பேசும் ஓவியக் கலை ஒரு பார்வை !!!

ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை ஓவியம், சமயத் தொடர்புள்ள, செந்நெறிக்கால அலங்காரங்களோடு கூடிய, காட்சிகளை அப்படியே காட்டும் இயல்பினவாகவே இருந்தன. இதன் பின்னர் பண்பியல் (abstract) மற்றும் கருத்துரு (conceptual) அணுகுமுறைகளில் ஓவியம் வரைவது விருப்பத்துக்கு உரியதாகியது.

ஓவியத்திற்கு உதவும் கருவிகள், அவற்றைக் கொண்டு ஓவியம் வரையும் கலைஞர்கள், ஓவிய நூல்கள், ஓவியக் கலை பற்றிய திறனாய்வு ஆகியவை குறித்து இந்திய வரலாற்று ஆதாரங்களில் பல செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாகக் காவியங்களிலும், சிற்ப நூல்களிலும், புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் இவை காணப் படுகின்றன.

தமிழிலக்கியங்களிலும் வடமொழி நூல்களிலும் ஓவியம் வரைவதற்கு உதவும் கருவிகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றை அறிந்து கொள்ளச் சிற்ப நூல்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஓவியப் பலகையையும், தூரிகை வைக்கப்படும் குடுவைகளையும் ஹர்ஷ சரிதை குறிப்பிடுகின்றது. தமிழிலக்கியத்தில் ஓவியப் பலகை வட்டிகைப் பலகை என்றும் தூரிகை என்பது துகிலிகை என்றும் குறிப்பிடப் படுகின்றன.

ஓவியமோ வேறு எந்தக் கலைவடிவமோ அது சார்ந்த சமூகத்தின் மனப்பாங்கை பிரதிபலிப்பதாக அமைபவை. கவிதை, நாடகம், ஓவியம், சிற்பம் எனப் புராதன வரலாற்றைக் கூறிநிற்கும் கலை வடிவங்கள் அனைத்திலுமே அக்காலகட்டத்தின் சமூக வாழ்வைத் சித்திரிக்கக்கூடியதாக இருக்கின்றதெனினும் இவை ஆண்களால் ஆக்கப்பட்ட, நிலைநிறுத்தப்பட்ட சமூகக் கட்டுமானங்களை ஆண்களே வெளிப்படுத்தியவையாகவே உள்ளன. வாய்மொழியூடாகவும் கைப்பணிப் பொருட்களூடாகவும் தனித்தனியாகவும் வெளிப்படுத்தப்பட்ட பெண்களது குரல்கள் நிலைத்து நிற்கக் கூடிய பொருட்களில் ஆக்கப்படாததாலும் கைப்பணிப் பொருட்களில் பதியப்படாததாலும் ஆணாதிக்க அரசுகளின் பிரதான கலை வெளிப்பாட்டு செயற்பாடுகளில் இணைக்கப்படாமலும் விடப்பட...

ஓவியக்கலையை புரிந்துகொள்ள அணுகும் மாணவனுக்கு போதிக்கப்படும் பாடம் - ஓவியம் என்பது வெங்காயத்தைப் போன்றது - என்பதுதான். உரிக்க உரிக்க பல அர்த்தத்தையும் கொடுக்கவல்லது ஓவியக்கலை.முதல் அர்த்தம் - நம் கண்களுக்குத் தெரியும் ஓவிய வடிவங்கள் நாம் அன்றாடம் பார்க்கும் வஸ்துக்களுடன் ஒப்பிடக் கூடியவை. இந்த நிலையிலிருந்து ஓவியர் உணர்த்தவரும் பிற அர்த்தங்களை புரிந்து கொள்வதற்குச் செல்லமுடியும்.வெளிப்படையாகத் தெரியும் ஓவியங்களில் கூட மறைமுக அர்த்தங்களை வைத்திருப்பர். கலாசார மதிப்பீடுகள் வீழும்போதெல்லாம் மக்களிடம் உண்மையை கொண்டு செல்ல இந்த உத்தியை பல ஓவியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அவை இன்று வரலாற்றுக் காலத்திற்குரியனவாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் கால ஓட்டத்தில் இயற்கையாலோ மனிதராலோ அழிக்கப்படாது இன்றும் எஞ்சியிருக்கும் பண்டைய வரலாற்றைக் கூறிநிற்கும் ஓவிய சிற்பங்களுக்கு இடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் எவ்வாறு நோக்கப்பட்டாள் என்று பார்ப்போமானால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் முதல் நாகரிகங்கள் உருவான காலம் வரையான மனிதகுல வரலாற்றின் சான்றுகளாகப் பெறப்பட்ட குகை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் வளத்திற்குரிய சந்ததிப் பெருக்கத்திற்குரிய குறியீடாகவே பெண் சித்திரிக்கப்படுகிறாள்.

