Tamil SMS Kadi Jokes - சினி கூத்து கடி ஜோக்ஸ் - Panithuli shankar Tamil Kadi Jokes -SMS Jokes-Tamil Mokkai

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஒட்சிசனை உள்வாங்கிக் கொள்கிறது. நோய்எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மூளை அதிகமான சந்தோச ஓர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப்பெற்றுள்ளது.

"நகைச்சுவை" சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் போது உடலில் உள்ள எல்லா நரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மூளைக்குப் போதிய அளவு செந்நீர்(குருதி) செல்லும். இதனால், சோர்வுற்ற மூளை சுறுசுறுப்படைய உடலில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் 'ஒழுங்காக இயங்கு' என்று கட்டளை போடும். அதனால், உடலுறுப்புக்கள் சீராக இயங்க நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே, அடிக்கடி நகைச்சுவை கேட்பதாலும் படிப்பதாலும் உள்ளத்தையும் உடலையும் நோய் அணுகாமல் பேணமுடியும்.தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
மெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??
* * * * *

MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...
* * * * *
தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு.
காதுல பஞ்சு வச்சுக்க...!!
ஏண்டா வைக்கலே'ன்னா?
நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க
வேண்டியது ஆகிடும்!
* * * * *
னக்கு ஏது 50 ரூபாய்?''"
"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''"
பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''எஸ்

* * * * *
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
* * * * *
சரி நண்பர்களே..!! இந்த இறுதியான மொக்கை சிந்தனைப் பற்றி  யோசித்துக்கொண்டே இருங்க அடுத்த நகைச்சுவை பதிவில் சந்திக்கிறேன்.
                                          
                                          நேசத்துடன்,
                                      பனித்துளி சங்கர்.                                                                       
* * * * *

18 மறுமொழிகள் to Tamil SMS Kadi Jokes - சினி கூத்து கடி ஜோக்ஸ் - Panithuli shankar Tamil Kadi Jokes -SMS Jokes-Tamil Mokkai :

Unknown said...

குளிர் காத்து...செம கடி.

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமை. மெஷின் காணாமப் போறது செம.

கிராமத்து காக்கை said...

வாய்விட்டு சிரிக்கும் கமெடி பதிவு அருமை அண்ணே

குணசேகரன்... said...

ஹி..ஹி..ஹி..நல்லாத்தான் இருக்குங்க..

கோகுல் said...

ஆமாங்க நான் பொறந்தப்ப கூட செய்தி போடலங்க

Unknown said...

ஜோக் அனைத்தும் சூப்பர்,அதிலும் மொக்கை சிந்தனை வெயிட்டு......

குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறையும்,பெற்றோர்கள் 15 முறை மட்டுமே சிரிப்பதும் புதிய தகவல்......நன்றி

மாய உலகம் said...

வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைசுவை பகிர்வு நன்றி...சூப்பர் பாஸ்

Palani said...

வாய் விட்டு சிரிக்க மனம் குளிரும்,இலகுவாகும், வாழ்வு இனிக்கும்.

rajamelaiyur said...

நல்ல நகைசுவைகள்

rajamelaiyur said...

என்று என் வலையில்

ராஜ் மெட்ரிக் ஸ்டுடண்ட் பவுண்டேஷன் – ஒரு புதிய புரட்சி

கடம்பவன குயில் said...

நகைச்சுவைகள் நல்ல சுவைகளாய் இருந்தது.

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

சத்யா said...

நகைச்சுவையான நல்ல பதிவு. தொடரட்டும்

Karthikeyan Rajendran said...

அன்பு நண்பரே !!! நான் கூகுல் + மற்றும் பேஸ்புக்கில் புத்திதாக இணைந்துள்ளேன், எனக்கு அதன் ஆப்பரேட்டிங் தெரியவில்லை அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஏதாவது தளங்கள் உள்ளதா ஆம் எனில் அதன் லிங்க் தரவும்

Yazhini said...

ஹிஹிஹி ... ஹாஹஹா....

நல்ல நகைச்சுவை ஷங்கர். மேலும் எதிர்பார்க்கிறோம்.

Anonymous said...

இன்னைக்கு இப்பதான் சிரிக்கிறேன்..அட 12 மணி தாண்டிட்டே..நாளைக்கு கணக்குல ஏத்திக்கிறேன்..சங்கர்..தொடர்ந்து கலக்குங்க...

Unknown said...

mm namma alunga ellathulayum sorp appadingkurathu intha thirudana kanupidikkura machine materla irunthey theriyuthu supper anna ????????

Unknown said...

UNGALIN INDHA SEVAI ENDRUM THODARA AVALUDAN KAATHIRUKIROM..........

SEMA SINTHANAI.....