பூக்களின் முகவரி
முதல் முறை அறிந்துகொண்டேன்
அவளின் முதல் புன்னகையில்...!!
யாரும் இல்லாத புதிய பிரபஞ்சம்
திரும்பும் திசையெங்கும் சிதறிக் கிடக்கும்
மேகக் கூட்டங்களாய் அவளின் பிம்பங்கள்..!!
எண்ணித் தீர்க்க இயலாத
சந்திப்புகளின் மத்தியில்
முத்திக்கொண்டது ஊடல்..!!.
ஒன்றாய் சந்தித்து மகிழ்ந்த
கடற்கரைகளில் எல்லாம்
தனிமை தாங்கி காட்சி தருகிறது
மணல் குவியல்கள்..!!
மறக்க முயற்சித்து தோற்றுப்போகிறேன்
அவளுடன் பேசிக் கழிந்த
அந்த அழகிய நிமிடங்களை..!!
உடைந்து போன
கண்ணாடி சில்லில் எல்லாம்
அவளின் பிம்பம் தேடி
தொலைந்துபோக அழைக்கிறது
அவள் இல்லாத தனிமை ஒன்று...!!!
யாருமற்ற தனிமையின் நிழல் தேடியே
மெல்ல இளைப்பாறிக் கொள்கிறது
அவளுக்கான தேடல்கள்....!!
உறங்கிப்போனதாய் காட்சி தரும்
விழிகளின் ஓரத்தில் எல்லாம்
வலிகள் சுமந்தபடி சில கண்ணீர்த் துளிகள்..!!
கால ஓட்டத்தில் மறந்துபோவாய்
என்று சொல்லி
பிரிந்து சென்றாள்
காலப் பெருவெளியில் வெகு தூரம்
கடக்கத் தொடங்கிவிட்டது இந்த தேகம்
அவளின் நினைவுகள் சுமந்த படி..
இன்னும் நீண்டு போகட்டும்
அவள் இல்லாத இந்தத் தனிமை
நான் இறந்துபோகும் வரை !!!.....
* * * * *
Tweet |
19 மறுமொழிகள் to நினைவுச் சுவடுகள் : panithuli shankar Ninaivuch suvadugal kadhal kavithaigal +18 ( 25+03+2011) :
அன்பின் பிரிவைத் தாங்க அதே அன்பின் பலம்தான் !
ஒவ்வொரு வரியும் ஓராயிரம் அர்த்தம் சொல்லும். அருமை. அருமை.
நினைவுச் சுவடுகள் அழுத்தம்!
கவிதையெல்லாம் ரொம்ப சோகமாவே இருக்கே சார்.... என்னாச்சு..
very nice lines
ஒவ்வொரு வரிகளும் இதயத்தை தொடுகிறது நண்பா..
அருமையான வரிகள் வரியை தொட்டு குறிப்பிடுவோம் என்றால் தெரிவு ஆகுதில்லை சகொதரம்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
Thanks for your feedback.கவிதை மிக அருமை-சில நினைவுகளை இறக்கும் வரை சும்க்கும் வேதனையை உணர வைத்துளீர்கள்
very nice!!
கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை
..
இன்று எனது வலைப்பக்கத்தில்:
<a href="http://farhacool.blogspot.com/2011/03/how-to-add-horizontal-navigation-bar-or.html>பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)</a>
யாருமற்ற தனிமையில் நிழல் தேடியே மெல்ல இளைப்பாறிக்கொள்கிறது அவளுக்கான தேடல்கள்
அருமை ஷங்கர் மிகவும் அற்புதமான உணர்வுகளை வழங்கியது கவிதை..!
அடடா...
//யாருமற்ற தனிமையில் நிழல் தேடியே மெல்ல இளைப்பாறிக்கொள்கிறது அவளுக்கான தேடல்கள்//
நல்லா இருக்குங்க!
இதயத்தை தட்டி எழுப்பும் வரிகள்,,,
அருமை ஷங்கர். எனக்கொரு சந்தேகம். கல்யாணம் ஆகும் வரைதான் கவிதை வருமோ..அல்லது கல்யாணத்துக்கு அப்புறம் மூன்று மாதம் தாங்குமோ..!!
ஒரு வேளை கவிதைக் கருக்கள் மாறி விடுமோ...!
நினைவுச் சுவடுகள் -
அப்ப Old Story-ஆ ... இப்ப உங்க வயசு என்ன ??
But கவிதை Super...
பலமும் பலவீனமும் அன்பு மட்டுமே... அதை அழகான வரிகள்ல சொல்லி இருக்கீங்க...:)
உங்கள் தளம்,
கவிதைத் களம்,
எண்ணம் யாவும் அழகு.
உங்கள் பாராட்டுக்கு நன்றி...
ninaivu suvadugal endrum ninaivil kollakudiyana....arumaiyaana kavithai....:)
Post a Comment