யோகி திரைப்படத்தின் கதையில் புதிய பூகம்பம் !!!

இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வெளிவந்த யோகி திரைப்படம் வெற்றிநடைபோடுகிறது. ஆனால் இது ஒரு அயல்நாட்டுப்படமான "TSOTSI " யின் காப்பி என்கிறது உலக சினிமா வட்டாரங்கள் சொல்வது தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தம் தரும் ஒரு செய்தியாக உள்ளது .சரி நண்பர்களே நாம முதலில் "TSOTSI " யின் கதைக்கு வருவோம் .
"TSOTSI " யின் கதை சுருக்கம்   !!!
ஸோட்ஸி அம்மா கொடியவியாதியால் சாகிறாள். அவனுடைய அப்பா அவனை அப்யூஸ் பண்ணுகிறார். சிறுவயதிலேயே டேவிட் அப்பாவிடம் இருந்து தப்பி ஓடி, மற்ற அனாதைக்குழந்தைகளுடன் பெரிய காங்க்ரீட் குழாய்களில் வாழ்கிறான். பிறகு அவன் பெயர் ஸோட்ஸி ஆகிறது. பிறகு அவன் தன் சகாக்களின் (3-4 பேர்) தலைவனாகிறான். தன் சகாக்களில் ஒருவன் திருடும்போது ஒரு கொலை செய்தவுடன் , இவனும் இவ்ன் இன்னொரு நண்பனும் ஒரு சண்டை போடுறாங்க, அதில் அவன் நண்பன் காயமடைகிறான்.

பிறகு ஒரு காரை திருடும்போது ஒரு இளம்பெண்ணை சுட்டுக்கொல்ல முயல்கிறான். அவளை தாக்கிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போகிறான். காரில் அந்த மூன்று மாத கைக்குழந்தை இருக்கிறது. அதையும் கடத்திக்கொண்டு போகிறான் தன் இடத்திற்கு. அந்தப்பெண் அவன் முகஅடையாளத்தை போலிஸிடம் சொல்கிறாள், அதைவைத்து இவன் படம் தினசரியில் வருகின்றது. பிறகு தன்னால் அந்த கைக்குழந்தையை வளர்க்கமுடியாதுனு ஒரு இளம்பெண்ணை மிரட்டி அதை வைத்து குழந்தையை பார்க்கச்சொல்லுகிறான். நண்பர்கள் துரோகியாகிறார்கள். ஒரு நண்பனையே கொல்லுறான். கடைசியில் குழந்தையை திருப்பிக்கொடுக்கிறான். இதுதான் அந்த ஃபாரின் ஸோட்ஸி ("TSOTSI " ) படத்தின் கதை.

இது "பெஸ்ட் ஃபாரின் படம்" ஆஸ்கர் வின்னர் என்பது குறிப்பிடதக்கது.

சரி நண்பர்களே இது ஒருபுறம் இருக்கட்டும் . அடுத்து நம்ம இயக்குநரின் யோகி பட்டத்துக்கு வருவோம்


யோகி – திரை விமர்சனம் !!!

நடிகர்கள் – அமீர், மதுமிதா, சினேகன், சுவாதி, தேவராஜ், வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு .
இசை – யுவன் சங்கர் ராஜா
இயக்கம் – சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – அமீர்

அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். குப்பத்து ரவுடி கதையில் குழந்தை பாசத்தை குழைத்திருக்கிறார்கள்.தந்தையின் கொடுமையால் ரவுடியான ஒருவன், குழந்தை பாசத்தால் எப்படி திருந்துகிறான் என்பதே கிளைமாக்ஸ் கதை.திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன் என சமூகத்தின் எல்லை மீறும் கதாபாத்திரத்தில் அமீர். வழக்கம் போல நண்பர்களுடன் கொள்ளையடித்துவிட்டு வரும் வேளையில், துரத்துகிறது போலீஸ். தப்பிக்கும் ஓட்டத்துக்கிடையே காரை கடத்தும் யோகி, அதற்குள் தத்தளிக்கும் அழகான ஒரு பெண் குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்பு அக்குழந்தையை தன் குடிசையில் வைத்து வளர்க்கிறார். குழந்தைமேல் பாசம் காட்டி ரவுடி தொழிலை விடுகிறார்.பெற்றோரும், போலீசும் குழந்தையை தேடுகின்றனர். ரவுடி கூட்டம் குழந்தையை கொல்ல தேடுகிறது. குழந்தை காப்பாற்றப்பட்டதா? பெற்றோருடன் சேர்ந்ததா? என்பது விறுவிறுப்பான இறுதிக்காட்சி.அமீர் கதாநாயகனாக அரிதாரம் பூசியிருக்கும் படம். ஓடும் பஸ்சில் குடிகாரனின் பணப்பையை பறித்துக்கொண்டு கழுத்தை அறுக்கும் ஆரம்ப காட்சியே, யோகியின் கதாபாத்திரத்தை தீர்மானித்து விடுகிறது. ஓட்டலில் கொள்ளையடித்துவிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை சுடுவது, காரில் தப்பிக்கும் போது, உள்ளிருக்கும் குழந்தை சத்தம் கேட்டதும் பதறுவது என ஒவ்வொரு காட்சியிலும் சும்மா வெளுத்து வாங்கியிருக்கிறார் அமீர். குழந்தையின் அழுகையை நிறுத்த அவர் போடும் ஆட்டம் இருக்கே, சும்மா அசத்திட்டார் போங்க! ஆக்ஷன் காட்சிகளிலும் மெனக்கெட்டிருக்கிறார்.கணவன் கைவிட, குழந்தையுடன் பொம்மை விற்று வாழும் கேரக்டர் மதுமிதாவுக்கு. ஒவ்வொரு முறையும் அமீர், அவரை இடித்துவிட்டுப் போக, பொம்மை கூடை, தண்­ணீர் குடம் எல்லாமும் உடையும் போது குபுக். “இந்த குழந்தை உன்னோடதா, அம்மா செத்து போயிட்டாங்களா?” என்று அப்பாவியாக மதுமிதா கேட்க, “இது என் குழந்தை இல்லை” என்று அமீர் சொல்ல, மதுவின் முகத்தில் தெரியும் அந்த தவிப்பும் பயமும் நச்! அமீருக்கும் அவருக்குமான மௌன காதல் சுகமான கவிதை.மதுரைத் தமிழா, சென்னைத் தமிழா என்ற குழப்பத்தில் வசனம் திணறுகிறது.மதுமிதாவுக்கு வித்தியாசமான வேடம். குழந்தையை முதுகில் சுமந்துவரும் போது அச்சு அசலாக ஆந்திரா வாடை. அவன் இனி தப்பு செய்ய மாட்டாங்கையா என்று அமீருக்காக போலீஸிடம் கெஞ்சி அடி வாங்கும்போது ப‌ரிதாபப்பட வைக்கிறார்.தோளில் புரளும் முடியும், துடிக்கும் கண்களுமாக அமீரின் நண்பராக வந்து அவர் துப்பாக்கியாலேயே உயிர் விடும் ரவுடியாக கவிஞர் சினேகன். சின்ன சின்னதா பண்ணி அலையுறதை விட, பெரிசா பண்ணி செட்டிலாகலாம்னு ஐடியா வச்சிருக்கேன், இந்த குழந்தையை தேடணும் என்று அமீர் வளர்க்கும் குழந்தையின் போட்டோவை காண்பிப்பதும், குழந்தையின் வீட்டுக்கு சென்று, அதை கொல்வேன் என்று தெனாவட்டாக பேசும்போது லோக்கல் ரவுடியாகியிருக்கிறார் சினேகன். இவருடன் வரும் இன்னும் சில ரவுடிகளும் நடிப்பில் நங்கூரம் போட்டிருக்கிறார்கள்.