ஆம்ஸ்டர்டாம் நகரிலிருக்கும் ரெம்ப்ராண்ட் ம்யூசியத்தின் ஓவிங்களைத்தான். அங்கேயிருக்கும் பெரும்பாலான 17 ஆம் நூற்றாண்டு ஓவியங்களில் பெண்கள் தடித்த இடைகொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.

எகிப்திய ஓவியங்களைப் பார்த்தால் அவையனைத்தும் அரசனது வாழ்வுக்கும் மறுவாழ்வுக்கும் உதவுவனவாகவும் அவனது புகழ் பாடுவனவாகவும் அமைகின்றன. இதுபோன்ற மெசப்பத்தோமிய சீன நாகரீகங்களாயினும் பின்னர் ஐரோப்பிய நாகரீகத்தின் முன்னோடிகளாகக் கூறப்படும் கிரேக்க ரோமானியக் கலைகளாயினும் அரசனதும் நாயகர்களதும் வாழ்வையும் போரையும் வீரத்தையும் சித்திரிக்கின்றனவேயன்றி தமது ஆளுமையால் வரலாற்றில் தடம் பதித்த பெண்கள், அரசிகள் பற்றிய ஓவியங்களையோ சிற்பங்களையோ கொண்டிருப்பதென்பது அரிதாகவே உள்ளன.சிந்துவெளி நாகரிகத்துக்குரிய மரபிலும் கலைவடிவங்கள் அரசர்களால் செய்விக்கப்பட்டவையே. ஆண் தெய்வங்களதும் புராண நாயகர்களதும் அரசர்களதும் கதையாக இவை அமைய இவர்களின் நாயகிகளாகவும் அலங்காரப் பொருட்களாகவும் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சக்தி வழிபாடு போன்ற வடிவங்கள் தவிர்ந்த ஏனைய பெண் வடிவங்கள் தெய்வங்களாகவோ தேவதைகளாகவோ சித்திரிக்கப்படினும் அவற்றினூடே அக்காலத்து வாழ்க்கை முறை, ஆடை அணிகலன்கள் கட்டடங்கள் போன்றவற்றையும் அறியக்கூடியதாக இருக்கிறது. இவற்றிலும் பெண்கள் அழகுப் பொருட்களாக, அலங்காரப் பிரியைகளாக, தாய்மாராக, ஆணிற்கும், சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

