இங்கு கரையில் பலரை கண்ணீரிலும்...
அங்கு கடலில் பலரை தண்ணீரிலும்...
மிதக்க வைக்கத்தான் மிதவை
அதிசயம் என்று உன்னை
பார்த்து பார்த்து உருவாக்கியாதோ
இந்த அறிவியல் வளர்ச்சி..!!
இன்னும் ஆயிரமாயிரம்
கதை சொல்லும் இந்த சுமைதாங்கி
புன்னகையுடன் ஏற்றிச் சென்றது..! - ஆனால்
அந்த புன்னகையின் ஈரம் காயும்முன்
கரை தொடாமல் மூழ்கிப்போனது..!
எத்தனை ஆசைகள் அங்கு
தண்ணீரில் மிதகின்றதோ இன்னும்
கரை தொடாமல் ..?!
எத்தனை நினைவுகள் இன்னும்
நிழலாடுகிறதோ இந்த கரை தாண்டாமல்..?!
கப்பல் என்று உச்சரிக்கும்
தருணத்தில் எல்லாம்
ஓங்கி ஒலிக்கத்தான் செய்கிறது..!
அந்த தீர்ந்து போன
அதிசயத்தின் அழுகுரல்
அழுது அழுது ஓய்ந்து போன
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
இன்னும் என் செவியருகே......
அங்கு கடலில் பலரை தண்ணீரிலும்...
மிதக்க வைக்கத்தான் மிதவை
அதிசயம் என்று உன்னை
பார்த்து பார்த்து உருவாக்கியாதோ
இந்த அறிவியல் வளர்ச்சி..!!
இன்னும் ஆயிரமாயிரம்
கதை சொல்லும் இந்த சுமைதாங்கி
புன்னகையுடன் ஏற்றிச் சென்றது..! - ஆனால்
அந்த புன்னகையின் ஈரம் காயும்முன்
கரை தொடாமல் மூழ்கிப்போனது..!
எத்தனை ஆசைகள் அங்கு
தண்ணீரில் மிதகின்றதோ இன்னும்
கரை தொடாமல் ..?!
எத்தனை நினைவுகள் இன்னும்
நிழலாடுகிறதோ இந்த கரை தாண்டாமல்..?!
கப்பல் என்று உச்சரிக்கும்
தருணத்தில் எல்லாம்
ஓங்கி ஒலிக்கத்தான் செய்கிறது..!
அந்த தீர்ந்து போன
அதிசயத்தின் அழுகுரல்
அழுது அழுது ஓய்ந்து போன
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
இன்னும் என் செவியருகே......
- பனித்துளி சங்கர்
,
,
Tweet |
0 மறுமொழிகள் to Panithuli shankar New Kavithaigal 2013 - TITANIC :
Post a Comment