தேகப் பிழை : கவிதைகள் : Love feeling kavithai in tamil + புதன் (23+02+2011)

பார்வை இல்லாத இரவுகளின் நிசப்தத்தில்
தேகங்கள் உரசும் சத்தம் நடு நிசி எங்கும்...
மெல்ல அணைந்துபோனது வெளிச்சம்
அவன் என்னை அணைத்துக்கொள்கையில்...
முடியாது என்பதும் சில நொடிகள்தானோ..!?
முரட்டுக் கரங்களின் தீண்டலில்
முற்றுபுள்ளி எட்டியது அதுவும்...!
அவனின் மோகம் தந்த தாகத்தில்
ஆடைகள் எல்லாம் அனுமதியின்றி
எடுத்துக்கொண்டது விடுமுறை..!
காமம் தீண்டிய மறு நொடி
கறைபட்டுப் போனது  காதல் !..

அவனின் ஞாபகங்களின் சுமைதாங்கி
ஒவ்வொரு நொடியும்
அவனுக்காய் இறக்கத் தொடங்கிவிட்டேன்...!
இனி உன்னைக் காதல் செய்வது
இறந்து போவதிலும் புதிதே..!!


21 மறுமொழிகள் to தேகப் பிழை : கவிதைகள் : Love feeling kavithai in tamil + புதன் (23+02+2011) :

Unknown said...

Nice Boss! :-)

சக்தி கல்வி மையம் said...

உங்கள் கவிதை மனதை ஏதோ செய்யுது நண்பா...அருமை...

உங்களைப்போல் எழுத முயற்சித்திருக்கிறேன்...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

செய்தாலி said...

பனித்துளியில் இருந்து உதிர்ந்த இவ்வரித்துளிகள் உண்மையின் உயிர்த்துளிகள்

வியா (Viyaa) said...

Alagana Kavithai Varigal..Arumai

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காதலின் வலியை படிக்கும் போதே உணர முடிகிறது..

வாழ்த்துகளும்..
வாக்குகளும்..

பனித்துளி சங்கர் said...

வாங்க ஜி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///வேடந்தாங்கல் - கருன் said...
உங்கள் கவிதை மனதை ஏதோ செய்யுது நண்பா...அருமை...

உங்களைப்போல் எழுத முயற்சித்திருக்கிறேன்.../////////வாங்க வேடந்தாங்கல் - கருன்உங்களின் கவிதையி படித்தேன் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

/////அ .செய்யது அலி said...
பனித்துளியில் இருந்து உதிர்ந்த இவ்வரித்துளிகள் உண்மையின் உயிர்த்துளிகள்/////

வாங்க அ .செய்யது அலி உங்களின் வருகைக்கும் , சிறந்தக் கருத்திற்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

///////வியா (Viyaa) said...
Alagana Kavithai Varigal..Arumai
//////

வாங்க வியா எப்படி இருக்கீங்க ~!? நீண்ட நாட்களாக ஆளை காணவில்லையே 1???

பனித்துளி சங்கர் said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
காதலின் வலியை படிக்கும் போதே உணர முடிகிறது..

வாழ்த்துகளும்..
வாக்குகளும்..////

வாங்க கவிதை வீதி # சௌந்தர் உங்களின் அன்பிற்கு நன்றி !

ஸ்ரீராம். said...

சரிதான்....

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

கலக்கிறிங்க பாஸ்
நல்ல ரசனை உள்ள கவிதை

Jana said...

காமம் தீண்டிய மறு நொடி
கறைபட்டுப்போனது காதல்.

Sperub..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கவிதை... ஆழமான கருத்து.

வேங்கை said...

அருமை அருமை

எங்கோ பிழை !!!

வீ.அருண்குமார் said...

பகிர்வுக்கு நன்றி ...

Anonymous said...

கடைசிபத்தி மிகவும் பிடிச்சிருக்கு சங்கர்..

'பரிவை' சே.குமார் said...

Very Nice.

R.Gopi said...

சங்கர் ஜி...

கலக்கல் கவிதை... காதலும், கூடவே காமமும் வழிந்தோடுகிறது...

//தமிழரசி said...
கடைசிபத்தி மிகவும் பிடிச்சிருக்கு சங்கர்.//

ஆஹா... தமிழரசிக்கு பதிவுகள் படிச்சு கமெண்ட் போட கூட நேரமிருக்கா? அட.. பரவாயில்லையே

போளூர் தயாநிதி said...

காதலின் வலியை படிக்கும் போதே உணர முடிகிறது..

SE said...

Jokes super