அஜந்தா சிகிரியா ஓவியங்களில் தாயாகவும் அரசர்களின் நாயகிகளாகவும் சித்தரிக்கப்படும் பெண் ஐரோப்பிய மத்தியகால கிறிஸ்தவ ஓவியங்களில் கன்னி மேரியாக கிறிஸ்துவின் தாயாக சித்திரிக்கப்படுகிறாள். . இவ்வாறாக ஒரு காட்சியினுள் பெண் இடம்பெறுவதைத் தவிர வேறுவிதமாகவும் அவள் சித்திரிக்கப்பட்டுள்ளாள். உலகின் எந்தப் பகுதியாயினும் வரலாற்றின் எக்காலப் பகுதியாயினும் பெண்ணை செடி, கொடி, மலர், விலங்கு, பறவை என்பவற்றுடன் ஒன்றாக அலங்காரக் கூறாகப் பாவிக்கும் வளக்கமும் இருந்து வருகிறது.பெண்ணை அலங்காரப் பொருட்களுள் ஒன்றாகப் பார்க்கும் இந்த ஆண் பார்வையின் அடுத்த கட்டமாகவே ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்திற்குரிய பெண் பிரதிமை ஓவியங்களை, பெண்களை சித்திரிக்கும் முறை என்பவற்றைக் கருதலாம். அவர்கள் தமது விருப்பத்திற்குரிய காட்சிகளையும் புராண இதிகாச நாயக நாயகிகளாகவும் தம்மையும் தம் துணைவியரையும் வரைவித்ததுடன் பிரதிமைகளையும் ஆக்குவிக்கின்றனர். மறுமலர்ச்சிக் காலத்தின் பின் ஐரோப்பிய ஓவிய மரபு பல மாற்றங்களைப் பெற்றது. பல பாணிகளாக உருவெடுத்தது.

யசோதா கிருஷ்ணா என்னும் ஓவியம் ஐம்பத்துநான்கு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் அதிகத் தொகைக்கு ஏலம் போன ஓவியம் இதுதான்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோஸி இருபது வருடங்களுக்கு முன் பெர்லின் சுவர் வீழ்ந்த தினத்தின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். சின்ன சுத்தியலால் அந்த சுவரை தொடுவது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் , சில தேதி குழப்பங்களால் அவர் கூறியது பொய்யென நிரூபனம் ஆனது. அந்த தேதியில் அவர் பிரான்ஸில் இருந்தார் என்றும் பெர்லினுக்குச் செல்லவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

புகைப்பட தொழில்நுட்பத்தை உபயோகித்து பெரிய புரட்சி வீரராகவும்,மக்கள் சுதத்திரத்தில் நம்பிக்கை வைப்பராகவும் காட்டிக்கொள்ள விரும்பியிருக்கிறார்.கலையின் திரிபுகளால் அதிகாரத்தையும்,சார்ப்புக்கொள்கையும் நிலைநாட்டுவது இன்றளவும் அரசியலில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஓவியத்தினுள்ளான வர்ணங்கள், உருவங்கள், பரிமாணங்கள் கருப்பொருள் சார்ந்த எல்லாக் கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு நவீனத்துவம் உருவாகிறது.ஓவியம் என்பது உணர்வுகளின் வெளிப்பாடாக அமைவது. உணர்வுகளின் நேரடிக் காட்சிப்படுத்தல்களாகவோ அல்லது வேறுவடிவங்களிலோ கலைஞன் தாம் நினைப்பதை, கற்பனை செய்வதை வெளிப்படுத்துவது இதற்குத் தடையாக இருந்தவையான ஒவ்வொரு ஓவிய மரபு சார் தடைகளையும் நவீன ஓவியம் உடைக்கிறது.நேரடித் சித்திரிப்பாக இல்லாது பாரம்பரியமாக கைப்பணிப் பொருட்களின் பாய்கள் துணிகளோடு பின்னப்பட்ட பெண்ணின் உணர்வுகள் வீட்டின் சுவரிலும் தரையிலும் மட்பாண்டங்களிலும் தீட்டப்பட்ட கோலங்கள் கலை வரலாற்றில் பெண்களால் இயற்றப்பட்டவை என்று பதியப்படாது விடப்படினும் பாரம்பரியமான அந்தக் கலை உணர்வும் திறனும் நவீன ஓவியத்தோடு பெண்களுக்கு பொது ஓவிய உலகிற்கு கிடைத்த வெற்றியுமாக இன்று தம்மை, தமது உணர்வுகளை தமது உலகு பற்றிய பார்வையை வெளிப்படுத்தும் பல பெண் ஓவியர்கள் உலகெங்கும் உருவாகியுள்ளனர். கலை ஒரு தொடர்பு ஊடகம் என்ற வகையில் பெண்ணின் ஆளுமை, பெண் சிந்தனை, பெண்ணின் கற்பனை என்பன இந்த ஓவியர்களோடு பொது மேடைக்கு வருவதன் மூலம் ஓவியம் என்ற ஊடகத்தில் காலம்காலமாக பெண் பற்றி உருவாக்கப்பட்டிருந்த படிமங்கள் உடைக்கப்படுகின்றன. அத்துடன் வரலாற்றை எழுதியவர்களால் விடப்பட்ட பெண்களது கலை வரலாற்றை மீள எழுதும் பணிகளும் உலகின் பல இடங்களிலும் தொடங்கி விட்டன. நாமும் எமது பிரதேசம் சார்ந்த இதேவகையான சிந்தனையை முன்வைப்பது அவசியமாகின்றது.

