தேவைகள் தீர்ந்து
போகாத தேகத்தில் தாகமென
நீள்கிறது நமக்கான காதல்...!!
ஒட்டி வைக்க இயலாத
புன்னகையின சத்தமாய் குவிந்துகிடக்கிறது
இதழ்கள் எங்கும் ஒரு சோகம்...!!
புரிந்துகொள்ள
இயலாத உரையாடல்களின
தொகுப்புகள் எல்லாம் இன்னும்
உறங்கிக் கிடக்கிறது என் மௌனத்தில்... !!
ரணங்களின் உச்சமாய்
கிளிஞ்சலென சிதறிக் கிடக்கிறது
நம் இருவருக்குமான
எதிர்பார்ப்புகள்....!!!
வார்த்தைகள் பல தொடுத்து
சேர்த்து வைத்த உரையாடல்கள் எல்லாம்
காத்துக்கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில்
உனது வருகைக்காக..!!!
நீ அருகில் இருப்பதில்
இல்லாத மகிழ்ச்சியை
தனிமையில் உன்னை
நினைத்தலின் உச்சத்தில் உணர்கிறேன் .
உந்தன் விடை தரும்
பார்வை ஒன்றின் உச்சத்தில்
துடிதுடித்து மெல்ல அமைதி கொள்கிறது
குட்டி இதயம் ஒன்று உள்ளுக்குள்...!!
யுத்தம் செய்து சத்தமின்றி
இறந்து போவதை விட
யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்
கரைந்து போவதில் எனக்கு மகிழ்ச்சியே !
* * * * * *
* * * * * *
Tweet |
25 மறுமொழிகள் to காதல் ரணங்கள் : Panithuli shankar காதல் கவிதை Kadhal Kavithai in tamil (10+03+2011) :
யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்
கரைந்து போவதே எனக்கு மகிழ்ச்சி...கவிதை அருமை..வாழ்த்துக்கள்
தல கவிதை மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து நிறைய எழுதி அசத்துங்க.. நண்பா..!!!
சத்தமில்லாமல் நெஞ்சில் யுத்தம் செய்யும் கவிதை..
வாழ்த்துக்கள்..
இந்தக் கவிதை மனதை ஏதோ செய்கிறது.
pattayp kilappip poteeenga pongaa
நான் இதில் ரொம்ப வீக் (கவிதையிலும், காதலிலும்). ஆகவே வோட்டு போட்டுட்டு அப்பீட்டு.
"வார்த்தைகள் பல தொடுத்து சேர்த்து வைத்த உரையாடல்கள் எல்லாம் காத்து கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில் உன் வருகைக்காக"- மிக ரசித்து எழுதிய கவிதை.
அருமை உன் நினைவுகளோடு கரைந்துபோவது மகிழ்ச்சி அழகான வரிகள்
///// ரணங்களின் உச்சமாய்
கிளிஞ்சலென சிதறிக் கிடக்கிறது
நம் இருவருக்குமான
எதிர்பார்ப்புகள்....!!! ////
அருமையாக வடித்திருக்கறிர்கள் மிக்க நன்றிகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
உங்களது தளம் மிகவும் அருமை உங்கள் கவிதைகளைப்போல்
ரொம்ப வலிகள் மிகுந்த வரிகள்
யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்
கரைந்து போவதே எனக்கு மகிழ்ச்சி...
கவிதை கவிதை....
"வார்த்தைகள் பல தொடுத்து சேர்த்துவைத்த உரையாடல்கள் எல்லாம் காத்துக்கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில் உனது வருகைக்காக." (பார்த்தவுடன் எல்லாமே மறந்துடும்கறது வேறவிஷயம்) சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை. very nice என்பதைத்தவிர.
உங்கள் சிந்தனையில் உதிரவிட்ட எல்லா காதல் வரித்துளிகளும்
காதலின் ரணங்களை சொல்கிறது
மிக அழகாக வரிகளை கோர்த்தவிதம் அழகு
<<<>>>
super nice poem
ரணங்களின் ஓரத்தில் ஒரு அதீத காதல் தேங்கி இருக்கும்... அது அவ்வளவு உணர்ச்சிகரமானது.... மிக அருமையான படைப்பு...
வாழ்த்துகள்!
www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.
New Classified Website Launch in India - Tamil nadu
No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com
miga alagu.
//யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்
கரைந்து போவதே எனக்கு மகிழ்ச்சி//வலிகள் மிகுந்த வரிகள்...அருமை..
நல்ல உணார்வுகளை கவிதையில் விதைத்துள்ளீர்கள். இரசித்தேன்.
கவிதை அருமை. முதல் மூன்று வரிகள் தான் மேலும் படிக்க தூண்டியது...
-செல்வன்
thankathirselvan.blogspot.com.
ஆழமான நெஞ்சத்தைத் தொடும் வரிகள் . வாழ்த்துகள்
BARATHI:
ENAKU MENDUM KAVITHAI ELUTHA DHONDRUKIRADHU UNGAL KAVITHAI KANDA UDAN......
Post a Comment