கடலுக்கு அடியில் காடுகள் - பாகம் 1 (Panithulishankar - In the forest to the sea)

னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். நீண்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று ஒரு தகவல் என்ற பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில மாதங்களாக கவிதைகள் மட்டுமே எழுதி கொண்டிருந்தேன். அதனால் தகவலின் தாகம் குறைந்துவிட்டதோ என்று யாரும் எண்ணிவிட வேண்டாம், உண்மையை சொல்லவேண்டும் என்றால் கவிதை என்றால் சில வரிகளில் எழுத்தாக முடித்து விடலாம் அதே இடத்தில் தகவல் என்றால் அதிக நேரம் செலவாகுமே என்ற ஒரு எண்ணம்தான் என்று பொய் சொல்ல விருப்பம் இல்லை இதை எனது சோம்பேறித் தனம் என்று கூட சிம்பிளாக சொல்லிவிடலாம் . 

சரி..!! நம்மப் பிரச்சனை இது எப்போதும் நடப்பதுதானே..! இது கிடக்கட்டும் இனி நாம் இன்றையத் தகவலுக்குள் செல்வோம்...!! 

பொதுவாக நமது ஒவ்வொரு தகவலுமே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். (அட நாதாரி அதை நாங்க சொல்லவேண்டும் என்று உள் மனசுக்குள் தூள் பட சொர்ணாக்க மாதிரி எல்லாம் குமுறக் கூடாது. ஹி.. ஹி.. ஹி...) சரிங்க எது எப்படியோ இன்று நாம் போகப் போவது காட்ட்டிற்குள்தான். காடு என்றதுமே எல்லோரும் வியப்புடன் பார்ப்பது எனக்குப் புரிகிறது..! என்ன செய்வது, காடா..!!??? அப்படினா..!!!??? என்று வியப்புடன் கேட்கும் அளவிற்கு நமது நாட்டில் காடுகளை எல்லாம் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். 
காடு என்ற இந்த இரண்டு எழுத்து வார்த்தைக்குள் ஒவ்வொரு வீட்டின் சந்தோசமும் இதற்குள் அடங்கி இருக்கிறது என்று சொல்லலாம். அடக் கொடுமையே காட்டிற்குள் எங்கட சந்தோசம் இருக்கும் சிங்கம் புலி சிறுத்தைதாண்டா அடங்கி இருக்கும். பணம் இருந்தால் தான் சந்தோசம் வரும் என்று நம்மில் பலர் எண்ணினால் அதை நமது அறியாமை என்று கூட சொல்லலாம். காடுகள் என்றாலே அதில் மரங்களின் இராச்சியம்தான் முதன்மையானது. நமது நாட்டில் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதிகள் ஆறுகள் இவற்றின் பிறப்பிடமே இந்த காடுகளின் வரம் என்றுதான் சொல்லவேண்டும் . 

ப்படிப்பட்ட இந்த மரங்கள் இல்லையென்றால், நதிகள், ஆறுகள் என்பது எல்லாமே வெறும் கனவாக மாறிப்போய்விடும். அதன்பின், மரத்திற்கும், வருடம் முழுவதும் பருவம் தவறாமல் பெய்யும் மழைக்கும் இருக்கும் பந்தம் ஒரு அழகிய காதல் போன்றது. இதை அறியாது நம்மில் பலர் மரங்களை கொன்று பருவம் தவறாமல் பெய்யும் மழையை நாமே பொய்க்க செய்துவிட்டோம் என்று கூட சொல்லலாம். 
ரங்கள் மனிதனின் குழந்தை பருவம் முதல் அவன் இறுதியாக கல்லறை செல்லும் வரை நம்முடன் ஒன்றாக இணைந்து ஏதோ ஒரு வகையில் இந்த மனித இனத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கின்றது. சரி இந்த தத்துவம் எல்லாம் நமக்கு எதற்கு என்று சொல்லுமுன் நாம் மேட்டருக்கு வருவோம். (ங்கொய்யால நாலு பேரகிராபுக்கு மொக்க போட்டுட்டு இன்னும் மேட்டருக்கு வரலையா..!!??.... ஹி.. ஹி... ஹி.. உங்க மைண்ட் வாய்ஸ்)

ம்மில் பலருக்கு காடுகள் என்றாலே பூமிப் பரப்பின் மேலே நமது கண்களுக்கு தெரிவது போல் படர்ந்து விரிந்து கிடக்கும் காடுகள் பற்றிதான் தெரிந்திருக்கும் அதிலும் உலகின் மிகப்பெரிய காடு எது என்றுக் கேட்டால் கூட உடனே நம்மில் பலருக்கு அமேசான் காடு என்று சொல்லிவிடுவோம். இந்த அமேசான் என்று சொன்னவுடன் இது பற்றி தற்போது வெளிவந்த ஒரு தகவல் பற்றி உங்களுக்கு சொல்லி ஆகவேண்டும். வரும் இரண்டாயிரத்து முப்பதாம் (2030) ஆண்டிற்குள் மனிதர்களாகிய நாம் செய்யும் தீங்குகளால் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமானக் காடுகள் அழிந்துபோகக் கூடும் என்று ஒரு அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது. 
(நன்றி படங்கள்.- கூகுள் தேடுபொறி)
ரி இப்படி காடுகள் என்றதும் நமது ஊர்களின் பக்கத்தில் இருக்கும் அல்லது நாம் சென்ற சுற்றுலாத் தளங்களில் கண்டுகளித்த காடுகள் பற்றித்தான் நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மனிதனால் கற்பனையில் எண்ணிப்பார்க்க இயலாத வகையில் எண்பது ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பரந்து விரிந்த ஒரு மிகப் பிரம்மாண்டமான காடுகள் கடலின் அடியிலும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா...!!!!? 
(தொடரும் பாகம்-2)
நேசமுடன் 
-பனித்துளி சங்கர்-
* * * * * * *

8 மறுமொழிகள் to கடலுக்கு அடியில் காடுகள் - பாகம் 1 (Panithulishankar - In the forest to the sea) :

TERROR-PANDIYAN(VAS) said...

அண்ணே!! என்ன அண்ணே ஏதோ வித்தியாசமான விஷயம் எழுதி இருக்கிங்கன்னு வந்தா அதை பத்தின மேட்டரையே சொல்லாம ஒரு முழு பக்கத்துக்கு மொக்க போட்டு முடிச்சிட்டிங்க.... :)

பனித்துளி சங்கர் said...

ஹி... ஹி... ஹி.. வாங்கண்ணே..!!! விரைவில் சுவாரஸ்யமான வியக்க வைக்கும் தகவல்கள் அடுத்த பாகத்தில்... தங்களது வருகைக்கும் ஆவலுக்கும் நன்றி நண்பரே...!!!

MARI The Great said...

ஹி ஹி ஹி ..,சான்ஸே இல்லை தல..,

மேட்டரையே சொல்லாம ஏழு பாராகிராப் இவ்வளவு சுவாரஸ்யமா யாராலையும் சத்தியமா எழுத முடியாது ..!

அடுத்த பாராகிராபை ச்சே.., பதிவை எதிர்பாத்து ..!

இராஜராஜேஸ்வரி said...

காடுகள் கடலின் அடியிலும் இருக்கிறது
வியக்கவைத்த பகிர்வுகள்..

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

தினேஷ்குமார் said...

அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கோம் .....

ANBUTHIL said...

நம்பவே முடியல புகைப்படங்கள் அருமை அண்ணா

santhosh said...

etho oru thrilling matter solla vanthutu paathiyela vittutingala anna