ஆயிரம் கண்கள் நீ கொண்டாலும்
நீ கொண்ட பிறவி போதாது
உன்னை சுற்றியே எத்தனையோ
மாற்றம் தினம் தினம் .....
ரசித்திருக்கிறாயா சிறிதேனும் !?
அப்பொழுதுதான் விரியும் மலர்கள் -அதில்
அவசரமாய் தேனெடுக்கும் தேனீக்கள்
அவற்றின் கால்களில் ஒட்டிய மகரந்த துகள்கள்
ரசித்திருக்கிறாயா !????
அதிகாலை இளஞ்சூரியன்
அதன் கதகதப்பை ரசித்திருக்கும்
அணில் குஞ்சுகள்
அலகால் மெல்லத் தன்
இறகுகோதி பயில்நடை போடும்
குருவிக்கூட்டம் ,,
என்றாவது நின்று ரசித்திருக்கிறாயா !???????
மரங்களின் ஊடே வரும் மஞ்சள் வெய்யில்
மெல்லிளம் காற்றின் தாலாட்டில்
சுரங்கள் பாடும் இலைகளின்
இனிய சங்கீதம்
அடைமழை நேரத்தில் வாழை இலைகளில்
பட்டுத்தெறிக்கும் மழை நீரின் மத்தளம்.....
ரசித்திருக்கிறாயா !????
அத்தனை அழகாய் கறையான் புற்று
அளவெடுத்தாற்போல் சிலந்திவலை
அழகான தேன்கூடு ..
வரிசை தவறாது செல்லும் எறும்புக்கூட்டம்
ரசித்திருக்கிறாயா?
மழை நின்ற பின்னாலே
தென்னையின் கீழ் நின்று
அதன் மேலிருந்து விழும் ஒருதுளி நீரினை
அருகே வரும்வரை ரசித்து
கண்மூடி உன் முகத்தில் ஏந்தி இருக்கிறாயா?
இப்படி எத்தனையோ ..எத்தனையோ...
உன்னையும் என்னையும் சுற்றி
தினம் தினம் ஆயிரமாயிரம்
சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துகொண்டே
இருந்தாலும்
உலகிலுள்ள ஜீவராசிகளுள் ரசிக்கத்தெரிந்த
ஒரே ஜீவராசி நீயாகிப் போனாலும்
ஏனோ உன்னை நீயே சிறைவைத்து
இயந்திரமாய் மாறி இல்லாத ஒன்றை தேடி
ஓடிக்கொண்டும் ஏங்கி கொண்டும்
உன்னை சுற்றி உள்ள இயற்கையை
சீரழித்தும் உனக்கு நீயே எமனாகிறாய்
இல்லை உன் சந்ததிக்கே எமனாகி விட்டாய் !!!!!!!!!!!!!!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
20 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் - ரசித்திருக்கிறாயா !? :
//மரங்களின் ஊடே வரும் மஞ்சள் வெய்யில்
மெல்லிளம் காற்றின் தாலாட்டில்
சுரங்கள் பாடும் இலைகளின்
இனிய சங்கீதம்//
அருமையான ரசனை. வாழ்த்துக்கள்
//உலகிலுள்ள ஜீவராசிகளுள் ரசிக்கத்தெரிந்த
ஒரே ஜீவராசி நீயாகிப் போனாலும்
ஏனோ உன்னை நீயே சிறைவைத்து
இயந்திரமாய் மாறி இல்லாத ஒன்றை தேடி
ஓடிக்கொண்டும் ஏங்கி கொண்டும்
உன்னை சுற்றி உள்ள இயற்கையை
சீரழித்தும் உனக்கு நீயே எமனாகிறாய்
இல்லை உன் சந்ததிக்கே எமனாகி விட்டாய் !!!!!!!!!!!!!!!//
கடைசியாக சொன்ன வரிகளை உண்மையை கொண்டு வந்துக் கொடுத்திருக்கிறீர்கள்.
நணபருக்கு! உங்களின் கவிதை சாரத்தைத் தான் நான் பதிவுகளாக இட்டுக் கொண்டிருக்கின்றேன். நேரம் வாய்க்கும் போது எனது வலைப்பக்கம் வந்து பார்க்க வேண்டுகின்றேன்.
மற்ற நண்பர்களுக்கும் நான் விடுக்கும் அன்பு அழைப்பு இது!
மனிதம் தழைக்கட்டும்! இயற்கை வாழட்டும்!
பதற வைக்கிற புகைப்படம்.
//ஏனோ உன்னை நீயே சிறைவைத்துஇயந்திரமாய் மாறி இல்லாத ஒன்றை தேடிஓடிக்கொண்டும் ஏங்கி கொண்டும்உன்னை சுற்றி உள்ள இயற்கையைசீரழித்தும் உனக்கு நீயே எமனாகிறாய் //நெத்தி பொட்டில் அடிச்சாப்போல சொல்லிருக்கீங்க!
சுற்றியுள்ள இயற்கையை ரசிக்காமல் இயந்திரம்போல் எதையோ தேடி அலையும் மனிதர்களே! கொஞ்சம் இயற்கையை ரசியுங்கள்!
அருமை...
//மழை நின்ற பின்னாலே
தென்னையின் கீழ் நின்று
அதன் மேலிருந்து விழும் ஒருதுளி நீரினை
அருகே வரும்வரை ரசித்து
கண்மூடி உன் முகத்தில் ஏந்தி இருக்கிறாயா?//
நல்ல சொன்னிங்க.
//இல்லை உன் சந்ததிக்கே எமனாகி விட்டாய் !!!!!!!!!!!!!!!//
நெத்தியடி.
உண்மை. உண்மை.. உண்மை...
உணமையான ஆதங்கம்!!நல்ல கவிதை..வாழ்த்துக்குள் அண்ணே!!
மிக ஆழமான வரிகள்...!
///...அப்பொழுதுதான் விரியும் மலர்கள் -அதில்
அவசரமாய் தேனெடுக்கும் தேனீக்கள்.../// கவிதை அருமையாக இருக்கிறது..
Super Kavithaikal...
Good one.
Ama, namma Areya pakkam alaiyey kanom?
அழகிய ரசனைகளைத் தொகுத்து விழிப்புணர்வில் மாலையாக்கப் பட்ட கவிதை.
தங்கள் கவிதை ரசிக்கும் விதமாகவும், இயற்கை அழிவு பற்றிய நல்ல சிந்தனையுடன் பிரமாதமாக உள்ளது.
//உன்னை சுற்றி உள்ள இயற்கையை
சீரழித்தும் உனக்கு நீயே எமனாகிறாய்
இல்லை உன் சந்ததிக்கே எமனாகி விட்டாய்!!//
நல்ல கவிதை சங்கர்.
ச..என்ன ஒரு வரிகள் அதவும் கடைசியில் ....இதுதானே உண்மை..மைதர்கள் இயந்திரமாய் மாறித்தான் போனார்கள்..பேராசிதான் காரணம்.
rojava
ne
un thootathil irupathai vida
yan
kaadalin kundalil irupatha aalgu
by
JR.SMART MUBARAK ANSARI
rojava
ne
un thootathil irupathai vida
yan
kaadalin kundalil irupatha aalgu
by
JR.SMART MUBARAK ANSARI
மழை நின்ற பின்னாலே
தென்னையின் கீழ் நின்று
அதன் மேலிருந்து விழும் ஒருதுளி நீரினை
அருகே வரும்வரை ரசித்து
கண்மூடி உன் முகத்தில் ஏந்தி இருக்கிறாயா?
good line thenai marathirku oru sangitham
Post a Comment