இன்று ஒரு தகவல் - பிரமிடுகள் அதிசயத்தின் அரிய அதிசயத் தகவல்கள் - PART - 3


னைவருக்கும் வணக்கம். அதிக வேலை பளு அதுதான் இந்த தமிழ்மணம் நட்சத்திரம் என்ற அறிய வாய்ப்புக் கிடைத்தும் பதிவுகள் எதுவும் தொடர்ச்சியாக கொடுக்க இயலாத சூழ்நிலையில் ஒவ்வொரு நிமிடங்களையும் மிகவும் வருத்தத்துடன் கடந்துகொண்டிருந்தேன். அதிலும் மறுமொழி இடும் நண்பர்களுக்குக் கூட பதில் சொல்ல இயலாத நிலை. யாரும் தவறுதலாக எண்ண வேண்டாம். சரி இனி நாம் இன்றையப் பதிவிற்கு செல்லலாம்.

பிரமிடுகள் பற்றி இதுவரை யாரும் சொல்லாத பல அரிய திடுக்கிடும் தகவல்களை தொடர்ச்சியாக பத்து பாகத்திற்கும் அதிகமாக சொல்லவேண்டும் என்ற ஒரு புதுமையான முயற்சியில் இந்த பதிவை தொடங்கினேன் ஆனால் நேரமின்மை மூன்றாவது பதிவே இறுதிப் பதிவாக முடிக்கப்போகிறேன். சரி நாம் இந்த பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் என்ற இறுதிப் பதிவில்.

ப்படித்தான் ஒருமுறை இந்த பிரமீடுக்குள் இருக்கும் அறைகளை எண்ணி கணக்கு சொல்லும்படி ஐநூற்று ஐம்பது கணக்காளர்களை நியமித்தாராம் அரசர் சியோப்ஸ் .அப்பொழுது அவர்கள் அந்த பிரமீட்டிற்குள் செல்லும் முன்பு ஒருவேளை நீங்கள் இதற்குள் இருக்கும் அறைகளை சரியாக எண்ணி கணக்கு சொல்லாவிட்டால் அனைவரும் கொல்லப்படுவீர்கள் என்றும் கெடு விதித்து உள்ளே அனுப்பி வைத்தாராம். அதுமட்டும் அல்லாது அவர்களுடன் நான்கு மாதத்திற்கு தேவையான உணவுகளும் சேர்த்து அனுப்பப்பட்டதாம் ஒன்றும் புரியாத கணக்கர்கள் அரசனின் ஆணைக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பிரமீடிற்குள் சென்றவர்கள் எட்டு மாதங்கள் கழித்து என்பதுடன் நிறைவும் செய்திருந்தேன்.

ந்த எட்டு மாதங்கள் கழித்து என்ன நடந்தது என்று அறிந்துகொள்வதற்கு நீங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் இருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி இனி நாம் மீண்டும் அரசர் சியோப்ஸ் பிரமீடு நோக்கி பயணிக்கலாம். எட்டு மாதங்கள் கழித்து அரசர் சியோப்ஸ் அனுப்பிய ஐநூற்று ஐம்பது கணக்காலர்களில் எட்டு பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தார்களாம். அப்பொழுது அரசர் மற்றவர்கள் எல்லோரும் எங்கே என்று கேட்டதற்கு இந்த பிரமிட்டிற்குள் ஏற்ப்படுத்தி வைத்திருக்கும் மர்ம்மன்களால் இறந்து போனார்கள் என்று பதில் தந்திருக்கிறார்கள்.

 அதன் பின்பு அரசர் சரி உங்களில் யார் யார் இந்த பிரமீடிற்குள் இருக்கும் அறைகளை சரியாக கணக்கு செய்திருக்கிறீர்கள் எங்கே சொல்லுங்கள் என்று கேட்க அதற்குள் எட்டு கணக்காலர்களில் ஏழு பேர் பயத்தில் எதோ வாயிக்கு வந்ததை சொல்லவே அரசர் அவர்கள் ஏழு பேரையும் கொள்வதற்கு உத்தரவிட்டாராம். இறுதியாக இருந்த கணக்கரிடம் எங்கே நீ சொல் என்று கேட்டதற்கு அந்த கணக்காளன் இவர்கள் சொன்னது போல் நீங்கள் அனுப்பிய யாரும் சாகவில்லை நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் சென்று அறைகளை எண்ணத் தொடங்கினோம். ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் எங்களால் அறைகளை எண்ணி முடிக்க இயலவில்லை அந்த அளவிற்கு அனைத்தும் ஒன்று போலவே இருந்ததனால் ஒன்றும் புரியாமல் மற்ற கணக்கர்கள் எல்லோரும் பையித்தியங்கலாக மாறிவிட்டார்கள் அவர்கள் இன்னும் பிரமிடுக்குல்லையே சுற்றித் தெரிகிறார்கள். என்று சொன்னாராம் இறுதி கணக்காளர். உடனே அரசர் இவன் சொல்வதுதான் உண்மை. இதுவரை இதை வடிவமைத்த எனக்கே இதற்குள் எத்தனை அறை உள்ளது என்று தெரியாது என்று எல்லோர் முன்னிலையிலும் சொன்னாராம்.

 என்ன நண்பர்களே எட்டு மாதங்கள் தேடியும் அறைகளை எண்ணி முடிக்க இயலவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்த பிரமிட்டிற்குள் எத்தனை அறைகள் இருக்கும் என்று. சரி நண்பர்களே இனி நாம் பிரமிடுகள் பற்றிய பொதுவானத் தகவலுக்கு வருவோம் இது வரை செய்த ஆய்வின் படி உலகத்தில் ஏற்பட்டுள்ள திருட்டுகளில் அதிகமானத் திருட்டுகள் நடந்த இடங்களில் பிரமிடுகளுக்குதான் முதல் இடமாம். ஆம் நண்பர்களே இதுவரை இந்த பிரமிடுகளில் திருடப்பட்டிருக்கும் மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்று சொல்கிறது ஒரு ஆய்வு. அது மட்டும் இல்லாது மொத்தப் பிரமிடுகளில் இருந்து திருடப்பட்டிருக்கும் ஆபரணங்களை கணக்கிட்டால் ஆறு நுறு கண்டைனர்களில் நிரப்பலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இவற்றை விட இன்னும் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் உறையவைக்கும் தகவல் என்னவென்றால் இந்த பிரமிட்டிற்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பிணங்களின் எண்ணிக்கையைவிட இது போன்று திருடுவதற்காக சென்று வழி தெரியாமல் இறந்து போனவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
ந்த பிரமிட்டிற்குள் கொள்ளையடிக்க செல்லும் அனைவரையும் திசை திருப்பும் நோக்கத்தில் பல போலியான கல்லறைகளை ஏற்படுத்தி முன்பகுதிகளில் அமைதிருக்கிறார்களாம்.கொள்ளையர்கள் இந்த கல்லறைகளில் ஏதாவது கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அவற்றை தோண்டும் பொழுது மேலிருந்து ஆயிரம் கிலோ எடை உள்ள கற்கள் விழுந்து அவர்களை நசுக்கி கொல்லும் அளவிற்கு வடிவமைத்து இருக்கிறார்களாம்.
 

கிப்திய மன்னர்கள் இறந்த பின்பு அவர்களின் கல்லறைகளை நிலத்தின் மேற்பரப்பில் இருந்து பல நூறு அடிகள் ஆழத்தில் சுரங்கங்கள் அமைத்து அதற்கு மேல் இது போன்ற பிரமிடுகளை கட்டி இருக்கிறார்களாம். அது மட்டும் இல்லாது ஆயிரம் மீட்டர் ஆழத்தில் பல குழிகளை ஏற்படுத்தி அதை யாருக்கும் தெரியாமல் மர்மமான
 

பிரமிடுகளின் அதிசயங்கள் தொடரும் ......ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

25 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - பிரமிடுகள் அதிசயத்தின் அரிய அதிசயத் தகவல்கள் - PART - 3 :

Praveenkumar said...

