நகைச்சுவை மருத்துவம் ஜோக்ஸ் காமெடி : Tamil kadi jokes video dirty jokes nagaichuvai sms cinima comedy mokkai jokes panithuli sangar +18 (20+04+2011)

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு... என்றான் தமிழ் மூதறிஞன். அழகின் சிரிப்பு என்றான் பாரதிதாசன்.என்னதான் மனிதர்களாகிய நம் தேகத்தை அழகாய் காட்ட தங்கம் ,வெள்ளி ,வைரம் ,என்று அணிந்துகொன்டாலும் புன்னகை என்ற புதுமை நம் இதழ்களில் இல்லை என்றால் அங்கு அழகு என்பது கேள்விக் குறிதான் !.

Panithuli shankar jokes comedy nagaichuvai
 துவரை ஆராயப்பட்ட மனிதன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் மிகவும் வினோத்தின் உச்சகட்டப்  பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்த சிரிப்புதான் என்று சொல்கிறது விஞ்ஞானம் . ஒரு சராசரி மனிதனின் வெற்றியைவிட எப்பொழுதும் புன்னகையுடன் செயல்படும் மனிதனின் வெற்றி வாய்ப்புகள் அந்த சராசரி மனிதனில் இருந்து எழுபது  சதவீதம் வேறுபட்டு இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்  . இயன்றவரை எப்பொழுதும் புன்னகையுடன் பேசுங்கள் . நாம் பிறருடன் உரையாடும்போழுது  வார்த்தைகளுடன் இணைந்து நமது இதழ்களில் கசியும் புன்னகை மட்டுமே நம்மை மற்றவர்களின் பார்வைகளுக்கு அழகாய் காட்டும் அற்புத சக்திகொண்டது . சரி நண்பர்களே அந்த வகையில் இன்றைய நமது நகைச்சுவை  பகுதியில் உங்களை மகிழ்விக்கும் சில நகைச்சுவை துணுக்குகளைப் பார்க்கலாம் .


ஆசிரியர் : தானத்தில் பெரிய தானம் எதுடா ?'
மாணவன் : 'மைதானம் சார் !'


கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்


பழமொழி: கேட்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்லுவானாம்.


நபர் 1  :சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
நபர் 2 : அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.


நபர் 1  :என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
நபர் 2  :எப்படிச் சொல்றே
நபர் 1  பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.


நபர் 1  :இப்ப பாத்ரூம் போனாரே அவர் எப்படி வருவார்?
நபர் 2  :அவர் ரஜினி ரசிகர் எப்ப வருவார் எப்படி வருவார்னு அவருக்கே தெரியாது.
நபர் 1  :என்னங்க இது பாத்ரூம் கூரையை பிரிட்சிட்டு வர்றாரு?
நபர் 2  :அவர் ரஜினி ரசிகர்ன்னு சொன்னேனே, அவர் வழி தனி வழியாகத்த ரன் இருக்கும்.


நபர் 1  :என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சு
நபர் 2  :ஏன்?
நபர் 1  :எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா


"டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள்னால சக்கரை வியாதியே குணமாயிடுச்சு!"
"நான் கொடுத்த மாத்திரைகள்ல எது சக்கரை வியாதிய குணப்படுத்திச்சின்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா சௌரியமா இருக்கும்!"


நபர் 1  :சாதாரண ஜுரம் தலைவலின்னு போனா 40 பக்க நோட்டுல மருந்து எழுதி தர்றார் அந்த டாக்டர்!
நபர் 2  :"சில டாக்டர்கள் அப்படித்தான்!"
நபர் 1  :"அட! அது இன்னிக்கு ஒரு நாளைக்குத்தானாம், நாளைக்கு நீடிச்சா ஒரு குயர் நோட்டுதான்னு சொல்லிட்டார்."


"என்ன டாக்டர் மருந்துச் சீட்டில ஸ்டெதஸ்கோப்-1 சிரிஞ்சு 2-ன்னு எழுதியிருக்கீங்க?"
"அதெல்லாம் இல்லாம உனக்கு எப்படிப்பா பரிசோதனை செய்து ஊசி போட முடியும்? மொதல்ல அதையெல்லாம் வாங்கிட்டு வா!"


