பொருளாதார நெருக்கடியால் நோபல் பரிசு மறையும் அபாயம் !!!


நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்ப்ரெட் நோபல் என்ற தொழிலதிபர் 1901ம் ஆண்டு இந்த விருதினை உருவாக்கினார். இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட்டாக செய்து ஆண்டுதோறும் பரிசை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார்.


பரிசு தரும் துறைகள் ஒவ்வொன்றின் பெயரிலும் தனி கணக்கு துவங்கி இந்தத் தொகை டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம்தான் பரிசுத் தொகையின் மதிப்பு.நோபல் பரிசு (Nobel Prize) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் ,அரிய சாதனைகள் செய்தவர்கள், உலக அமைதி்க்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் பரிசு ஆகும்.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்த பரிசைப் பெற்றுக் கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப் படாமல் போனது உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த பரிசு அறிவிக்கபடும். நோபல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.


இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்பிரட் நோபல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான பரிசு 1968 ல் சுவிடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.


இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் இப்பரிசு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.


வருடந்தோறும் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று , அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும், சுவிடன்-யில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.பரிசு பெறுவோரின் சொற்பொழிவு , இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம்.அதே டிசம்பர் பத்தாம் நாள் , நோர்வே-யில் உள்ள ஒஸ்லோ நகரில் , அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும்.

அல்பிரேட் நோபல் உயில் எழுதும் சமயத்தில நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டு-பிர தேசமாக இருந்ததால் ,நோர்வேயில் அமைதிக்கான பரிசும்,சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கபடுகின்றன. இந்நிகழ்ச்சியும் , இதனையொட்டி நடைபெறும் விழாக்களும் , சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது .

ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ரூ.7 கோடி பரிசு தொகை (10 மில்லியன் க்ரோனார்) வழங்கப்பட்டு வருகிறது. 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுத் தொகையை மட்டும் ஸ்வீடன் மத்திய வங்கி ஏற்றுக் கொண்டது.


ஆனால் பொருளாதார மாற்றங்கள் காரணமாக நோபல் பரிசு கமிட்டிக்கு வரவேண்டிய வருமானம் குறைந்துவிட்டது.


எனவே இனிவரும் காலங்களில் நோபல் பரிசுத் தொகையைக் குறைத்து வழங்க திட்டமிட்டு உள்ளதாக இந்த கமிட்டி முடிவு செய்துள்ளது.


இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது. நோபல் பரிசு கமிட்டியின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஷால்மர் இதுபற்றிக் கூறுகையில், "பொருளாதார மந்தம் காரணமாக வங்கிகளின் வைப்புகளுக்கு தரப்படும் வட்டி கணிசமாகக் குறைந்துவிட்டது. வெளி ஆதாரங்களின் மூலமும் பெரிய அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


எதிர் காலத்தில் பரிசு தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தவிர்க்க நாங்கள் விரும்பினாலும், நிஜம் இதுதான். எனவே நிலைமை சீராகும் வரை பரிசுத் தொகையை குறைத்து வழங்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.31 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனார் (அந்த நாட்டு கரன்ஸி) தொகையை 100 ஆண்டுகளுக்கு டெபாஸிட் செய்திருந்தார் ஆல்ப்ரெட். 1901-ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த முதலீடு, இன்று 2.8 பில்லியன் குரோனார் அளவு வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


இப்பொழுதாவது பரிசுத் தொகை மட்டும்தான் குறைக்கப்படுகிறது . ஆனால் இனி வரும் காலங்களில் நோபல் பரிசின் நிலை என்னவாகும் என்பது அனைவரின் தீராத கேள்விகளில் ஒன்றாக உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

2 மறுமொழிகள் to பொருளாதார நெருக்கடியால் நோபல் பரிசு மறையும் அபாயம் !!! :

முகமது பாருக் said...

மக்களின் அழிவிற்கு வழிவகுத்த ஆயுதத்தை வித்த காசில் அமைதிக்கு கொடுக்குறாங்களாம் நல்ல நகைசுவை.. மற்ற துறைகளுக்கு கொடுப்பதில் நமக்கு உடன்பாடே..

அழியட்டுமே சங்கர்..யாருக்கும் பாதிப்பில்லை

Neha said...

நோபல் பரிசு என்று ஒன்று இருந்தது என எதிர்காலத்தில் வரும் சந்ததியினர்கள் படிப்பார்கள் போல..அப்படி ஆகிவிடுமோ நிலமை..