வாஸ்கோடகாமாவும் மெரினாக் கடற்கரையும் :Idru oru thagaval vascodagama With merina beach +18 ( 12+04+2011)

னைவருக்கும் வணக்கம் .நம்மில் பலருக்கு எப்பொழுதும் மறந்து போகாமல் சில நிகழ்வுகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கக் கூடும். அதில் பலருக்கு சோகமானதாக இருக்கலாம். இன்னும் பலருக்கு மிகவும் சந்தோசமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் எப்பொழுதும் மறந்து போகாத நிகழ்வு என்றதுமே அதற்குள் பல ஆர்வத்தை அதிகரிக்கும் சம்பவங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

ன்று உலகத்தில் இந்தியா என்றதுமே அனைவரும் திரும்பிப் பார்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழகம் என்றதும் அனைவரின் இதழ்களிலும் முந்திக்கொள்ளும் ஒரே நகரம் சென்னை என்றும் சொல்லலாம். சென்னை என்றதுமே அனைவரின் எண்ணங்களிலும் இனிக்கும் ஒரே இடம் மெரினாக் கடற்கரை என்றுதான் சொல்லவேண்டும். சென்னையில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது மெரினா கடற்கரை. இதன் நீளம் 12 கிலோ மீட்டர். தமிழகத்தின் முதல் முகவரி பல அரிய சிறப்புகளைக் கொண்டு பரபரப்பாகத் திகழும் ஒரு அழகிய நினைவு சின்னம்.

  தினமும் பல ஆயிரம் காதலர்கள் வந்து செல்லும் ஒரு அழகிய உலகம். அதுமட்டுமல்லாது இந்த மெரினாக் கடற்கரை உலகத்தின் மிகப்பெரிய கடற்கரைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது மேலும், இக்கடற்கரை தென் இந்தியாவின் கலாச்சார நுழைவாயில் என்ற பெருமையும் இந்தக் கடற்கரைக்கே உரிய ஒரு தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது. இந்த மெரினாக் கடற்கரைக்கும் வாஸ்கோடகாமாவிற்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு உண்டு என்று சொன்னால் நம்புவீர்களா !????
 ம் நண்பர்களே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை மனிதனால் அறியப்பட்ட கண்டங்கள் ஆறுதான். பூமியின் தென்கோடியில் ஏழாவதாக ஒரு கண்டம் அண்டார்டிகா இருக்கிறது என்ற எண்ணம் வலுப்பெற்றதும், அதனைக் கண்டறிய பல நாடுகளும் முனைப்புடன் இறங்கின. அப்போது பிரிட்டனின் ராயல் ஜியோகிரபிகல் சொசைட்டி, டிஸ்கவரி என்ற கப்பலை அண்டார்டிகாவுக்கு அனுப்புவதற்காக மேற்கண்ட விளம்பரத்தைக் கொடுத்திருந்தது. விளம்பரத்தைப் பார்த்து மிரண்டவர்களே அதிகம். இருந்தும் நம்பர் 4, பர்லிங்டன் தெருவில் பலரும் வந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பயணத்துக்கு விண்ணப்பிக்க!

 இப்படித்தான் ஒரு முறை கி . பி  1500 - ல் இந்தியாவிற்கு செல்லக் கூடிய கடல் வெளிப் பாதையை முதன் முதலில் கண்டுபிடித்த வாஸ்கோடகாமா இந்தியாவிற்குள் சென்று இன்னும் பல அரிய இடங்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எட்டு போர்ச்சுக்கீசிய பாதிரியார்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு இந்தியாவை நோக்கி பயணிக்கத் தொடங்கினாராம். ஒரு வழியாக எட்டு மாதகாலப் பயணத்திற்குப் பிறகு இந்தியாவின் கோவா வழியாக கோழிக்கோடு என்னும் இடத்தை வந்தடைந்தார்களாம். அப்பொழுது அவர்களுடன் வந்த எட்டுப் பாதிரியார்கள மூன்று பேர் முகம் தெரியாத சிலரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பயத்தில் உறைந்த வாஸ்கோடகாமா வேறு வழியின்றி உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் மீதம் இருந்த ஐந்து பாதிரியார்களை அழைத்துக்கொண்டு கடல் வழியாக தப்பிக்க முயற்சித்தப் பொழுது ஒரு அதிபயங்கரமான புயலில் சிக்கி திரும்பி செல்லும் வழி தெரியாத இடத்தில் தள்ளப்பட்டனர்.

