கத்தியில் ஆன்மீகம் !!!

அஞ்சவேண்டாம்! துன்பங்கள் நிறைந்ததுதான் மனிதப்பிறவி. எனவே எதையும் தாங்கிக் கொண்டு வாழ்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளுங்கள். இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் தரும் துன்பங்களை ஏற்றே ஆகவேண்டும். அவதார புருஷர்கள், அருளாளர்கள், துறவிகள் எல்லோருமே துன்பங்களை அனுபவிக்கிறார்கள். யாரும் விதிவிலக்கல்ல. (அன்னை சாரதாதேவி).

ஒரு முறை அமெரிக்கா செல்ல தீர்மானித்த விவேகானந்தர் , அன்னை சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்டார் .
" அறையில் இருக்கும் கத்தியை எடுத்து தா " என்றார் அன்னை ." என்ன இது ?' என்று யோசித்தபடியே , விவேகானந்தரும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் .கத்தியை வாங்கிய அன்னை , " உனக்கு ஆன்மிக போதனை செய்ய தகுதி இருக்கிறது . தாராளமாக அமெரிக்கா சென்று வா !" என்று ஆசிர்வதித்தார் .' அம்மா கத்தி அளித்ததை வைத்து ஆன்மிகதகுதியை எப்படி அறிந்துகொண்டீர்கள் ?' என்று விவேகானந்தர் கேட்டதற்கு அன்னை அளித்த பதில் :" கத்தியின் கூர்மையான பகுதியை உன் கையில் பிடித்துக்கொண்டு , கைப்பிடி பகுதியை என்னிடம் நீட்டினாய்... . இது அடுத்தவருக்கு காயமேற்படக்கூடாது என்று உனக்குள் நிறைந்திருக்கும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகிறது !" என்றார் அன்னை .

நம்மைப் பற்றியே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம் தான் மிகப்பெரிய பாவமாகும். ”நான் தான் முதலில் சாப்பிடவேண்டும், நான் தான் மற்றவர்களைவிட அதிக செல்வம் பெற்றவனாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நானே வைத்திருக்க வேண்டும்” என்றும், மற்றவர்களுக்கு முன்பு நான் தான் சொர்க்கம் போகவேண்டும், மற்றவர்களுக்குக் கிடைப்பதற்கு முன்பு நான் முக்தியை அடைய வேண்டும் என்றும் நினைப்பவன்தான் பாவத்துக்குரிய சுயநலவாதியாவான்.

ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பின்னர் கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.
நமது இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோயும் சேர்ந்து
ஒடிக்கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தையில்லாமல் இருப்பது போன்றவையாகும்.
இந்த நோய்களை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தை உடையவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும். (சுவாமி விவேகானந்தர்)

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க

2 மறுமொழிகள் to கத்தியில் ஆன்மீகம் !!! :

param said...

அருமையான பதிவு சங்கர். ஒவ்வொரு நாளும் என்ன பதிவு இட்டிருக்கிரீகள் என்று பார்த்து விட்டுதான் அடுத்த வேலை எனக்கு.

Sivamjothi said...

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg