ரிலாக்ஸ் சினி மினி நகைச்சுவை சிரிப்புகள் ;Panithuli shankar ஜோக்ஸ் காமெடி மொக்கை +18 (28+04+2011)

ண்பர்களுக்கும் வணக்கம் . மீண்டும் உங்கள் அனைவரையும் சிரிக்கலாம் வாங்க என்ற பகுதியில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதழ்கள் பேசி உள்ளங்கள் சிரித்த காலம் மாறி இன்று கம்பியூட்டரில் நம்மை தொலைத்து உலகம் மறந்த நிலைக்கு வீழ்ந்துவிட்டது மனித இனம்.  இதில் நகைச்சுவை சிரிப்பு ஜோக்ஸ் என்று வார்த்தைகளில் மட்டுமே உச்சரித்து எதற்கு நேரத்தை வீணாக்கிக் கொண்டு என்று சலித்த முகத்துடன் எங்கு பார்த்தாலும் வாடகை முகங்கள் பொருத்திய மனிதர்களின் கூட்டம். எதற்காக சிரிக்கவேண்டும் அப்படி சிரிப்பதனால் நமது வருமானம் கூடிவிடுமா..!? இல்லை வறுமைதான் மாறிவிடுமா..!? என்று அடுக்கு மொழியில்  கடுப்பாக வார்த்தைகள் வீசுபவர்கள் நம்மில் பலர் உண்டு. சரி இந்த சிரிப்பு அப்படி என்னதான் மனிதனுக்கு உதவுகிறது. புன்னகை என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உலகம் முழுதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது. சில சமயம் புன்னகையானது கண்களிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது.
 சிரிப்பு வருவதற்கு முக்கிய காரணம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியே. புன்னகை என்பது அச்சத்தின் அறிகுறி என்று பல உயிரியல் அறிஞர்கள் கருதினர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளும், மனிதக் குரங்குகளும் தாங்கள் யாருக்கும் தீங்கிழைக்காதவர்கள் என்பதனை தங்களின் பல்லைக்காட்டி நம்முன்னோர்களுக்குத் தெரிவித்தன. ஒவ்வொரு உயிரினமும் சிரிப்பை விதவிதமாக வெளிப்படுத்தி வந்துள்ளன. குறிப்பாக, மனிதர்கள் தங்களது மகிழ்ச்சியை புன்னகையாகவும், புன்முறுவலாகவும், முகமலர்ச்சியாகவும், இன்முகம் காட்டியும் தெரிவிக்கிறார்கள்.

சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஆக்சிஜனை உள்வாங்கிக் கொள்கிறது. நோய்எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மூளை அதிகமான சந்தோச ஹார்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப்பெற்றுள்ளது. ஆகவே எப்பொழுதும் இயன்றவரை சிறிது நேரமேனும் வாய்விட்டு சிரித்திருப்போம் என்ற எண்ணத்தில் சில நகைச்சுவைத் துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியே எனக்கு.

பிச்சைக்காரன் நகைச்சுவை ஜோக்ஸ்

ராப்பிச்சையோட பந்தா தாங்க முடியலைன்னு எதை வச்சு சொல்றே..?

உலக கோப்பை மாடல்ல திருவோடு வெச்சிருக்கானே…!
 
 ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு
* * * * * * *
அரசியல் நகைச்சுவை / ஜோக்ஸ்

ந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..? ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...

* * * * * * *
லைவர் தோல்வி பயத்துல ரொம்ப உளர்ற்றாரு…!
எப்படி?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் ஒரு இலவச உலகக்கோப்பை வழங்கப்படும்கிறாரு..!