மனைவி :  "ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
கணவர் : "அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட."இன்றைய மொக்கை தத்துவம்

இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.


இன்றைய நகைச்சுவை குறும்படம் Tamil short film Comedy

25 மறுமொழிகள் to நகைச்சுவை மருத்துவம் ஜோக்ஸ் காமெடி : Tamil kadi jokes video dirty jokes nagaichuvai sms cinima comedy mokkai jokes panithuli sangar +18 (20+04+2011) :

Unknown said...

திப்பு சுல்தான் சேர் - செம்ம! :-)

பாட்டு ரசிகன் said...

ரசிக்கும் படி இருந்தது சங்கர்...

கோடையில் நகைச்சுவை இதமாக இருக்கும்தானே...

rajamelaiyur said...

super jokes...

rajamelaiyur said...

நகைச்சுவை super.........
ha...ha...ha

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா...அந்த வீடியோ சூப்பர்... ஜோக்ஸ் பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

But the video is from a Charlie Chaplin movie.

Praveenkumar said...

அனைத்து நகைச்சுவை துனுக்குகளும் மிக அருமை.. தல..!! வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ஹி..ஹி..ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அந்த வீடியோ கிளிப் செம காமெடி சிரிச்சிட்டே இருக்கேன் ஹா ஹா ஹா ஹா...

Praveenkumar said...

இன்றைய மொக்கைத்தத்துவமும் செம கலக்கல்..!!! ஹி..ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

மேலே சொன்ன காமெடிகளும் புதுமையா இருக்கு சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம், இன்ட்லி ஓட்டும் போட்டாச்சி ஹே ஹே ஹே ஹே ஹே வர்ட்டா...

Praveenkumar said...

ஹா ஹா ஹா ஹா அந்த நகைச்சுவை வீடியோ கிளிப் செம காமெடி ஹி..ஹி..ஹி.... அதை பார்த்து நானும் சிரிச்சிட்டே இருக்கேன் ஹா ஹா ஹா ஹா...

பொ.முருகன் said...

நோயாளி : டாக்டர் நீங்க எழுதி கொடுத்தத சப்பிட்டப்பிறகும் நோய் குணமாகலை.

டாக்டர் : அப்படியா எங்க காட்டுங்க அந்த மருந்துசீட்ட.

நோயாளி : அதான் சொன்னேனே, எழுதி கொடுத்தத சாபிட்டேன்னு

பணக்காரர் : சென்னைக்கு ரயில் ஏறும் போது மேலசட்டை,இடுப்புல வேட்டி இதத் தவிர எதுவும் என்கிட்டே இல்ல.

நண்பர் : அப்படியா !!!!!!

பணக்காரர் : ஆமாம் இங்க வந்து இறங்கி முதல் வேலையா பனியன்,ஜட்டி வாங்கிப் போட்டுக்கிட்டேன்.

உணவு உலகம் said...

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு. சூப்பர் ஜோக்ஸ். பகிர்விற்கு நன்றி. சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

உணவு உலகம் said...

சூப்பர் ஜோக்ஸ். பகிர்விற்கு நன்றி. சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது,
இன்று உணவு உலகத்தில் --
http://unavuulagam.blogspot.com/2011/04/blog-post_20.html#more
பாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான நகைச்சுவைத் துணுக்குகளுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

காமெடி எல்லாம் நல்லா இருந்தது

www.eraaedwin.com said...

அருமை

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் பக்கம்

middleclassmadhavi said...

:-))

ஸ்ரீராம். said...

தானத்தில் சிறந்தது மைதானம்....மை தானம்...கொஞ்சம் தலைக்கனமா இல்லை...?ஹி ஹி ஜோக்குதாங்க...

Unknown said...

ஆபிஸில் பாம்பு ஜோக் சூப்பருங்க... மிக ரசித்தேன்.

Unknown said...

Super

Unknown said...

Suppar