! பனித்துளிசங்கரின் கவிதைகள் - மௌன யுத்தம்


நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது.
சொல்ல நினைத்து
இறந்து போன வார்த்தைகளும் ,
பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும்
இன்னும் என் நினைவுகளில்
தேங்கிக் கிடக்கின்றன .
ன்னுடன் பேச முயற்சித்து பேசாமல்
சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம்
எதற்கென்றே தெரியாமல் இன்னும்
காத்துக் கிடக்கின்றன என் இதழோரம்

உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம்
இன்னும் தனிமைகள் மட்டுமே
நீள்கிறது முடிவுகளற்ற கானல் நீராய் .

உன் அருகில் இருந்தும்
தனிமையில் மட்டுமே
வார்த்தைகள் கரைக்கிறது இதழ்கள்.

உந்தன் கத்தி வீசும் பார்வைகள் மட்டும்
அவ்வப்பொழுது எந்தன் அருகில் வந்து
முழுதாய் என்னை குடித்து செல்கிறது .

நீ போலியாய் சிதறவிடும்
புன்னகைகளில் எல்லாம் வாடிப்போகிறது
எந்தன் நாட்கள்.

உந்தன் மௌனத்தின் மொழி
இத்தனை அழகா !!??
என்னை முழுவதும் கரைத்து
மீண்டும் எனக்கு மெல்ல
உயிர் தந்து ரசிக்கிறதே....

நீ கேட்கும் எதையும் என்னால்
கொடுக்காமல் இருக்க முடிந்ததில்லை
நீ என் உயிரோடு கலந்ததனால் ...
ஆனால் உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது ???

மௌனசாட்டை வீசி
என்னை காயம்பட வைப்பதில் !?
உனக்கொரு மகிழ்ச்சியெனில்
எனக்கொன்றும் முரண்பாடுகளில்லை
உன் முடிவுகளில்....


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

23 மறுமொழிகள் to ! பனித்துளிசங்கரின் கவிதைகள் - மௌன யுத்தம் :

Unknown said...

///மௌனசாட்டை வீசி
என்னை காயம்பட வைப்பதில் !?
உனக்கொரு மகிழ்ச்சியெனில்
எனக்கொன்றும் முரண்பாடுகளில்லை
உன் முடிவுகளில்....///உணர்வு வெளிப்பாடுகளின் வார்த்தை விளையாட்டு.

Unknown said...

மௌன யுத்தம் ..உளக்கிடக்கையின் வெளிப்பாடு!!அருமை

அன்பரசன் said...

அருமை

வேங்கை said...

ரொம்ப அருமை நண்பரே !!!

'பரிவை' சே.குமார் said...

கவிதையில் காதல் கரைந்து ஓடுகிறது....
அருமை பனித்துளி.

என்னது நானு யாரா? said...

நீ போலியாய் சிதறவிடும்
புன்னகைகளில் எல்லாம் வாடிப்போகிறது
எந்தன் நாட்கள்.//

ஏன் போலியாய் சிரிக்கிறாங்க? ஜாலியா சிரிக்க வேண்டியது தானே?

காதல் கவிதை என்றாலே அதில் விரக்தி இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்களா தல?

Chef.Palani Murugan, said...

உங்க‌ள் எழுத்துக்கு வாழ்த்துக்க‌ள்

Anonymous said...

//மௌனசாட்டை வீசிஎன்னை காயம்பட வைப்பதில்//வலியின் வடிவம் அருமை சங்கர்!

ம.தி.சுதா said...

///...நீ கேட்கும் எதையும் என்னால்
கொடுக்காமல் இருக்க முடிந்ததில்லை
நீ என் உயிரோடு கலந்ததனால் .....///
அருமை சகேதரா...

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை......

அருண் said...

//உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம்இன்னும் தனிமைகள் மட்டுமேநீள்கிறது முடிவுகளற்ற கானல் நீராய் .//அருமை.உள்ளக்கிடைக்கைகளின் உண்மையான வெளிப்பாடு உங்கள் கவிதைகள்.

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு

Asiya Omar said...

மிகவும் அருமை.

Valar (வளர்மதி) said...

காதல் என்றாலே தோல்விதான? காதலன் காதலி மீது கவிதை எழுதுகிறான் அதுவும் விரக்தியில். ஏன் ஒரு அன்புக் கணவன் தன் மனைவி மீது கொண்ட காதலை எழுதலாமே??. திருமணத்திற்கு பின் காதலிப்பதில்லையோ???... இது என் பொதுவான கருத்து.

//உன்னுடன் பேச முயற்சித்து பேசாமல்
சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம்
எதற்கென்றே தெரியாமல் இன்னும்
காத்துக் கிடக்கின்றன என் இதழோரம்//

உண்மையான வரிகள். உங்களது எண்ணமும், வார்த்தை பிரயோகமும் அருமை

aavee said...

அருமை.நண்பரே....

JK said...

இதயத்திலிருந்து வழியும் ரத்தமாய் வார்த்தைகள் .....நன்றாக இருக்கிறது நண்பரே .....

Anonymous said...

அருமையான தகவல்கள்...இனிமையான எழுத்துக்கள்

Thanglish Payan said...

http://thanglishpayan.blogspot.com

Thanglish Payan said...

Superb Kavithai...

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கிட்டீங்க பாஸ்.கவிதை அருமை.

எனக்குப்பிடித்த வரிகள் >>>>

உன்னுடன் பேச முயற்சித்து பேசாமல்
சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம்
எதற்கென்றே தெரியாமல் இன்னும்
காத்துக் கிடக்கின்றன>>>>>


தமிழ்மணம் மகுடம் சூட்டப்பட்டதாகக்கேள்விப்பட்டேன்,வாழ்த்துக்கள்.(சாரி ஃபார் லேட்,)

பனித்துளி சங்கர் said...

//நந்தா ஆண்டாள்மகன் said...
மைந்தன் சிவா said...
அன்பரசன் said...
வேங்கை said...
சே.குமார் said...
என்னது நானு யாரா? said...
Chef.Palani Murugan, LiBa's Restaurant said...
Balaji saravana said...
ம.தி.சுதா said...
rk guru said...
அருண் said...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
asiya omar said...
வளர்மதி said...
கோவை ஆவி said...
jk said...
padaipali said...
Thanglish Payan said...
Thanglish Payan said...
சி.பி.செந்தில்குமார் said...//

அனைத்து நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே..!

priamanaval said...

solla ninaithu irandhu pona vaarthai,paesa muyarchithu karaindhu pona nimidangal...yappa evlo aazhamana unarvu fantastic.

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com