பிரமீடுகள் பற்றிய தகவல்கள் மென்மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தொடருங்கள் தங்கள் தேடுதலை...
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அடுத்த பதிவிற்க்காக....

Unknown said...

அருமையான தகவல்ககள்.தங்கள் உழைப்பை பாராட்டுகிறேன்.வாழ்த்துக்கள்

ஜீவன்பென்னி said...

நல்ல புதுமையான தகவல்கள்......

SARAVANAN.D said...

நல்லதகவல் நன்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரமிக்க வைக்கும் பிரமிடுகள் பற்றிய தகவல்கள் அருமை நண்பரே...

எஸ்.கே said...

சுவாரசியமாக இருக்கிறது! தொடருங்கள்!

Allinone said...

மிகவும் அருமையான பதிவு ,படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது...தொடருங்கள் உங்கள் பணியை, வாழ்த்துக்கள்....

என்னது நானு யாரா? said...

பிரமிட்களைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பு ஏற்படுத்துகிறது.

அருமை! அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

தொடருங்கள் தங்கள் தேடுதலை...

ம.தி.சுதா said...

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது... அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறேன்.

ஹேமா said...

பிரம்மிக்கத்தக்க பதிவுகள் சங்கர் !

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

படங்களும், பதிவும் அருமை.. :-))

Jerry Eshananda said...

அதிசயம்........

நிகழ்காலத்தில்... said...

ஆவலை தூண்டுகிறது. ...

'பரிவை' சே.குமார் said...

அருமையான தகவல்ககள்.தங்கள் உழைப்பை பாராட்டுகிறேன்.வாழ்த்துக்கள்

கமல் said...

பிரமிடுகள் பற்றி என்க்கு தெரியாது, ஆனால் இப்போது பலவற்றை அறிய வாய்ப்பு

நன்றி...தொடர்ந்து படிக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப இன்ரஸ்ட்டிங்கா இருக்கு, இதைப் பத்தி அப்புறம் சாவகாசமா டீடெய்லா எழுதிடுங்க பாஸ்!

Ashok D said...

Interesting :)

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான தகவல்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//புதுமையான முயற்சியில் இந்த பதிவை தொடங்கினேன் ஆனால் நேரமின்மை மூன்றாவது பதிவே இறுதிப் பதிவாக முடிக்கப்போகிறேன்.//

நேரம் இருக்கும் பொழுது இன்னும் எழுதலாம் நண்பா.... தொடருங்கள்

சுந்தரா said...

வியப்பூட்டும் தகவல்கள்

பகிர்வுக்கு நன்றி!

மாதேவி said...

தொடர்கிறோம்.

பனித்துளி சங்கர் said...

//பிரவின்குமார் said...
நந்தா ஆண்டாள்மகன் said...
ஜீவன்பென்னி said...
சரவணன்.D said...
வெறும்பய said...
எஸ்.கே said...
Princess Macaw said...
என்னது நானு யாரா? said...
T.V.ராதாகிருஷ்ணன் said...
ம.தி.சுதா said...
ஹேமா said...
sweatha said...
Ananthi said...
ஜெரி ஈசானந்தன். said...
நிகழ்காலத்தில்... said...
சே.குமார் said...
கமல் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
D.R.Ashok said...
ராமலக்ஷ்மி said...
ஆ.ஞானசேகரன் said...
சுந்தரா said...
மாதேவி said... // அனைத்து நண்பர்களுக்கும் தனித்தனியாக பதிலளிக்க ஆசைதான். என்ன செய்வது வேலைப்பளு காரணமாக அவ்வாறு இயலாத காரணத்தால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் எமது நன்றியினை தெரிவிக்கிறேன். தங்களது தொடர் ஆதரவிற்கும் ஊக்கமிக்க கருத்துகளுக்கும் என்றென்றும் நன்றிகள்..!!

Unknown said...

மிகவும் சுவாரஸ்யமான தகவல்.... படிக்கப் படிக்க பரபரப்பாக இருந்தது... தகவல்களைத் தருவதற்காக தங்களின் முயற்சி என்னை மிகவும் கவர்ந்து விட்டது!!! வாழ்த்துக்கள்.... மேலும் நன்றிகள்