* * * * * * *
“என்னய்யா அந்தாளு புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கான்னு சொல்றே, எதைக் கேட்டாலும் தெரியாது, தெரியாதுன்னே சொல்லிகிட்டு இருக்கான்”
“அடி சக்கை, எடுத்ததுமே பிரதம மந்திரி போஸ்ட்டுக்கு எய்ம் பண்றான் போலிருக்கே?”
* * * * * * *
ன்பார்ஃம் பண்ணிட்டாங்கன்னு தலைவர் ரொம்ப உற்சாகமா சொல்றாரே…
கூட்டணி நிச்சயம் ஆயிடுச்சா..?
நீ வேற…பேஸ் புக்ல ஒரு பொண்ணு இவர் அனுப்பின ‘ஃப்ரெண்ட்’
ரெக்வஸ்டுக்கு ‘கன்ஃபார்ம்’ குடுத்துச்சாம்…அதைத்தான் சொல்றாரு…!
* * * * * * *
சினிமா தியேட்டர் நகைச்சுவை / ஜோக்ஸ்

ங்க, உங்க தியேட்டரிலே ‘ஜெனரேட்டர்’ போடவே மாட்டீங்களா?”

“சாரி, நாங்க இங்கிலீஷ் படம் போடறதில்லே”
* * * * * * *
குறுஞ்செய்தி நகைச்சுவை /  வீரபாண்டிய கட்டபொம்மன் ரீமிக்ஸ் ஜோக்ஸ்
 வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதன் மேல் ஒரு கல்லை..!!
* * * * * * *
 வக்கீல் நீதிபதி நகைச்சுவை / ஜோக்ஸ்

நீதீபதி:
ஏன் திடீர்னு ரெண்டு இட்லி, ஒரு தோசைன்னு சொல்றே..?

குற்றவாளி:
நீங்கதானே எசமான்…மேசையைத் தட்டி, ‘ஆர்டர்…ஆர்டர்..’னு
சொன்னீங்க..!
* * * * * * *
பொது நகைச்சுவை / ஜோக்ஸ்

விய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,

ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”
* * * * * * *
ரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா
* * * * * * *
குழந்தைகள் நகைச்சுவை ஜோக்ஸ்

“கடைக்காரரே..! ரெண்டு வில்ஸ் குடுங்க”

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
“சீச்சீ… இது எனக்கில்லைங்க”
“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
“என் தம்பிக்கு”
* * * * * * *
 அம்மா : திப்பு சுல்தான் யாரு ?? பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது .. அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும் பையன்: சரிம்மா புவனா யாரு ?? அம்மா : யாருடா ?? பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்
* * * * * * *
குடும்பம் கணவன் மனைவி ஜோக்ஸ்
ங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?

சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.
* * * * * * *
ன் மனைவியை பிடிச்சிருக்கிறது, நிச்சயமா ஒரு ஆண் பேய்தான்னு
எதை வெச்சி சொல்றே?
பேய் பிடிச்சதுலேயிருந்து சமைச்சிகிட்டே இருக்காளே..!
* * * * * * *
அலுவலகம் நகைச்சுவை ஜோக்ஸ்
ரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!

ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
* * * * * * *
மருத்துவர் நோயாளி மொக்கை ஜோக்ஸ்

ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்…!

எது?

நர்ஸை சிஸ்டர்’னு கூப்பிடறது..!
* * * * * * *
வர் போலி டாக்டர்னு தெரிஞ்சும் ஏன் அங்கு போனீங்க..?
டாக்டர் போலியா இருந்தா என்ன? நர்ஸ் ஜாலியா இருக்காங்களே..!
* * * * * * *
டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க.
* * * * * * *
டாக்டர் எனக்கு மரணம் வருவதை உணர முடியுமா..?
ஸாரி..உங்களுக்கு ஆபரேஷன் செய்யும் போழுது மயக்க ஊசி
போட்டுடுவோம்….சான்ஸே இல்லை..!

* * * * * * *
பரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி
டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல
போடவான்னு கேட்டாரே..?
 
* * * * * * *
நையாண்டி மொக்கை ஜோக்ஸ்

பாரதியாருக்கு கல்யாணம்..7 வயசுல…

காந்திக்கு கல்யாணம் 13வயசுல..
நேருக்கு கல்யாணம் 14வயசுல…
ங்கொய்யால இப்பதெரியுதா? நாம எல்லாம் ஏன் பேமசாகலைன்னு…???
 
* * * * * * *
ஜொள்ளு கடி 50%; மொக்கை லொள்ளு 50%
 
ன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.
 