ஷெல்லி(Shelley) பத்தொன்பதாம்நூற்றாண்டில் எழுதிய ஒசிமாண்டியாஸ் என்ற பாடல் கலையை வரலாற்று பதிவாக முன்னிருத்துகிறது. கி.பி 1270களில் வாழ்ந்த எகிப்திய மகாசக்ரவர்த்தியான இரண்டாம் ராம்செஸ் பற்றி இந்த கவிதையில் வரும் சில வரிகள் :

Tell that its sculptor well those passions read
Which yet survive, stamp'd on these lifeless things,
The hand that mocked them and the heart that fed.

பாலைவனத்திலிருக்கும்சிற்பத்திலிருந்து உயிர்த்தெழும் அழிக்கமுடியாத சக்தியாய் இரண்டாம் ராம்செஸ் பற்றி எழுதுகிறார். இது ஒரு கவித்துவ மிகையுணர்வாக மாறாமல், சரித்திரத்தின் பகுதிகளிலிருந்து படிக்கப்பட்டது போலிருக்க ஒரு காரணம் இருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக கலையை, குறிப்பாக ஓவியக்கலையை, அரசியல் பிரகடனச் சக்தியாக வெற்றிகரமாகப் பயன்படுத்தியது இரண்டாம் ராம்செஸ் என்பதை எல்லா ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்கின்றனர். சிற்பம், ஓவியம் போன்ற கலைகளைப் பயன்படுத்தி ராம்செஸ் ரா கடவுளின் முதல் பிரதினதியாக அறிவித்துக்கொண்டார். ராம்செஸ் ஆட்சியில் எகிப்து மற்றும் அதன் கீழிருந்த நாடுகளில் பல வருடங்களுக்கு ராம்செஸ் ராவின் ஆசி பெருவது போன்ற ஓவியங்களும், சிற்பங்களும் நிறுவப்பட்டன. ராம்செஸ் வாழ்ந்த காலகட்டத்துக்குள்ளாகவே கிட்டத்தட்ட கடவுள் ஸ்தானத்திற்கு எகிப்திய குருமார்கள் உயர்த்திவிட்டனர். பல முறை கூறப்பட்ட பொய் மட்டுமல்ல, பார்த்துப் பழகும் காட்சிகளும் நம்முள் உண்மையென உறைந்துவிடும் போலிருக்கிறது. ராம்செஸைத் பின் ஆண்ட எல்லா அரசர்களும் பல நூற்றாண்டுகளாய் இதைப் பின்பற்றி வந்துள்ளனர். ஓவியம்,சிற்பம்மூலம் மீண்டும் மீண்டும் இதே உண்மை மக்கள் எண்ணங்களில் வேரூன்றிவிட்டது.

