சரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம். பறவைகள் அதிக வயதை எட்டிய பொழுதோ அல்லது தங்களால் இனி சுயமாக இரை தேடி உயிர் வாழ இயலாது என்ற நிலை ஏற்ப்படும்பொழுதோ, பறவைகள் மேலும் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கோழியை அறுத்து அதன் இரை பையைப் பார்த்தால் அதில் சிறு சிறு கற்களாக பல கற்கள் இருப்பதை பார்க்கலாம். இதற்கு காரணம் நமக்குத் தெரிந்து கோழிகள் இரை என்று நினைத்து கற்களையும் சேர்த்து விழுங்கிவிடுவதாக்கத்தான் இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் கோழிகள் மற்றும் பறவைகள் உணவுடன் சேர்த்து கற்களை தெரிந்தே உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எதற்காக இந்த கோழிகள் மற்றும் பறவை இனத்தில் சில கற்களையும் சேர்த்து விழுங்குகிறது என்ற ஆராய்ந்துப் பார்க்கையில் மிகவும் விசித்திரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆம் நண்பர்களே..! கோழிகள் தாங்கள் உண்ணும் தீனி நன்கு ஜீரணமாவதற்கு சற்று அதிக உறைவுக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிக் கற்களை உணவுடன் சேர்த்து உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த கோழிகள் தான் தங்களின் உணவு ஜீரணத்திற்காக கற்களை உண்கிறது என்றால் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவலை பறவைகளின் ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் என்றால் நம்புவீர்களா 1?. ஆம் நண்பர்களே..! புறா போன்ற சிறியப் பறவைகள் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ள கற்களை உண்ணுவதாக விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விதம் பற்றி பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்படி தெரிவித்து இருக்கிறார்கள்.
உயர்ந்த மரக்கிளையில் வாழும் புறா போன்ற பறவைகள் தங்களின் வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் உயரமான இடத்தில் தங்களின் இருப்பிடத்தை அமைத்து சிறு சிறு கற்களை சேமித்து வைத்துக்கொள்கின்றனவாம். இதற்கு காரணம் பறவைகளின் இளமை முடிந்து முதுமை ஏற்பட்டு, இனி தங்களால் பறந்து சென்று இறை தேட இயலாது என்ற நிலை வரும்பொழுது அந்தக் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி வருகின்றன.
இறுதியில் இரைப்பையில் அதிக கற்கள் சேர்ந்து பாரம் அதிகமான நிலையில் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே பறக்க முயற்சி செய்யாமல் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும், பறவையின் அடிப்படை இயற்பியல் அறிவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
டிஸ்கி.- இப்படியெல்லாம் பறவைகள் தாங்களே கற்களை தின்றுவிட்டு தற்கொலை செய்வது அறிந்துதானோ என்னவோ நம்ம ஊர் நியாயவிலைக் கடைகளில் கல்லைக் கலந்து மக்களை போட்டுத் தள்ளப் பார்க்கிறார்களோ...???!!!! என்னக் கொடுமை சார் இது...!!
என்ன நண்பர்களே..! இன்றைய தகவலும் உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
Tweet |
21 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் : தற்கொலை புறா : Indru oru thagaval Articles of Suicide birds +18 Tuesday (22+02+2011) :
அறிய தகவல்கள் ..
உண்மையிலே ஆச்சரியப்பட வைக்கிறது..
ஒரு வேலை பறவைக்கும் காதல் தோல்வியாக கூட . இருக்கலாம்..
தகவல் அருமை..
ஐ.. நான் முதல் வந்தேன்..
//////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
RARE INFORMATIONS..... BEST OF LUCK
தமிழ் 10 உளவு..????????
புதிய தகவல் அறியத்தந்ததற்கு நன்றி
விசித்திரமான விடயம்
தகவல் அருமை..
ஓகோ.. கவிஞர் இதை;தான் பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்று சொன்னார்போல! வித்தியாசமான தகவல்கள்.
புதுப்புது தகவல்கள், வாழ்த்துக்கள் சார்.
புறா பற்றியாவது கேள்விப் பட்டிருக்கிறேன். கற்கள் நிறைய சாப்பிட்டு விட்டு முடிந்த வரை உயரப் பறந்து 'சட்'டென பறப்பதை நிறுத்தி விடும் என்றும், கற்களின் கனம் காரணமாக வேகமாக தரையில் வந்து விழுந்து இறந்து விடும் என்றும் படித்த நினைவு. கோழி பற்றி கேள்விப் பட்டதில்லை. நியாய விலைக் கடை பற்றி கடைசி வரிகள் ரசிக்க முடிந்தது.
வித்தியாசமான தகவல்..
Unique info about Pigeons. Thanks for sharing, the last lines were really hilarious, but sadly yes. :)
அரிய செய்திகள் நண்பா..
தொடருங்கள்.
இன்றைய தகவல் ரசிக்கமுடியல . மனதை கனக்க வைத்துவிட்டது. மனதை பாரமாக்கிடீங்களே சங்கர்
உண்மையில் ஆச்சரியமான தகவல்கள்!
mmmm ஆச்சர்யமான செய்தி
எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.ஆச்சரியமான தகவல்கள்:
தங்கள் தேடல் முயற்சி பாராட்டுதற்குரியது.
எனது தளத்திற்கு முதல் வாக்களித்த உங்களுக்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
It is useful
It is useful
good information thank u brother
Hai sankar it is differend informatiom thankyou & i am wait other information
Post a Comment