தமிழா ! தமிழா !
இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!!
உன் உறவுகள் அழிந்தது போதாதா..??!
உடமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..!
உறவுகள் கதற காதுகேளாதவனாய்
தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..!
இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..!
எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள்,
ஊனமாய் எதுவும் இயலாது
முள்வெளிகளுக்குள் கண்ணீருடன் இன்று ..!
நாங்கள் இன்னுமொரு
பிணம் ரசிக்கவா..??
நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு
தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..!
உன் சுவாசம் தவணை முறையில் தரப்படுகிறது.
தீர்ந்துபோகும் கொடுத்த கேடு என்று
ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும்
காற்றில் எல்லாம் இன்னும்
தீர்ந்து போகாத பிண வாடை ..!
ஆடையின்றி தானே பிறந்தாய்..??!?!
இப்பொழுது எதற்கு உனக்கு ஆடை என்று உருவப்பட்டாய்..!!
அப்பொழுதும் தமிழன்..! தமிழன்..! என்றாய்..!
ஆஹா..! நிர்வாணமாய் ஒரு மனிதன்
என்று சொல்லவா..!,,
இல்லை, அய்யோ பாவம்
என் தமிழன் என்று சொல்லவா...!!!
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
18 மறுமொழிகள் to ஈழம் கவிதைகள் - தமிழா தமிழா :
//நிர்வாணமாய் ஒரு மனிதன்என்று சொல்லவா..!,,இல்லை, அய்யோ பாவம் என் தமிழன் என்று சொல்லவா...!!!//
இந்த வரிகள் முழுக்கவிதையையும் சொல்கிறது.
கவிதை படிக்கும்போது மனசு வலிக்கிறது.
கையறு நிலையை நன்கு விளக்குகிறது கவிதை! பகிர்வுக்கு நன்றி!
மனதை கனக்க வைக்கிறது.
வலி வலி :( விடிவே அற்ற வலி.
வணக்கம் நண்பரே...
கவிதை அருமை.
நண்பரிடம் ஓர் உதவி...
கவிஞ்கர் காசி அனந்தன் ஈழத் தமிழர் திளிப்பன் உண்ணா விரதம் இருந்தப்போது திளிப்பைனுக்காக எழுதிய கவிதை கிடைக்குமா?
கிடைத்தால் எனது மின் அஞ்சலுக்கு அனுப்பும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்,
கவிதாமணி
Mail: kavithamani@sify.com
Web: www.kavithamanikavithaigal.blogspot.com
அருமையான கவிதை, பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் அருமை அருமை
:(((((
//தமிழன்..! தமிழன்..!//
???????????????????????????????கிருக்கிறான்.
அற்புதமான கவிதைகள்....வாழ்த்துகள்
சொல்லத் தெரியவில்லை.
உடைத்துவிட்டிருக்கிறீர்கள்
மீண்டும் சங்கர் !
what a tear broughtable rhyme!
ம்ம்ம்ம்ம்ம் :-(
வலிகளை வெளிப்படுத்தும் வரிகள்,அருமை நண்பரே.
ஃஃஃ...நாங்கள் இன்னுமொரு
பிணம் ரசிக்கவா..??
நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு
தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..!ஃஃஃ
சகோதரம் இந்த வரிகளைக் கேட்டாவது யாரும் திருந்த மாட்டார்களா..? ஒரு கவிஞன் படிக்கிறான் எலிக்கறி பொரிப்பதுவோ.. என்கிறான். உன்ர மகனை இங்கு அனுப்பு என்று கேட்டால் அனுப்புவானா..? எங்களை உசுப்பேத்தி அவர்களுக்கு குளிர் காய்ந்து பழகீட்டுது..
//ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும்
காற்றில் எல்லாம் இன்னும்
தீர்ந்து போகாத பிண வாடை ..!
//
கனத்த வரிகள்! அதை விட கனக்கும் நிஜம்.
என்னமோ போங்கள். வரிகள் நண்றாகத்தான் இருக்கின்றன.
ஆனால் என்ன சொல்ல விழைகிறீர்கள்? குழப்பமாக இருக்கிறது. என்ன பண்ணலாம்.?
செத்துப்போனவன் தொலையட்டும்,இருக்கறவன் பிழைப்புவாத சகதியில் அமர்ந்து சுயநலமாய் வாழட்டும் என்கிறீர்களா?
இதை தமிழ்நாட்டுத்தமிழர்கள் சொல்லக்கூடாது. இவர்கள் தான் மொழியுணர்வு , பகுத்தறிவு என்று கிளப்பி விட்டவர்கள்...
இது போன்ற வாதங்களெல்லாம் நம் போன்றவர்களின் சுயநலத்தால் வருவது. நம் போன்றவர்களின் இயலாமை - இயலாமை என்று சொல்வது தவறு. கையாலாகாத் தனத்தால் வருகிற பேச்சுக்கள்.
நெடுநாளாக அரசியல் பேசக்கூடாது என்றே நினைத்தேன். இன்னும் பலரும் இப்படியே இப்படிப் பட்ட போக்கிலே பேசுவதால் எழுத நேரிட்டது. மன்னிக்க .
வார்த்தைகளின் வலியை பிரதிபலித்திருக்கிறீர்கள்..நெஞ்சம் கனக்கிறது
Post a Comment