வின்சென்ட் அசோகன் வில்லத்தனத்தில் புது பரிமாணம் காட்டியிருக்கிறார். இன்னொருவன் மூலம் குழந்தை பெற்ற கோடீஸ்வர பெண்ணை பணத்துக்காக திருமணம் செய்து பிறகு அக்குழந்தையை கொல்ல கூலிப்படைகளை ஏவுவது பதற வைக்கிறது. மனைவியிடம் நல்ல கணவனாகவும், குழந்தையை கொல்வதில் வெறிகொண்ட மிருகமாகவும் இருமுகம் காட்டி நடிப்பில் முத்திரை பதிக்கிறார் வின்சென்ட் அசோகன். இறுதிக்காட்சியில் அமீரும், வின்சென்ட் அசோகனும் மோதும் சண்டை அனல்.போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்வண்ணன், குழந்தையை தேடி அழும் ஸ்வாதி, திருநா என்ற ஏரியா தாதா என அனைவரும் கதாபாத்திரத்துக்கேற்ற தேர்வு.அமீரின் சிறுவயது பிளாஷ்பேக் காட்சி கதைக்கு அழுத்தம் பதிக்கிறது. மனைவி, குழந்தைகளை சித்ரவதை செய்யும் கொடூர கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் தேவராஜை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.போட்டோகிராபர் கஞ்சா கருப்பு, “நம்ம அல்டிமேட் ஸ்டாருல்ல, அதான் நம்ம தல அஜித்து, இந்த கேமராவுல வந்துட்டுதான் சினிமா கேமரா முன்னால நின்னாக” என்று விடும் புருடாவில் திரையரங்கமே சிரிப்பொலியில் களைகட்டுகிறது.சிறு வயதில் இறந்த தங்கையை குழந்தை வடிவில் பார்த்து, அமீர் மனம் மாறுவது யதார்த்தம். குழந்தைக்கு மதுமிதாவை மிரட்டி பால் கொடுக்க வைப்பது ரகளை…எல்லாம் சரி தான். ஆனால் குழந்தையை வளர்க்கிறேன் பேர்வழி என்று அமீர் செய்யும் அட்டகாசங்கள் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எந்த நேரத்தில் மூச்சடைக்குமோ என்ற ஐயுற வைக்கிறது, அந்த குழந்தை கிடக்கும் பெட்டியை மூடும்போதெல்லாம். மேலும் குழந்தையை எறும்புகள் கடிப்பது… பாம்பு சுற்றுவது போன்றவை முகம் சுளிக்க வைக்கின்றன. திரைக்கதையில் ஜீவன் இல்லை.யுவனின் இசை கதையோடு பயணிப்பது சிறப்பு. ஆனால் பாடலில் இரண்டே இரண்டு பாடல்கள்தான் தேறுகிறது. ஆர்.பி.குருதேவ் மற்றும் தேவராஜின் ஒளிப்பதிவில், குப்பத்து வாழ்க்கை கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.முதல் பாதியில் வேகமாக செல்லும் கதை அடுத்து சென்டிமென்டுக்குள் சிக்கிக்கொள்வது, ஒரு காட்சி முடிந்ததுமே அடுத்த காட்சியை யூகிக்க முடிவது என சில குறைகள் இருந்தாலும், காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி ஒரு மனிதன் எப்படி குற்றவாளியாகிறான் என்ற அவனது சூழலை யதார்த்தமாகச் சொல்லியிருப்பதால் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா பாராட்டுக்குரியவரே.ஆசிய – ஆப்ரிக்க பிரிவில் யோகி மோதுகிறது. இந்தப் பிரிவில் 25 திரைப்படங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.என்ன நண்பர்களே இந்த வதந்திகள் உண்மை என்று நிரூபிக்கப் பட்டால் ஒருவேளை அதிகமாக வேற்றுமொழி படங்கள் மற்றும் ஆங்கிலப்படங்கள் பார்க்கும் அனைவருமே ஒரு சிறந்த இயக்குநர்கள் ஆகிவிடுவார்கள் என்பது மட்டும் தெளிவான உண்மை .

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க

3 மறுமொழிகள் to யோகி திரைப்படத்தின் கதையில் புதிய பூகம்பம் !!! :

கலையரசன் said...

கொஞ்சம் முன்னாடியே எழுதியிருக்கலாம்! எல்லாரும் எழுதி கழித்ததுதான் தலைவா இது...

கே.பாலமுருகன் said...

பருத்தி வீரன் போன்ற யதார்த்த கலையைத் தமிழுக்குக் கொண்டு வந்த அமீர் இப்படியொரு அபத்தமான நகல் சினிமாவைக் கொடுத்திருப்பது அவருக்கு எதிரான கருத்துகாஇயும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Vasishtar said...

Nalla Erukku