நேற்றைய இரவு எதிர்பாராத மழை
உடைபட்ட வானத்தின் கீழ்
குடையின்றி ஒரு தேகமாய்
முகம் நிமிர்த்தி கண்கள் மூடி
மழைத்துளிகளை தேகம் முழுவதும்
ஏந்திக்கொண்டதில்தான் எத்தனை ஆனந்தம் !?
இரவு முழுவதும் நனையத் துடித்தும்
சில வினாடிகளில் கனவாகிப் போனது
அந்த அழகிய நிஜம் .!
சில வினாடிகளே வந்து சிந்தி சென்றாலும்
இன்னும் தூரிக்கொண்டே இருக்கிறது
அந்த அழகிய நிமிடங்கள்
நிற்காத அடைமழையென என் உள்ளமெங்கும் .!
இரவுகள் விடிந்துபோகலாம்
நிமிடங்கள் கடந்துபோகலாம்
இருப்பிடம் மாறிப்போகலாம்
ஆனால் நான் மட்டும் மீண்டும்
ஒரு மழைக்காக காத்திருக்கிறேன்
அதே ஏக்கங்களுடன் வானம் பார்த்த பூமியாய் !!!!
Tweet |
19 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : சின்ன சின்ன மழைத்துளி : chinna chinna mazhai thuli (Panithuli sangar tamil kavithaigal ) :
நல்கவிதை.
same feeling....
மழையில் நனைய அத்தனை மனமும் ஏங்கும் தங்கள் கவிதையை படித்தபின்...
அருமையான கவிதை வாழ்த்துக்கள...
மழை என்பது ஒரு குறியீடா. அப்படியெனில் உள்ளத்து வேதனைகளை கழுவி, இதமான குளிர்ச்சியை தரும் மழையை அனைவரும் வேண்டுவோம்.
சில வினாடிகளில் கனவாகி போன அழகிய நிஜம்.. நெஞ்சத்தை தொடுகிற உணர்ச்சிகள்..
பல விநாடிகளை நம் வாழ்க்கையில் இதே போல கடக்கிறோம், நெஞ்சம் கனக்கிறோம்..
வாழ்த்துக்கள் நட்பு! :)
http://karadipommai.blogspot.com/
அழகான கவிதை வரிகள்
எரிக்கும் கோடையில் தெறிக்கும் நீர்த்துளியாக..தங்கள் கவிதை.
Kodai veiyulukku manathai kulirvikkum ithamaana kavithai. Super thala.
Ethai paditha pin ingu naanum mazhaikaai engukiren...!
வரித் துளிகளில்
மழைத் துளியின் ஏக்கம்
அருமை அழகான கவிதை பாராட்டுக்கள் தோழரே
நல்ல மழை கவிதை.நனைய வைத்துவிடுகிறது மனதை.
என்ன அழகு!! வரிகள் அருமை!! அதே மழை நாளுக்குத் தான் பலரும் காத்திருக்கிறோம்....
very nice poem
மழை அருமையாக ஒரு கவிதையை தந்திருக்கிறது.
Kathal oru katalpola anal kathli thorthal varum kannir katalpola
Nalla kavithi
Wonderfullllllllll
MARAM VALARPOM MAZHAI PERUVOM......... VAKIYANGAL OVVONDRUM MAZHAI THULIKAGA YENNI YENGA VAITHUVITANA NANDRI.................
Post a Comment