அறிவுக்கு விருந்து !!!

இன்னைக்கு என்ன எழுதலாம் எப்ப பார்த்தாலும் ஒரே கதையும் , கவிதையும் , கட்டுரையுமா எழுதி எழுதி நிரப்பியாகிவிட்டது . சரி இன்னைக்கு ஏதாவது சில அறிய நிகழ்வுகளைப் பற்றி எழுதி அறிவுக்கு விருந்து என்று சொல்லி அனைவரையும் அசத்திட வேண்டியதுதான் . அறிவுக்கு விருந்தா அது எங்கடா உன்னிடம் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது மக்கா . பதிவுனு சொல்லி மொக்க போடுறதும் . மொக்கைனு சொல்லி பதிவு போடுறதும் இப்ப சகசம்தானங்க .எது எப்படியோ இது அப்படி இல்லை எப்படினு கேக்குறீங்களா அது அப்படிதாங்க . சரி வாங்க விசயத்திற்கு வருவோம் .


507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம் , தென்னாப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .


செல்போனில் சிம் கார்டு பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் , அதுவல்ல . தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது சிம்கார்டு .


உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ( ' life is a sexually transmitted disease ' ) என்றார் .


வேகமாகப் போக விரும்பினால் , தனியாகப் பயணம் செய் . தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் ' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம் .


எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு . பின்பக்கமாகத் திரும்பி


வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான் .


சங்கரா பரணம் ராகத்தில் , ' ஜனகணமன ' பாடலுக்கு இசை அமைத்தவர் நேதாஜியின் படையில் பணியாற்றிய கேப்டன் ராக்சிங்


மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த கானகப் பகுதிக்கு ' மௌனப் பள்ளத்தாக்கு ' என்று பெயர் .


மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப் படுத்தி உறவுகொள்வது ( மேரிட்டல் ரேப் ) , மனைவியைக் கணவனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது ( டொமஸ்டிக் வயலென்ஸ்.) எனப்படும் .


பறவைகளுக்கு ( வாத்து , அன்னம் , நெருப்புக் கோழி தவிர்த்து ) ஆண்குறி கிடையாது . க்ளோயேகா ( cloaca ) என்கிற ' சமச்சீர் பகுதி ' யினால் தேய்த்துக்கொள்ள வேண்டியதுதான்


இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Nocturnal Enuresis என்று குறிப்பிடுவோம் . இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்


எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ' ஓ ' பாஸிட்டிவ் .

நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .

" ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ...."
" ' ரிலேட்டிவிட்டி தியரி ' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா ? அதுதான் இல்லை . காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது . காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது :


' இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! ".


பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .


நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம் .


அறிஞர் ' வால் ' என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு , பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை , செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார் .


பாம்பைக் கண்டால் பயப்படுவதற்கு அறிவியல் பெயர் ஒபிடி போபியா .


'வெள்ளெழுத்து ' என்ற குறைபாடு 40 வயதானால் கட்டாயம் எல்லோருக்கும் வரும் . இது ஒரு நோய் அல்ல . முதுமை தொடக்கத்தின் அடையாளம் . இதை ' சாளேஸ்வரம் ' என்றும் அழைப்பர் .


ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர் . .


குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் . முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும் , குதிரையின் இதயம் 38 முறையும் , சுண்டெலியின் இதயம் 200 முறையும் , நாயின் இதயம் 118 முறையும் , ஆட்டின் இதயம் 60- லிருந்து 78 முறையும் , யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம் .


அப்பாடா ஒரு வழியாக பதிவு போட்டாச்சு .அப்றம் என்ன மக்கா அதுதான் விருந்து முடிந்துவிட்டததுல இனி அப்படியே வரிசையா வந்து மொய் எழுதிட்டு போங்க . நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் . மக்கா இனி நீங்க சொல்லவேண்டியதை சொல்லலாம் .இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

17 மறுமொழிகள் to அறிவுக்கு விருந்து !!! :

பித்தனின் வாக்கு said...

நான் மெய் எழுதிப் போட்டேன். மொக்கை போட்டால் கட கடன்னு பின்னூட்டம் போடும் நம் மக்கள் பொது அறிவு போட்டால் காத்தாடுது பார்த்தீங்களா?. நல்ல தகவல்கள். நன்றி.

வெள்ளிநிலா said...

http://vellinila.blogspot.com/2010/01/blog-post_28.html - pls read this and you will like that

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை தகவல்கள்

நிலாமதி said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{ பித்தனின் வாக்கு said...
நான் மெய் எழுதிப் போட்டேன். மொக்கை போட்டால் கட கடன்னு பின்னூட்டம் போடும் நம் மக்கள் பொது அறிவு போட்டால் காத்தாடுது பார்த்தீங்களா?. நல்ல தகவல்கள். நன்றி.

10 February, 2010 00:15 }}}}}}}}}}


நண்பர் பித்தனின் வாக்கு அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் வெள்ளிநிலா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{ Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை தகவல்கள்

10 February, 2010 01:34 }}}}}}}}}நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ நிலாமதி said...
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

10 February, 2010 06:45 }}}}}}}}}}}


தோழி நிலாமதி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

அண்ணாமலையான் said...

அருமையா எழுதியிருக்கீங்க தோழா.. வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

நல்ல தகவல்கள்...நல்ல விருந்து

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு பாராட்டுக்கள்.

பனித்துளியாய் ஒரு பாவை..

சைவகொத்துப்பரோட்டா said...

ஏவ், செமை விருந்து, மொய் எழுதியாச்சு சங்கர்

பனித்துளி சங்கர் said...

{{{{{{{ அண்ணாமலையான் said...
அருமையா எழுதியிருக்கீங்க தோழா.. வாழ்த்துக்கள்...

10 February, 2010 10:57 }}}}}}}}}


நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{புலவன் புலிகேசி said...
நல்ல தகவல்கள்...நல்ல விருந்து

11 February, 2010 19:55 }}}}}}}}}}


நண்பர் புலவன் புலிகேசி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ அன்புடன் மலிக்கா said...
அருமையான பதிவு பாராட்டுக்கள்.

பனித்துளியாய் ஒரு பாவை..

12 February, 2010 04:25 }}}}}}}}}}தோழி அன்புடன் மலிக்கா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ சைவகொத்துப்பரோட்டா said...
ஏவ், செமை விருந்து, மொய் எழுதியாச்சு சங்கர்

12 February, 2010 20:06 }}}}}}}}}


நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

சுந்தரா said...

தெரியாத தகவல்களைத் தெரிந்துகொள்ளவைத்தது பதிவு.

நன்றி சங்கர்!