இன்று ஒரு தகவல் : பணம் தோன்றிய வரலாறு : world first currency history + 18 (01+03+2011)


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு தகவலின் வாயிலாக நாம் பார்க்க இருக்கும் தகவல் பணம். இந்த பணத்தை விரும்பாதவர்கள் உலகத்தில் இன்று யாரும் இல்லை. பழங்காலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு ”பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்று. ஆனால் அந்த பழைய மொழி இன்று மாறி ”பணம் மெத்தையில் குணம் பாடையில் ” என்று சொல்லும் அளவிற்கு பணம் என்ற காகிதங்களின் மதிப்பு உலகத்தின் உயர்ந்த நிலையில் உள்ளது. மனிதனின் ஆசைகள்தான் இந்த உலகத்தில் தோன்றி இருக்கும் அனைத்து அதிசயங்களுக்கும் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் அதே ஆசைகள்தான் மனிதனின் அழிவிற்கும் காரணம் என்பதை நம்மில் பலர் அறியவில்லை. இந்த ஆசைகளில் இன்று முதன்மையில் இருப்பது பணம் என்றுதான் சொல்லவேண்டும். இனி வரும் காலத்தில் காசு இல்லாத மனிதன் சுவாசிப்பது கூட சாத்தியமற்றுப்  போகும் நிலை வரலாம் .
ரி  இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் விசயத்திற்கு வருவோம் . இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இப்பொழுதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சிகளும் உருவாகத் தொடங்கிவிட்டன . நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும்.

 நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக நானையங்களும், காகித நோட்டுகளும் செலாவணி என்று அழைக்கப்படுகிறது. வர்த்தகத் துறையின் அஸ்திவாரமே இந்த செலாவணி தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு தானியங்களையும் காய்கறிகளையும் பண்ட மாற்றாகக் கொடுத்து வாங்கி வந்தனர். ஆனால் காய்கறிகளும் தானியங்களும் நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காமல் போகவே வேறு வழியின்று தங்கம் மற்றும் பல உலோகங்களான கட்டிகளைக் கொடுத்துதான். தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிவந்தனர் .

தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது. இந்த உலோக பரிமாற்றத்திலும் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது . அது என்னவென்றால் தங்கம் போன்ற உலோகங்கள் சுத்தமானதா இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பயன்படுத்தப் படும் உரசிப் பார்க்கும் முறை மிகவும் கடினமாகத் தோன்றியது அனைவருக்கும் . இவ்வளவு வளச்சிகள் பெற்றப் பிறகும் இன்னும் பல கிராமங்களில் தானியங்கள் காய்கறிகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கும் முறை வழக்கில் இருந்துதான் வருகிறது என்பது மட்டும் திண்ணம்.


கி.மு 700. ம் ஆண்டு லிடியா நாட்டு மன்னன் கயிஜாஸ் என்பவர் எலேக்டிரம் என்னும் நாணயத்தை அறிமுகப்படுத்தினார். 25 சதவீதம் வெள்ளியும், 75 சதவீதம் தங்கமும் கலந்து இதை உருவாக்கினார். இந்த நாணயம் அவரை விதையின் உருவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் இந்த நாணயம் நீண்ட நாட்கள் அதிக வசதியை ஏற்படுத்தியது. கிரேக்க வர்த்தகர்கள் இதன் வசதியை உணர்ந்து இந்த நானையத்தை பயன்படுத்தத் தொடங்கினர் . இதில் இருந்து மிகக் குறுகிய காலத்திலயே பல நாடுகளுக்கும் நாணய செலாவணி முறை பரவத் தொடங்கியது. நாட்கள் செல்ல செல்ல தங்கத்துக்கு பதிலாக செம்பு பயன்படுத்தத் தொடங்கினார்கள். வியாபாரத்தில் அதிக அளவில் நாணயங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்த போதும். அதிக அளவிலான நானையன்களை தூக்கி செல்வதில் சிரமங்கள் இருந்தது . அதன்பிறகுதான் இதை சரி செய்யும் ஒரு முயற்சியாக முதன் முதலில் காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டு முறையை கொண்டு வந்தனர். இதில் சீனர்கள்தான் முதன் முதலில் காகித செலாவணி முறையை பணமாக கொண்டுவந்தார்கள் என்று சொல்லவேண்டும்.

