அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். பொதுவாக நாம் ஒவ்வொருவரும் நமக்குப் பிடித்த ஏதேனும் சிறியப் பொருள்களோ அல்லது விலை உயர்ந்தப் பொருள்களோ எதுவாக இருந்தாலும் வாங்கும்பொழுது அதன் பெயர்களை சற்று உன்னித்துக் கவனிப்பதுண்டு.
அதுபோல்தான் பொருள்களுக்கு பெயர் வைப்பவர்களும் தாங்கள் வியாபாரம் செய்ய விரும்பும் பொருளையோ அல்லது ஏதேனும் தொழில் தொடங்க நினைக்கும் கம்பெனியின் பெயர்களையோ மிகவும் பொறுமையாக ஆராய்ந்து யோசித்து வைப்பது உண்டு.
இப்படி என்னதான் நாம் சில விஷயங்களை மிகவும் கவனத்துடன் யோசித்து பயன்படுத்தினாலும் அதில் ஏதேனும் நமக்குத் தெரியாத சில புதிர்கள் மறைந்திருக்கும் என்பது இன்னும் நம்மில் பலர் அறியாத உண்மை. இதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால்...!!??
இப்படித்தான் ஒரு முறை உலகின் உலகப் புகழ்பெற்ற நோவா கார் நிறுவனம் தயாரித்த புதிய மாடல் கார் ஸ்பானிஷ் நாட்டில் மட்டும் சரியாக விற்கவில்லை. என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது கிடைத்த விடை..
அந்த மாடலின் பெயர். நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் 'இது ஓடாது' என்று அர்த்தமாம். என்ன நண்பர்களே..!! இது போன்று உங்களில் யாரேனும் புதிய பொருள்களுக்கோ அல்லது தங்களின் புதிய தயாரிப்புகளுக்கோ பெயர் வைக்க முற்படும்பொழுது சற்று யோசித்து வைக்கவும்.
* * * * * * *
Tweet |
8 மறுமொழிகள் to குட்டித் தகவல்கள் - ஓடாத நோவா கார் (Nova car-Advertisement Tecnical) :
நல்ல தகவல்........
எனக்குதான் வடை,,,
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
தகவல் அருமை! புதிய டெம்ப்ளேட் சூப்பர் பாஸ்!
நகைச்சுவை கலந்த தகவல்
கலக்குறீங்க..
கலக்குங்கப்பூ கலக்குங்க....!!!
கண்டிப்பா யோசிக்க வேண்டிய விஷயம் இது............
ஆமாங்க எதையுமே யோசிச்சு தாங்க பண்ணனும்... நோவா - noவா.. அட தங்கிலீஸ்ல கூட வராதன்னு தாங்க வருது
கண்டிப்பா யோசிக்க வேண்டிய விஷயம் இது............
Post a Comment