ச்சத்திலும் குழப்பத்திலும் செய்வதறியாது வாஸ்கோடகாமாவுடன் வந்த பாதிரியார்கள் மேரி மாதாவின் பெயர் சொல்லி பிரார்த்தனைகள் செய்யத் தொடங்கினார்களாம். சிறிது நேரத்தில் அதிசயமாக அதிக தூரத்தில் ஒரு சிறிய வெளிச்சம் ஒன்று தெரிய ஆரம்பித்ததாம். அதைப் பார்த்த வாஸ்கோடகாம தான் வந்தக் கப்பலை அந்த வெளிச்சத்தை நோக்கி செலுத்தத் தொடங்கினார் இறுதியாக அந்த வெளிச்சம் முடிவுற்று ஒரு கரையின் அருகில் சென்று முடிந்தது. அப்பொழுது அவர்கள் இறங்கி வாஸ்கோடகாமா கால் வைத்த அந்தக் கடற் கரைதான் இன்று சென்னையின் சிறந்த முகவரிகளில் ஒன்றாக விளங்கும் மெரினாக் கடற்கரை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
த்துடன் நிற்கவில்லை இந்தப் பயணம் அவர்களுக்கு வழிகாட்டிய அந்த சிறு ஒளி மெரினாக் கடற்கரையுடன் நின்று போகவில்லை அதையும் தாண்டி தொடரத் தொடங்கியது அது எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வாஸ்கோடகாமாவும் அவருடன் வந்த பிற பாதிரியார்களும் தொடரத் தொடங்கினர். அப்பொழுது அந்த ஒளி சிறிது சிறிதாக குறையத் தொடங்கி அருகில் ஒரு காட்டுப்பகுதியின் இடையே மறைந்துபோனதாம். இந்த அதிசயத்தை பார்த்து வியந்த வாஸ்கோடகாமாவும் அந்த பாதிரியார்களும் அதேக் காட்டுப் பகுதியில் ஒரு பெரிய மாதாக் கோவிலையும் கட்டி முடித்தார்களாம் அன்று அவர்கள் மாதக் கோவிலைக் கட்டிய அந்தக் காடுதான் இன்றைய மயிலாப்பூரில் இருக்கும் ”லாஸ்” என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கி . பி  1516 - ல்  கட்டி முடித்த அந்த மேரி மாதா ஆலயத்திற்கு '”நோஸா செஞோரா தெ லூஸ்” என்று பெயரிட்டார்களாம். இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் லூஸ் என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் வெளிச்சம் என்று பொருளாம். அதைத்தான் தங்களுக்கு வெளிச்சம் தந்த மேரி மாதாவே என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள் அன்று அதுவே காலத்தின் ஓட்டத்தில் மருவி லாஸ் என்று ஆனதாம். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்கள் அங்கேயே காலங்காலமாய் வசிக்கும் எத்தனை சென்னை வாசிகளுக்கு தெரியும் என்று தெரியவில்லை.
 
ரி..!! எது எப்படியோ இன்று அனைவரும் சென்னையின் இரண்டு புகழ் பெற்ற இடங்களின் சிறப்புகள் பற்றி இந்தத் தகவலின் வாயிலாக அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்..!! இதுபோன்ற ஒரு அரியத் தகவலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே..!! மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
 
 

12 மறுமொழிகள் to வாஸ்கோடகாமாவும் மெரினாக் கடற்கரையும் :Idru oru thagaval vascodagama With merina beach +18 ( 12+04+2011) :

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல, எழுத்து சைஸ கொஞ்சம் பெருப்பியுங்க! கண்ணு குத்துது!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தோழரே தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மாதா கோயிலும் சாந்தோம் கதீட்ரல் மாதா கோயிலும் ஒன்றா ?

MANO நாஞ்சில் மனோ said...

நான் அறிந்திராத தகவல்...!!!!
அசத்திட்டேயலேய் மக்கா சூப்பர்...

Unknown said...

நல்ல தகவல் தொகுப்பு... பகிர்வுக்கு நன்றி..

Jerry Eshananda said...

Awesome......you are a dedicated blogger.congrats...keep going man.

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா.. உலவுக்கு நிந்தனை செய்வோம் என்பது உங்கள் சிந்தனையா? ஹா ஹா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல தகவல்... நன்றி..

VaishVijay said...

தகவலை சுவாரஸ்யமாக தரும் விதம் மிக அருமை!

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

anee said...

இத்தகவலை நம்ப முடியவில்லை.... எங்கிருந்து இந்த தகவலை பெற்றீர்கள்....

anee said...

வாஸ்கோடகாம கோழிக்கோட்டிலேயே இறங்கியதாகதான் வரலாறு சொல்கிறது..... மேலும் தன்னை எதிர்த்த மக்களின் காதுகளை வெட்டியதாகவும் படித்திருக்கிறேன்....

anee said...

என்னுடைய முந்தைய கமேன்ட்டுகளுக்கு உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்கிறேன்......