லபூப் - இ - சகீர் லேகியம் விற்பனையில் புதிய சாதனை !!!

லபூப் - இ - சகீர் லேகியம் விற்பனையில் புதிய சாதனை. ஒரே நாளில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு .

 தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்), ஒரு தமிழக அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாம்ப்கால் நிறுவனம் இதுவரை, ஹேர் ஆயில், பல்பொடி, இறுமல் டானிக் மற்றும் ஜீரணம், அல்சர், மூட்டு வலியைக் குணப்படுத்தும் மூலிகை பவுடர், லேகியம், மருந்து மாத்திரைகள் என்று 7 தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.டாம்ப்கால் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு `லபூப் சகீர்' என்ற ஆண்மையை பெருக்கும் மூலிகை லேகியம் புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில்April மாதம் 08ம் தேதி நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது
உலர்ந்த திராட்சை அதை ஹை - டெம்ப்ரச்சரில் வைத்து மேலும் உலரவைத்து பெளடராக்கி வைத்துக் கொள்கின்றனர் . அதேபோல் பரங்கி சக்கை எனும் மரசக்கைகளை துண்டுகளாக்கி இதையும் நுண்ணிய பெளடராக்கிக் கொள்கின்றனர் . இவைகளுடன் முந்திரி , பாதாம் , பிஸ்தா , வால்நட் , அக்ரூட் ஆகியவைகளையும் சேர்த்து
தூளாக்கி அதில் பன்னீரை சேர்த்து குழைத்து அதனுடன் தேன் , நெய் ஆகியவற்றை சேர்த்து பக்குவமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கி மீண்டும் அதை எந்திரம் மூலம் மிக்ஸிங செய்து பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துக் கொடுக்கின்றனர் . இதுதான் லபூப் - இ - சகீரின் ரகசிய ஃபார்முலா .அரைகிலோ லபூப் - இ - சகீர் லேகியம் வெறும் 125 ரூபாய் தான் . அது சரி ' லபூப் - இ - சகீர் ' என்பது என்ன?தமிழக அரசின் ' டாம் கால் ' நிறுவனம் தயாரித்த ஆண்மைக் குறைவுக்கான லேகியமே அது .லபூப் சகீர்' மூலிகை லேகியத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் 5 முதல் 10 கிராம் வரை பாலுடன் கலந்து குடிக்க வேண்டும். நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் வலுப்பெறும். மலட்டுத்தன்மை நீங்கும் .நேற்று சந்தைக்கு வந்த 1 மணிநேரத்தில் மொத்தமும் , அதாவது முதல் பேட்சில் தயாரித்து அனுப்பிய 300 கிலோ லேகியமும் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் டாம்கால் நிறுவனத்தின் பொதுமேலாளர். அதுமட்டுமல்ல , தங்களின் தேவைக்காக முன்பதிவு செய்துகொள்ள உலகம் முழுவதிலுமிருந்து நேற்று மட்டும் மொத்தம் ஒரே நாளில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் முன் பதிவு செய்ய போட்டி போட்டுக் கொண்டு க்யூவில் இருக்கிறார்கள் எஎன்ற செய்தியை கேட்டபொழுது சற்று வியப்பாககத்தான் இருந்தது .

           நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

4 மறுமொழிகள் to லபூப் - இ - சகீர் லேகியம் விற்பனையில் புதிய சாதனை !!! :

ஸ்ரீராம். said...

வோட்டுப் போட்டுட்டு படித்து ஆச்சர்யப் பட்டேன்

vairam said...

நல்ல தகவல் தொடரட்டும்...

vairam said...

நல்ல தகவல் தொடரட்டும்...

vairam said...

நல்ல தகவல் தொடரட்டும்...