காதல் கவிதை - ஞாபகச் சுமை - Panithuli shankar Tamil Kadhal Kavithaigal - 14 July 2011
சில நேரம்
உடைபட்டுப் போகிறேன்.
சில நேரம்
தடைபட்டுப் போகிறேன்
உன் பார்வை என் மீது விழும் போது...!

ல வருடங்கள்
 உனக்கானக் காத்திருப்பின் சுகத்தை
 நீ என்னைக் கடந்து செல்லும்
அந்த சில நொடிகளில் உணர்கிறேன்...!

டை மழை காலத்திலும்
 அனலாய் கொதிக்கிறது தனிமை.
இந்த உலகம் பெரியது
என்பதை மறந்து பல முறை
 நீ விட்டு சென்ற கால்தடங்களுக்கு
 காவல் இருக்கிறேன்...!

ரு கைக்குழந்தையின்
தேடலாய்  எப்போதும்
உன் முகம் கண்டு மட்டுமே
 புன்னகைக்கிறேன்..!

தினம் தினம்
கருப்பாகிப் போகும் இரவுக்குள்ளும்
உன் நினைவுகள்
 நான் சுமப்பதால்  எப்பொழுதும்
பகலாகவே நீள்கிறது
எனக்கான உலகம்.... !!!

                                                                           -- பனித்துளி சங்கர்

11 மறுமொழிகள் to காதல் கவிதை - ஞாபகச் சுமை - Panithuli shankar Tamil Kadhal Kavithaigal - 14 July 2011 :

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal kavithai

Mahan.Thamesh said...

அருமையாய் உள்ளது அண்ணா

விக்கியுலகம் said...

மாப்ள உம்ம பேரை கவிதை துளி சங்கர்ன்னு மாத்திக்கய்யா...சூப்பரா இருக்கு கவிதை!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில் ...

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..

Dhanalakshmi said...

nalla kavidhai.......

Reverie said...

அருமையான கவிதை...

hakkim said...

ayya paniththuli enna kodumai ithu neer ezhuthuvathu kavithai??????!!!!!!

hakkim said...

kavithai entral enna entru therinthu ezhthuvathu nantru

hakkim said...

Tamil thai seththupoval kavanam

hakkim said...

வணக்கம் நண்பர்களே.! நீங்களும் நலமா இருப்பீங்கனு நம்புறேன்..!!

நான் நலம் illai