இதோ இதோ பொங்கல் திருவிழா !!!

 இதோ இதோ தைமாச பல்லாக்கில்
வருகிறது பொங்கல் திருவிழா
 தெருக்களே வாசல்களே சற்று
குப்பைகளை எல்லாம் ஒளித்து
நீராடி விடியலுக்காக காத்திருங்கள்

இதோ வண்ணங்கள் நிறைந்த
கோலங்கள் இதழ் பதிக்க

உங்களை நோக்கி வரப்போகிறது
இன்னும் சில மணித்துளிகளில் .


வறுமையின் துடிப்பிலும் ,
மகிழ்ச்சியின் வெடிப்பிலும் ,
விதைப்பின் களைப்பிலும் ,
 
அறுவடையின் ஆனந்தத்திலும்
நன்றி மறக்காத என்

தமிழினத்தின் பிறந்தநாள் இன்று
சுவர்களே இளமை தீர்ந்த
உங்கள் ஆடைகளின் வண்ணங்களுக்கு
எல்லாம் இனி விடுமுறை .
இதோ இளமை பொங்கும்
புது வண்ண ஆடைகள் உடுத்திக்கொள்ளுங்கள் .!
 உழவனின் நண்பர்களே வாருங்கள்
இன்று உங்கள் உறவுகளை எல்லாம்
ஒன்றாய் இணைக்கப்போகும் தித்திக்கும் திருவிழா
இதோ வந்துகொண்டு இருக்கிறது உங்களை நோக்கி !
நீங்கள் பரிமாறப்போகும் அன்பை பார்த்தால்
ஒருவேளை ஏற்றத்தாழ்வுகள் என்ற
வார்த்தைகள் கூட தற்கொலை செய்துகொள்ளலாம்..!
புதுப் பொங்கல் பானைகளே
இன்னும் சற்று நேரம் பொருத்து இருங்கள்
உங்கள் இதழ்களில் ஆனந்தத் தேன்
குரும் பொழுதெல்லாம் எங்கள்
உள்ளங்கள் பொங்கி வழியப்போகிறது .
இதோ அதற்காக மணிமுட்களும் ,
நிமிட முட்களும் நொடிப்பொழுதை நோக்கி
விரைவாக பயணித்துக்கொண்டு இருக்கின்றன .!
எங்கள் வாழ்விற்கு வசந்தம் சேர்த்த
வயல்களின் காற்றே வாருங்கள் எங்கள்
உழவர்கள் சிந்திய வியர்வை துளிகளுக்கு
மகுடம் சூட்டி மகிழ்ந்தவர்கள் நீங்கள்தான் .
இந்த விழாவிற்கு நீங்கள்தான் சிறப்புவிருந்தினர்
வந்து சிறப்பித்து தாருங்கள் விழாவை .!
பூமித் தாயே பெருமிதம்கொள்
ஆயிரம் விதைதான் விதைத்தோம்
ஆனால் நீயோ ஆயிரம்பேர்
உண்ண உணவு கொடுக்கிறாய் .
எங்கள் அறிவியல் உலகம்கூட
இன்னும் இந்த விந்தையின்
வியப்பிலிருந்து மீளாமல்தான் உள்ளது .!
பண்பட்ட கலாச்சாரத்தின்
விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த
விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை
இதோ இதோ வந்துவிட்டது தை .!
வாருங்கள் இந்த இனிய திருநாளில்
புரிதலின் உறவுகள் கொண்டு
பிரிந்த இதயங்களை ஒன்றாய் இணைத்து ஆழ உழுது
இறந்த இதயங்களில் புது சோலைகள் அமைப்போம் .
பணம் என்னும் காகிதம் மணம் என்னும்
மகுட்த்தின் வேற்றுமை அறிந்து
ஆதிப்பிறப்பிடம் களிமண் கொண்டு
மனிதன் உயிர்க்கொடுத்த மண்பானைகள்
திங்கள் பார்த்து பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .
அன்பின் உறவுகள் அனைவருக்கும்,
                என் இதயம் கனிந்த
" பொங்கல் நல் வாழ்த்துக்கள்.".
மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ்ல குத்தவும் ..........8 மறுமொழிகள் to இதோ இதோ பொங்கல் திருவிழா !!! :

Anonymous said...

தமிழ் புத்தாண்டு , நாளை இல்லை .. சித்திரை ஒன்று தான் . விளக்கத்துக்கு இந்த சுட்டியை பாருங்கள்
http://mohanacharal.blogspot.com/2009/01/blog-post_21.html

cheena (சீனா) said...

அன்பின் ஷங்கர்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

படங்கள் அருமை - வாழ்த்துகள் அருமை

goma said...

அருமையான பொங்கல் வாழ்த்து
நன்றி .
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

பண்பட்ட கலாச்சாரத்தின்
விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த
விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை
இதோ இதோ வந்துவிட்டது தை .!


அருமை நண்பரே..
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்!!

வெற்றி said...

//வறுமையின் துடிப்பிலும் ,
மகிழ்ச்சியின் வெடிப்பிலும் ,
விதைப்பின் களைப்பிலும் ,
அறுவடையின் ஆனந்தத்திலும்
நன்றி மறக்காத என்
தமிழினத்தின் பிறந்தநாள் இன்று//


அருமையான வரிகள் சங்கர்..

நிலாமதி said...

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்......

butterfly Surya said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

butterfly Surya said...

Suggestion: Plz remove un wanted Gadget. Very difficult to open your page at times.