 
 கி மு 119 ம் ஆண்டிலியே காகித நோட்டுக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் சீனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாணயம் மிக்க ஒரு வங்கி காகிதத்தில் அச்சடித்துள்ள தொகையை தருவதாக அளிக்கும் உறுதி மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் காகித நோட்டு பணம் புழக்கத்திற்கு வந்தது . கி.பி 1661 ம் ஆண்டு ஜூலை மாதம் சுவீடன் நாட்டில் ஸ்டாக் ஹோமில் உள்ள ஒரு வங்கிதான் உலகத்திலியே முதன் முதலில் அனைவரும் ஏற்றுகொள்ளும் வகையில் காகிதத்தில் அச்சிட்டு பணம் என்று வெளியிட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள். இன்று காகித நோட்டுக்கள் வளர்ச்சி அடைந்து காசோலைகள், கடன் அட்டைகள் என்று பல்வேறு வடிவில் உருமாற்றம் பெற்று இன்று உலகமெங்கும் கை மாறத் தொடங்கிவிட்டது. ”கைக்கு கை மாறும் பணமே உன்னைக் கைப் பற்ற நினைக்கிறது மனமே” என்று.
 
ன்ன நண்பர்களே..!! இன்றையத் தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
 

28 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் : பணம் தோன்றிய வரலாறு : world first currency history + 18 (01+03+2011) :

சக்தி கல்வி மையம் said...

இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு தெரிகிறது.

Unknown said...

நல்ல தகவல் நடுநடுவே படங்களுடன்

aavee said...

wonderful Information!!!

விழியே பேசு... said...

பதிவுன்னா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு......
நல்லா இருக்கு சார் ....

Jana said...

சிறப்பான ஒரு பதிவாக இதை படிக்கும்போது உணர்கின்றேன். உபயோகமானதும்கூட. நன்றிகள்.

Chitra said...

Very informative post. Thank you.

Praveenkumar said...

வியப்பை ஏற்படுத்தும் அரிய தகவல்களின் தொகுப்பு. தொடரட்டும் தங்களின் பொன்னான சேவைகள் நண்பரே...!!!

Praveenkumar said...

படங்களும் மிகவும் அருமையாக தேர்ந்தெடுத்து இணைத்து இருக்கீங்க... இந்த பதிவுக்காக.. ரொம்ப மெனக்கெட்டு கூகுள்ல படங்களை தேடி இருக்கீங்க என்பதை படங்களை பார்க்கும் போதே தெரிகிறது. கலக்குங்க தல.

Unknown said...

மிக சிறந்த பதிவு..

வசந்தா நடேசன் said...

good posting.. thanks.

செங்கோவி said...

நன்றாக தொகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்!

சதுக்க பூதம் said...

good post

middleclassmadhavi said...

அருமையான பதிவு... படங்களில் மவுஸைக் கொண்டு வைத்தால் click here to share என்று சாதாரணமாக வரும், ஆனால் இந்தப் பதிவில் அது நிஜமாக நடக்காதா என்றிருந்தது!!! :))

settaikkaran said...

வழமை போல நிறைய தகவல்கள்; அழகான படங்கள். ஆற அமர இன்னும் ஒரு முறை வாசிக்க வருகிறேன். நன்று...

'பரிவை' சே.குமார் said...

அரிய தகவல்களின் தொகுப்பு.

Ganesan said...

Very Nice

உணவு உலகம் said...

பதிவின் பின்னணியில் உங்கள் உழைப்பு தெரிகின்றது.

குறையொன்றுமில்லை. said...

இதுவரை, தெரியாத பலவிஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. இடையே படங்களின் அணிவகுப்பும் நல்லா இருந்தது.

மைதீன் said...

அற்புதமான பதிவு, நன்றி!!

மைதீன் said...

i,am 1271 follower

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அறிய மற்றும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்..

புகைப்படங்கள் மிக கடினப்பட்டு தொ குத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முடிந்தால்ட இதையும் படித்து பாருங்கள்..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_04.html

RAJA RAJA RAJAN said...

அருமையான பதிவு.

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள்...

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான தொகுப்பு.

Sathish said...

அருமையான பதிவு.சிறப்பான தகவல்கள்... பல அறிய விஷயங்கள தெரிந்துகொள்ள முடிந்தது.

Unknown said...

Thanks for the Information, it's really nice. Sorry Sankar i don't have a option to write in tamizh.

tamilbirdszz said...

பணம் பணம் பணம் அது இல்லை ஏன்டா இன்றைய நாளில் பிணம் No Money No Life நல்லா இருக்கு பதிவு