ஒருசமூகத்திலிருந்து முளைக்கும் கலை வடிவங்கள் மக்களை கோபப்படுத்த வேண்டும், அதன் வெளிப்பாடுகளைக் கொண்டாட வேண்டும், சுயம்புவாய் சமூகத்தின் முதல் விமர்சகனாகவும் இருக்க வேண்டும், பன்முகம்கொண்ட நடைமுறை வாழ்க்கையின் ஒரு முகத்தையேனும் பிரதிபலிக்க வேண்டும். அப்படிப்பட்ட கலை வடிவங்களே காலத்தால் அழியாமலிருக்கும். கலையின் வெளிப்பாடுகள் அதிகாரத்தின் முன்னகர்வு பாதையைக் காட்ட முடியும். ஏனென்றால்வீரியமில்லாதகலைவடிவங்களுக்கும் செத்த தவளை, பல்லியைரசாயனத்தில் வைத்திருப்பதற்கும் வித்தியாசமில்லை.

M.F.ஹுசைன் ஓவியங்கள்

நம் நாட்டில், இதேபோன்றதொரு எதிர்ப்பலை M.F.ஹுசைன் ஓவியங்களுக்கும் உருவானது. அவர் பாரதமாதாவையும், சீதையையும் ஓவியத்தில் களங்கப்படுத்தியுள்ளார் என்பதே குற்றச்சாட்டு. கஜுராஹோ சிற்பங்களும் இதைப் போல் காமச் சித்திரங்களே என்ற ஹுசைனின் வாதத்தை மதவாதிகள் ஏற்க மறுத்தனர். கஜுராஹோவின் கோவிலுக்கு வெளியே மட்டுமே இப்படிப்பட்ட சிற்பங்களைக் காண முடியும் எனவும், காமத்தை வெளியே வைத்துவிட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும் எனவும் அர்த்தம் கொடுக்கப்பட்டது. இதனாலேயே M.F.ஹுசைனின் ஓவியங்கள் நிராகரிக்கப்பட்டன. மதம், ஐதீகங்கள் கிண்டல் செய்வது சுலபம். இன்றைய காலகட்டத்தில் அவை மிக அபாயகரமான விஷயங்களும் ஆகும். இதற்கான காரணத்தை சமூகத்திலும், நம் மதிப்பீடுகளிலும் தேடிப்பார்க்கலாம்.

இவையனைத்தும் பல நூற்றாண்டுகளாய் நம் சமூகத்தில் நடந்துவரும் அதிகார மறுப்புவாதத்தின் சில துளிகளே. எல்லா காலகட்டத்திலும் கலையை புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. ஜஹாங்கீர் நாமாவின் ஓவியங்களில் வெளிப்படும் உண்மை இப்போது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே. ஜஹாங்கீரின் வித்தியாசமான மனப்போக்கை இது தெளிவுபடுத்தினாலும் - மதகுரு பெண் துறவியுடன் உடலுறவு கொள்வதுபோலவும், தனக்கு தீங்கிழைத்தவர்களை அழித்த கதைகளையும் ஓவியமாக்க இவர் சுதந்திரமாக அனுமதித்தது ஆச்சர்யமே. மதம் கொள்ளும் மதிப்பீடுகள் கலைக்குள், குறிப்பாக முகலாய கையடக்க ஓவியங்களில் வெளிப்படவில்லை என்பது நம் நாட்டின் கலை வரலாற்றில் பதியப்படவேண்டியது அவசியம். இன்றைய காலகட்டங்களில் மதத்துவேஷ அரசியலைக் கையாளும் இயக்கங்களால் சகிப்புத்தன்மை குறைந்துவருகிறது என்றே தோன்றுகிறது.

சமூகம் கலாசாரத்தின் மதிப்பீடுகளை இழந்து கீழ் நிலைக்குப் தாழ்ந்துபோகும்போதெல்லாம் நம்மிடையே மேலோங்கி வரும் கேள்வி - கலையினால் என்ன பயன்? கலையின் சக்தி என்ன?

