யவும்..
http://bharathiannamalai.wordpress.com/

நட்புடன்
பாரதி அண்ணாமலை

பனித்துளி சங்கர் said...

அன்பின் தோழி பாரதி அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம். இந்த கவிதை நீங்கள் சொல்லி இருப்பது போல் நண்பர் ராஜகோபாலின் எண்ணங்களில் பூத்தவைத்தான் . அதுதான் தெளிவாக தொடக்கத்தில் சொல்லி இருக்கின்றேனே!? .

இவர் என்னுடைய நெருங்கிய நண்பரும் கூட இவரும் என்னுடன்தான் அமீரகத்தில் வேலை செய்து வருகிறார் . உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

உங்களின் தளத்தை பார்வை இட்டேன் கவிதைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

மோகன்ஜி said...

நல்ல கவிதை!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇந்த ஊனக்கவிதையில் கூட உவமையாய் நிலா..
என் காலத் தெருவில்மட்டும் கானல்நீராய் நிலா..ஃஃஃஃ
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....

Ramesh said...

கவிதை அருமை நண்பரே...

Administrator said...

?????????? ???????????????? ???? ??????? ??????? ???????? ????????????? ????? ?????? ???????? ??????????????? ??????????????