அமெரிக்காவில் காந்தி மாவட்டம் !!!ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு மாவட்டத்துக்கு அந்நாட்டு அரசு மகாத்மா காந்தி பெயரை வைத்துள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு ஹூஸ்டன் பகுதியில் உள்ள மாவட்டத்தின் பெயர் ஹில்கிராப்ட் என்று இருந்தது. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிய நாட்டினர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்.


இந்தப் பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்க அரசிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதிக்கு மகாத்மா காந்தி பெயரிட வேண்டும் என்பதுதான் அது. அதை இப்போது அமெரிக்க அரசு ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


மகாத்மா காந்தியின் 141வது பிறந்த ஆண்டான இப்போது ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி மாவட்டம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹூஸ்டனில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா முன்னிலையில் ஹூஸ்டன் மேயர் அன்னிஸ் பார்க்கர் நேற்று இந்த பெயர் மாற்றத்தை வெளியிட்டார். 90 சதவீதத்துக்கு மேல் இந்தியர்கள் வசிக்கும் இந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது.

அந்த மாவட்டத்துக்கு இப்போது மகாத்மா காந்தி பெயரிட்டதன் மூலம் தங்கள் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதாக இந்திய கலாசார மையம் மகிழ்ச்சி தெரிவித்தது.

நன்றி தினகரன் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........6 மறுமொழிகள் to அமெரிக்காவில் காந்தி மாவட்டம் !!! :

சைவகொத்துப்பரோட்டா said...

மகிழ்ச்சியான விசயம்தான்.

மாதேவி said...

நல்ல செய்தி.

kannanvaruvan said...

மகிழ்ச்சியான் செய்தி சுடச்சுட கொடுத்திருக்கீறீர்கள்..ச‌ந்தோஷப்படவும்/பெருமைப்படவும் வேண்டிய ஒன்று..

are you working in Information Bur....!!!!!

நிலாமதி said...

மகிழ்ச்சியான் செய்தி. ச‌ந்தோஷப்படவும்,பெருமைப்படவும் வேண்டிய ஒன்று..

kavitha said...

migavum inimaiyana thagaval..... ungalin pathivugaluku ennodaiya vaazhthukkal

வெற்றி said...

பெருமைப்பட கூடிய செய்தி நண்பரே !