பனித்துளி சங்கர் - மழைத்துளிகள்..!! (Panithulishankar-in-Rain-drops)

முட்கள் மட்டுமே பூத்த
என் இதயத்து செடிகளில் எல்லாம்
இன்று மழைத்துளிகள் கொட்ட
மலர்கள் பூக்கிறது !

தேகம் முழுவதும்
மழை துளி ஏந்தி
கால்கள் துள்ளும் சந்தோசம்
மீண்டும் ஒரு தாய் மடி
துயில் போல நீள்கிறது !

கரை உடைக்கும் சந்தோசம் கண்முன்னே சிந்துதே
இதை பார்த்து ரசிக்காத கண்கள்
இனி வேண்டாம் என்று மனம் என்னுதே !

வானமும் பூமியும் கட்டிக் கொண்ட காதலில்
மேகங்கள் முட்டிக் கொள்ள
சத்தத்தோடு வந்து கொட்டிச் சென்றது மழைத்துளிகள்
பூமியை முத்தமிட ....!

ஆயிரம் காதலின் இன்பங்களை
அரைநொடி மழையில் உணர்கிறேன் .
நீ விழுகின்ற அழகில்
உலக அதிசயங்கள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் .
உன் விரல் என் மேனித் தீண்ட
இந்த உயிரும் உனக்கே சமர்ப்பணம் .
என்னில் வந்து விழும் ஒவ்வொரு துளியிலும்
என் துன்பங்கள் எளிதாய் கரைக்கிறேன் . !

புகையிலை சுருட்டு சுவாசித்த தேகம்போல்
இதழ்களின் திறப்புகளில் எல்லாம்
புகையின் வரவேற்புரை !
வண்ணங்கள் படிந்த சுவர்களும் ,
கண்ணீர் சுமந்த கன்னங்களும்
இப்பொழுதெல்லாம் கனவாய் போனது
உனது வருகையால் !

கனவிலா , நினைவிலா நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன் மழையே மரணம் வந்தாலும்
நீதான் அழகு என்பேன் .!..

-நேசமுடன்
பனித்துளி சங்கர் .
* * * * * * *

1 மறுமொழிகள்:

MARI The Great said...

///// முட்கள் மட்டுமே பூத்த என் இதையத்து செடிகளில் எல்லாம்
இன்று மழைத்துளிகள் கொட்ட
மலர்கள் பூக்கிறது ////

அருமையான வரிகள் தல, ஒருமுறை படித்ததும் முழுவதும் திருப்பி எழுதும் வகையில் மனதில் நிலைத்து நின்றது ..!