தமிழ் சினிமா ஒரு பார்வை (1981) - பாக்யராஜ் சினிமா முதல் படி..! (Tamil Cinima Director Bakkiyaraj first movie)

னைத்து நேசங்களுக்கும்  பனித்துளி சங்கரின் வணக்கங்கள். இன்று நாம் இன்று ஒரு தகவலில் பார்க்க இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த துறை என்று சொல்லலாம். அப்படியென்றால் என்று நீங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பே நான் பதிலை சொல்லிவிடுகிறேன் சினிமாத் துறை. உலகத்தில் மிகவும் பிரபலமான சினிமா துறை சார்ந்தவர்கள் பற்றி நமக்கு அதிக ஆர்வம இல்லையென்றாலும் நமது உள்ளூர் சினிமாக் காரர்களின் கடந்த காலங்கள் பற்றி அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம் உண்டு என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. சரி இனி நாம் மேட்டருக்கு வருவோம் . 

ந்த தகவல் நான் பிறப்பதற்கு முன்பே வெளிவந்த ஒன்று என்பது மற்றொரு சுவராஸ்யம். சரி. இது ஒரு பக்கம் இருக்கட்டும். பிறப்பதற்கு முன்பு என்றால் ஆம்..!! (1981) ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்தி ஒன்றில் வெளிவந்த ஒரு பிரபல நாளிதழில் வெளியான சினிமாப் பற்றியத் தகவல். அப்படி இந்த தகவலில் நம்மை சற்று ரசிக்கவும் சற்று கண்கள் கலங்கவும் வைக்கப்போகும் இந்த சினிமா கலைஞன் யார்..??!!.

ரு காலத்தில் கண்ணாடியை மாட்டி சற்று அமுக்கிவிட்டாலே போதும் உடனே அனைவரும் இவரின் பெயரை சொல்லி விடுவார்கள். ”ங்...... அதாவது பார்த்தீங்கன்னா.. இது கொஞ்சம் விவகாரமான விஷயம்தான். ஆனால்  இல்வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான விஷயம் என்று நாகரீகமாகவும், நகைச்சுவையாகவும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடையச் செய்தவர். துவண்டு போய் இருந்த முருங்கைக்காய் விற்பனையை தன்னுடைய ”முந்தானை முடிச்சு” படம் மூலம் தூக்கி நிறுத்திய பெருமை இவரை சாரும் என்றால் அது மிகையாகாது. சரி இனியும் புதிர் வேண்டாம்.
‎''ஹீரோ ஆகணும்னா பார்க்க லட்சணமா அழகா இருக்கணும்..!''

'கிழக்கே போகும் ரயில்' வளர ஆரம்பித்தபோது, பாக்யராஜை தனக்கு வசனம் எழுத உதவியாக வைத்துக்கொண்டதோடு, உதவி டைரக்டராகவும் பிரமோஷன் கொடுத்தார் பாரதிராஜா. அந்தப் படத்திற்கு ஒரு பாட்டையும் எழுதி, இரண்டு சீன்களில் நடிக்கவும் செய்தார் பாக்யராஜ்.
தான் சினிமாவில் சேர்ந்துவிட்ட செய்தியைத் தெரிவித்து தன் அம்மாவிடம் ஆசி பெற வந்தார் பாக்யராஜ். 'கிழக்கே போகும் ரயில்' படத்தைப் பார்த்துவிட்டு, ''நீ இரண்டு மூணு சீன்தானே வரே! ஏன் ஹீரோவா நடிக்கல?'' என்று அம்மா கேட்டார். ''ஹீரோவாகணும்னா நல்லா லட்சணமா, பார்க்க அழகா இருக்கணும்மா!'' என்று இவர் பதில் சொன்னார். உடனே, ''நீ நல்லாத் தாண்டா இருக்கே. நீ வேணா பாரு, நீ ஹீரோவா வரத்தான் போறே!'' என்று ஆசீர்வதித்தார் அம்மா.
'புதிய வார்ப்புகள்' படத்திற்கு ஹீரோ தேடிக்கொண்டிருந்தார் பாரதிராஜா. ஒருநாள், ஸ்டில் போட்டோகிராபர் லட்சுமிகாந்தன், ''உங்களுக்குக் கண்ணாடி போட்டு ஒரு ஸ்டில் எடுக்கச் சொல்லியிருக்கார் டைரக்டர்'' என்று சொன்னபோது, ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று முதலில் நினைத்தார் பாக்யராஜ். ஆனால், தான்தான் 'புதிய வார்ப்புகள்' படத்தின் ஹீரோ என்பதை அறிந்தவுடன் அவருக்கு இன்ப அதிர்ச்சி!
''என் அம்மாவுக்கு 'உன் ஆசை நிறைவேறிவிட்டது'ன்னு உடனே லெட்டர் போட்டேன். ஆனால், படம் வெளிவரும்போது அதைப் பார்த்துச் சந்தோஷப்பட என் அம்மா உயிரோடு இல்லை'' என்று கண் கலங்கினார் பாக்யராஜ்.
 
ன்ன நண்பர்களே..!! இன்றைய சினிமாப் பற்றியத் தகவலும் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள். இன்னும் அதிகம் அறிந்துகொள்வோம் .
நேசத்துடன்
பனித்துளி சங்கர்.
*  *  *  *  *  *  *

8 மறுமொழிகள் to தமிழ் சினிமா ஒரு பார்வை (1981) - பாக்யராஜ் சினிமா முதல் படி..! (Tamil Cinima Director Bakkiyaraj first movie) :

சக்தி கல்வி மையம் said...

பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள்.// கண்டிப்பா...

Karthikeyan Rajendran said...

பாக்யராஜ் ரசிகர் மன்றம், வாழ்க, பகிர்வுக்கு நன்றி!

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

Nirosh said...

நன்றி நண்பரே... எனக்கவர்ந்த திரைக்கத அமைப்பாளர் பற்றி பதிவிட்டமைக்கு முதலில் என் நன்றிகள்...! மேலும் சுவையாக தந்தமைக்கு வாழ்த்துக்கள்...!

ஸ்ரீராம். said...

பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள், மவுன கீதங்கள் போன்ற படங்கள் நல்ல படங்கள்.

தமிழ் வண்ணம் திரட்டி said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே
உங்கள் தளத்தை add author முறையில் எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணைய அழைக்கிறோம்.

போளூர் தயாநிதி said...

நாம் பெரும்பாலும் இந்த சீரழிவு திடைபடங்களை பார்பதில்லை உங்களின் பதிவினால் படித்தேன் நல்ல செய்திதான் பாராட்டுகள் .

எம்.ஞானசேகரன் said...

சுவாரஸ்யமான தகவல் நண்பரே!
அந்த்தக்கால பாக்யராஜ் படங்களே தனி மௌசு கொண்டவைதான்!

எஸ் சக்திவேல் said...

அந்தக் காலங்களில், பள்ளிக்கூடத்தில் (1982-1985)கண்ணாடி போட்ட எல்லோரையும் "பாக்கியராஜ்" என்று கிண்டல் பண்ணுவார்கள்.