இதயம் ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் இறுதி நாள் இன்று .
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !
கனவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!
ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.
நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!
இனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!
இதுநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.
கல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை.!
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!
நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!
ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் .
இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!
எதிர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.
நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.
நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .
புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க
Tweet |
26 மறுமொழிகள் to 2010 -இதயம் ஒரு வெற்று காகிதம் !!! :
வரும் நாட்களின் நபிக்கை வார்த்தை உங்கள் கவிதை :))
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
அருமையன புகைப்படங்களுடன் பதிவு நன்று.
வாழ்த்துகள்.
நன்றாக இருக்கு கவிதை. எழுத்துப்பிழைகளை தவிர்க்கவும். நல்ல பதிவு. புகைப்படங்கள் அருமை.
நன்றி. உங்கள் உழைப்பு பிரமிப்பாய் இருக்கிறது. வாழ்த்துகள்.
..........இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!........................
நம்பிக்கைக்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையில் அமைத்து இருக்கிறீர்கள் கவிதையின் வரிகளை அற்புதம் !
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
////////// ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும்////////////
அட்டகாசமான புகைப்படங்கள் , அதிரடியான வரிகள் நல்ல இருக்கு வாழ்த்துகள் சங்கர் .
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மாறப்பதர்க்கும்,
புதுவருடத்திர்க்காகன புத்துணர்வு வார்த்தைகள்....அருமையன புகைப்படங்களுடன்
மிகவும் அருமை... அண்ணன்.சங்கர்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என்றும் ப்ரியமுடன் M.MEENU
WoW Really nice photos and vey nice poem.
I wish you a happy new year to all.
அன்பின் சங்கர்
இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
கவிதையும் வாழ்த்துப்படங்களும் அருமை - நன்று நன்று
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.
entha vakiyam arumai
{{{{{{{{{{{{கல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை.!
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!}}}}}}}}}}}}}}}}}}
புது வருடத்தில் இன்னும் பல புதிய விசயங்களை உங்கள் கவிதை வாயிலாக சொல்லி இருக்கீங்க சங்கர் .மிக்க நன்றி
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
நண்பர்கள் ,
சிவாஜி சங்கர் !
butterfly சூரியா !
பிரசாத் !
ஜோதிஜி !
சங்கீதா !
தாமரை !
மீனவன் !
ரோஜ் ரோஜ் !
cheena (சீனா) !
பாரதி !
சாந்தி !
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !
உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .
நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
குறை இருந்தால் என்னிடம் !
நிறை இருந்தால் நண்பர்களிடம் !
என்றும் உங்கள் அன்பிற்கினிய
பனித்துளி சங்கர்
நண்பர்கள் ,
சிவாஜி சங்கர் !
butterfly சூரியா !
பிரசாத் !
ஜோதிஜி !
சங்கீதா !
தாமரை !
மீனவன் !
ரோஜ் ரோஜ் !
cheena (சீனா) !
பாரதி !
சாந்தி !
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பான பல சிந்தனைகளையும் , தவறுகளையும் சுட்டிக்காட்டி என்னை இன்னும் பட்டை தீட்டிய உங்களின் ஊக்குவிப்பிர்கும் ,சிறந்த கருத்துகளுக்கும் நன்றிகள் பல நண்பர்களே !
எப்பொழுதும் இணைந்திருங்கள். இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளில் நனைந்து மகிழ்ச்சிகளையும் , மனத்தின் தோன்றும் சிந்தனைகளையும் மறைவின்றி பரிமாறிகொள்வோம் .
என்றும் உங்கள் அன்பிற்கினிய
பனித்துளி சங்கர்
ஆஹா !
+++++++++ ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.! +++++++++++
வணக்கம் கவிஞர் சங்கர் அவர்களே . உங்களின் கவிதை வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது . தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி . இன்னும் பல சிறப்பான படைப்புகளை உருவாக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....
உங்களின் ரசிகையாய் ,
வாண்மதி
vanmathi111@gmail.com
shankar kavithai manathil ulla soga galai thurathi vedum, i like so much, youngster ku oru booost ma.super super
அசத்தலான புகைப்படங்கள் . சிந்திக்கத் தூண்டும் கவிதை வரிகள் .அனைத்தும் அற்புதம் சங்கர் .......
நண்பர்கள் ,
வான்மதி!
சஜீதா !
ப்ரியா !
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !
உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .
என்றும் உங்கள் அன்பிற்கினிய
பனித்துளி சங்கர்
அத்தனை வரிகளும் படங்களும்
2010 க்கு அழகு சேர்க்கின்றன சங்கர்.வாழ்த்துக்கள்.
உங்களின் கவிதை ஒன்றை குமுதத்தில் படித்தேன் . அற்புதம் .
((((((((((( அவளை பிரிந்த அந்த மூன்று நாட்கள் ))))))))))))) உண்மையில் பத்து நிமிடத்தில் பேசிய உரையாடல்கள் .என்று தலைப்புக்கு கீழ குறிப்பிட்டு இருந்ததை நான் கவிதை முழுதும் படித்து முடித்த பிறகுதான் பார்த்தேன் .
உண்மையில் மிகவும் பிரமிப்பைத் தந்தது . இன்னும் உங்கள் புகழ் உயர வாழ்த்துக்கள் .
இந்த புத்தாண்டு கவிதை அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்விதமாக அமைந்துள்ளது .
சூப்பர் .
தொடரட்டும் உங்கள் பணி .
கவிதைகளும் படங்களும் அருமை நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
உங்களுக்கு இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்....
அழகான கவிதையும் அருமையான புகைப்படங்களும்...
வாழ்த்துக்கள்.....
நம்பிக்கையான வாழ்த்துக்கள் உங்களுக்கும்
வரிகள் அத்தனையும் வலு சேர்க்கின்றன நம்பிக்கைக்கு.
சிறு சிறு எழுத்துப்பிழை சரி செய்துவிடுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்துவருகிறோம்..
இந்த புத்தாண்டிற்கு நல்ல ஊக்கமருந்து உங்கள் கவிதை!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
கவிதை அருமை !!
படங்களும்,கவிதைகளும் மிக அழகு நண்பா.
Post a Comment