இதுவரை நாம் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமான கங்கண சூரியகிரகணம் இன்று காலை 11.05 மணிக்குத் தொடங்கியது. இது பகல் 3.15 வரை நீடிக்கும்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் என்றும், அதற்குரிய கண்ணாடிகள் அணிந்து தான் பார்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1901 ஆம் ஆண்டு ஏற்பட்ட கங்கண சூரிய கிரகணத்திற்குப் பிறகு 108 ஆண்டுகளுக்குப் பிறகு கங்கண சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் தென் பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, நாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவின் சில பகுதிகளிலும் இதை தெளிவாகவும், முழுமையாகவும் காண முடியும்.
குறிப்பாக தனுஷ்கோடியில் இதை மிகச் சிறப்பாக காண முடியும். இதுதவிர திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை காண முடியும்.
தமிழகத்தி்ல் இதற்கு முன் கங்கண சூரிய கிரகணம் 1901ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி தமிழ்நாட்டில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து, 108 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தமிழகத்தில் கங்கண சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. சூரியன் முழுவதுமாக மறைக்கப்படுவதே கங்கண சூரிய கிரகணம் ஆகும்.
தமிழகம் தவிர இந்தியாவின் மற்ற பகுதிகளில் கடைசியாக இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம், 1965ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தெரிந்தது என்பது குறிப்பித்தக்கது .
மத்திய ஆப்பிரிக்கா பகதியில்தான் காலை 10.44 மணிக்கு முதலில் கிரகணம் துவங்கும். சீனாவில் உள்ள மஞ்கள் கடல் பகுதியில் கிரகணம் முடிவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது ..
இன்றைய கிரகணம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை தெரியும். கடந்த 3,000 ஆண்டுகளில் மிக அதிக நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம் இதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் .
தென் தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரிவது போல, இலங்கை, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் சில பகுதிகளிலும் தொடங்கியது
பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் சந்திரன், பூமியின் அருகே வரும்போது நிகழும் சூரிய கிரகணத்தின்போது சூரியன் முழுவதுமாக மறைந்துவிடும். பூமியிலிருந்து தொலைவில் சந்திரன் இருக்கும்போது இந்த கிரகணம் ஏற்படுவதால், சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் .
இதனால் முழு சூரிய கிரகணம் ஏற்படும் சமயத்தில் சந்திரனைச் சுற்றி சூரிய வளையம் தெரியும். இதனைத்தான் கங்கண சூரிய கிரகணம் என்று குறிப்பிடுகிறோம்.
சூரிய கிரகணத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்த பிறகு கோவில்கள் திறக்கப்படும். பின்னர், பரிகார பூஜைகள் நடத்திய பிறகு சாமி தரிசனத்துக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அடுத்த கங்கண சூரியகிரகணம் இந்த அதிசயம் மீண்டும் நிகழ்வதற்கும் அதை நாம் காண்பதற்கும் இன்னும் 09 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது அடுத்த கங்கண சூரியகிரகணம் .2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நிகழவுள்ளது .
மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ்ல குத்தவும் ..........
Tweet |
4 மறுமொழிகள் to 108 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த அதிசயம் கங்கண சூரிய கிரகணம் !!!! :
அன்பின் சங்கர்
தகவல் ப்கிர்வினிற்கு நன்றி சங்கர்
நல்வாழ்த்துகள் சங்கர்
தகவல் பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துகள் சங்கர்
பகிர்வுக்கு நன்றிங்க..
Post a Comment