ஆசிரியர் மாணவன் நகைச்சுவை சிரிப்பு

சார், டீ மாஸ்டர்

டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
* * * * * * *
நகைச்சுவை குறும்படம் Mr. Bean - Meets The Queen

* * * * * * *
இன்றைய மொக்கைத் தத்துவம்
 
 ரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம். ஆனா
1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது..
இப்படிக்கு சைக்கிள் ஒட்டி யோசிப்போர் சங்கம்
* * * * * * *
திவு பிடித்திருந்தால் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

             - பனித்துளி சங்கர்
* * * * * * *

18 மறுமொழிகள் to ரிலாக்ஸ் சினி மினி நகைச்சுவை சிரிப்புகள் ;Panithuli shankar ஜோக்ஸ் காமெடி மொக்கை +18 (28+04+2011) :

ம.தி.சுதா said...

செம காமடீங்க ஹ..ஹ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Mahan.Thamesh said...

நல்ல காமடி அத்தனையுமே
அதிலும் வீர பாண்டியன் ஜோர்க் செம காமடி

Lali said...

300 தசைகளும் அசைய சிரிச்சிட்டேன் :)
தொடரட்டும் மனசுக்கான மருத்துவம்..
வாழ்த்துக்கள்!

http://karadipommai.blogspot.com/

ரிஷபன் said...

காமெடிக்கு சிரிச்சு கடைசில அந்த குறும்படம் பார்த்து ஹா.. ஹா.. ஹா.. ரொம்ப மகிழ்ச்சி

Menaga Sathia said...

எல்லாமே சூப்பர்ர் ஜோக்ஸ்!!

உணவு உலகம் said...

என்னாது,பதிவு பிடிச்சிருந்தா கருத்த பதிவு செய்யணுமா? . . .
இப்படி பல ஜோக்ஸ் போட்டா பதிவு பிடிக்காம இருக்குமா எங்களுக்கு? சூப்பர்.

சசிகுமார் said...

அருமை

RVS said...

ஹெட்மாஸ்டர் ஏன் மண்டைய போட மாட்டேங்கறார்.... ஐயய்யோ. சிரிச்சு மாளலை.. ;-))

சக்தி கல்வி மையம் said...

சிரிப்பதினால் ஏற்படும் நன்மைகளை அழகாய் பட்டியலிட்டு இருக்கரீர்கள்..

சக்தி கல்வி மையம் said...

கடைசியில சங்கம் ன்னு முடிங்க..

இன்னும் சிரிப்பு நிக்கல...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நல்ல தொகுப்பு தோழரே .. அதிலும் அந்த வீரபாண்டியன் ரீமிக்ஸ் மற்றும் ஆசிரியர் மாணவன் நகைச்சுவை இரண்டும் சூப்பர் ...

வாழ்த்துக்கள் உலகில் எல்லோரையும் சிரிக்க வைப்பதே பெரிய தொண்டு ..

Praveenkumar said...

அனைத்து நகைச்சுவை துனுக்குகளும் மிகமிக அருமை தலைவா..!!! ஹி..ஹி...ஹி....

கடம்பவன குயில் said...

சிரிக்க ஆரம்பித்தே அரைமணிநேரம் ஆச்சு. இன்னும் சிரிப்பை நிப்பாட்டவே முடியலை. எப்போ சிரிப்ப நிப்பாட்டி எப்போ கருத்தை சொல்றது. ஹய்யோ...ஹய்யோ.... உங்க ஜோக்ஸ் அனைத்தும் ரொம்ப சிரிக்கவைத்துவிட்டது. சிரித்ததால் வந்த வயிற்றுவலிக்கு மருந்து அனுப்பி வைங்க ப்ளீஸ்.

எம் அப்துல் காதர் said...

அனைத்து ஜோக்ஸ்களும் ஹா.. ஹா.. ஹா.. ரகம் தல!

ஆ.ஞானசேகரன் said...

செம கலக்கல் நண்பா..

ஸ்ரீராம். said...

haa...haa...haa..

குமரேசன் நடராஜன் , கடகம்பாடி said...

nalla comedies

RSK MUTHU said...

very niceman contniue Haaaahaha