கலைவெளிப்பாடு மனித இன்பத்திற்காக மட்டும்தானா என்ற கேள்வி எழாத நாளில்லை.நாம் முழு சுரணையுடன் உயிரோடிருப்பதற்கு கலைக்கான தேவையிருக்கிறது.மனிதக்கூட்டம் தழைத்தோங்க கலை தேவைப்படுகிறது.புறஉலகின் உணர்வுகளால் கட்டப்பட்டாலும்,கலையினால் நம் அக உணர்வுகளுக்கு முழு வடிவம் கிடைக்கிறது.

நாம் யார் என்ற ஆதிகேள்விக்கான பதிலின் சிறுபகுதியேனும் கலையில் இருப்பதாகவே தோன்றுகிறது.

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க

4 மறுமொழிகள் to பேசும் ஓவியக் கலை ஒரு பார்வை !!! :

Anonymous said...

ஒவ்வொரு எலுதாள‌ர்களும் தனக்கென்ற ஒரு எழுத்து வகை(style)...கையாள்கிறார்கள்..அந்த வகையில் சங்கரி எழுத்து ஒரு நல்ல எழுத்தாளரின் வகையை சேர்ந்த்தாகப்படுகிறது அவரின் எழுத்து கையாடல்..அவர் சொல்ல‌வ‌ரும் க‌ருத்தை உதாரண‌த்துட‌ன் எடுத்துரைப்ப‌து அருமை..ந‌ல்ல‌ எழுத்தாள‌ரின் வாடை அதிக‌மாக‌வே தெரிகிற‌து..

சமூகம் கலாசாரத்தின் மதிப்பீடுகளை இழந்து கீழ் நிலைக்குப் தாழ்ந்துபோகும்போதெல்லாம் நம்மிடையே மேலோங்கி வரும் கேள்வி - கலையினால் என்ன பயன்? கலையின் சக்தி என்ன?
ந‌ல்ல‌ கேள்வி..ந‌ல்ல‌ சிந்த‌னை...ஆம் இப்ப‌டி நினைக்க‌த்தோன்ற‌த்தான் செய்யும்..இதை வெளிப்ப‌டையாக‌ கூறி இருக்கிறார்..
கலை..அல்லது ஓவியம் அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் உணர்வுகள்/வாழ்க்கைமுறை சமுதாய அமைப்பு போன்றவற்றை உளஅடக்கிய ஒன்றுத்தானே....
கலைவெளிப்பாடு மனித இன்பத்திற்காக மட்டும்தானா என்ற கேள்வி எழாத நாளில்லை.நாம் முழு சுரணையுடன் உயிரோடிருப்பதற்கு கலைக்கான தேவையிருக்கிறது.மனிதக்கூட்டம் தழைத்தோங்க கலை தேவைப்படுகிறது.புறஉலகின் உணர்வுகளால் கட்டப்பட்டாலும்,கலையினால் நம் அக உணர்வுகளுக்கு முழு வடிவம் கிடைக்கிறது.ஆம்..கண்டிப்பாக..
ந‌ல்ல‌ உறை

விஜ‌ய்...

தேவன் மாயம் said...

ஓவியம் பற்றி பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள்!!!மிக நல்ல பதிவு!!

Unknown said...

நல்ல பல செய்திகளை மேலும் மேலும் தருக. மற்றும் ஓர் பணிவான வேண்டுகோள். தற்ப்பொழுது TRB அறிவித்திருக்கும் சிறப்பாசிரியர்கள் ஓவியத் தேர்விற்க்கு தகுந்தபடி சிலபஸ் படி கேள்வி பதில் பகுதியை ஏற்ப்படுத்தி அதனை வெளியிட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் .நன்றி By.K.R. P

Unknown said...

நல்ல பல செய்திகளை மேலும் மேலும் தருக. மற்றும் ஓர் பணிவான வேண்டுகோள். தற்ப்பொழுது TRB அறிவித்திருக்கும் சிறப்பாசிரியர்கள் ஓவியத் தேர்விற்க்கு தகுந்தபடி சிலபஸ் படி கேள்வி பதில் பகுதியை ஏற்ப்படுத்தி அதனை வெளியிட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் .நன்றி By.K.R. P