அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..!! நீண்ட இடைவெளிக்குப் பிறகு குட்டித் தகவல்கள் பதிவுகளுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி..! புதிதாக வருபவர்கள் குட்டித் தகவல்கள் என்றவுடன் ஏதோ பெண்குட்டியையோ, ஆண்குட்டியையோ, மான் குட்டியையோ, கன்றுக் குட்டியையோ, ஆட்டுக் குட்டியையோ, நாய்க் குட்டியையோ, பூனைக் குட்டியையோப் பற்றிக் குறிப்பிடுவதாக நினைத்து பதிவை படிக்க ஆரம்பித்தால் கம்பெனி பொறுப்பல்ல...!!! :) (ஸ்ஸ்சபா.... ஓவரா மொக்க போடுறானே மைண்ட் வாய்ஸ்......)
ஒரு தீவில் ஒரு வழக்கம் இருந்தது. யார் வேண்டுமானாலும் அரசர் ஆகலாம். ஆனால், ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சி செய்யமுடியும். பிறகு, அருகில் உள்ள இன்னொரு தீவில் அவரைத் தூக்கி எறிந்து விடுவார்கள். அங்குள்ள கொடிய விலங்குகள் அவரைக் கொன்று தின்றுவிடும். பல ஆண்டுகளாக இந்தப்பழக்கம் இருந்தது. இந்தமுறை ஓர் இளைஞன் அரசனானான்; சிறப்பாக ஆட்சி செய்தான்; ஐந்தாண்டுகள் முடிந்தன. அவனை அடுத்த தீவில் கொண்டு தள்ளிவிடப் படகில் அழைத்துப் போனார்கள்.
ஆனால், என்னே ஆச்சர்யம்....! அந்தத் தீவில் மனிதர்கள் பலர் இருந்து அவனை வரவேற்றார்கள். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா ? இந்த தீவை ஆண்டுக் கொண்டிருந்தபோதே மறைமுகமாக சில படை வீரர்களை அங்கே அனுப்பி மிருகங்களைக் கொன்றான். காடுகளை எல்லாம் செம்மைப் படுத்தினான். வீடுகளை உருவாக்கினான். குடும்பங்களைக் குடி பெயரச் செய்தான். இப்போது இன்னொரு நாடு உருவாகிவிட்டது. இப்போது இரண்டு நாடுகளுக்கும் இவனே தலைவன்.
இக்கதையிலிருந்து நாம் அறியப்படுவது யாதெனில் நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பினையும் சீரிய முறையில் திட்டமிட்டு, சிறந்த முறையில் பயன்படுத்தினால், சீர்மிகு இலக்குகளையும் குறிக்கோளையும் சிரமமின்றி அடையலாம்; சாதனை பல படைக்கலாம்..!!
என்றும் நேசமுடன்
பனித்துளி சங்கர்.
* * * * * * *
Tweet |
12 மறுமொழிகள் to பனிததுளி சங்கரின் குட்டித் தகவல்கள் - (Panithulishankar in kutty kutty thagavalgal) :
ம்ம்ம், மதியால் விதியை வெல்லலாம்னு சும்மாவா சொல்லியிருக்காங்க!
சரிதான் .
நல்லதொரு நம்பிக்கை பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
நல்லா தகவல் சொன்னீர்கள்! தொடரவும் தோழரே!
உங்களை என் வலைபக்கதிற்க்கு இனிதே வரவேற்கிறேன்..
நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பினையும் சீரிய முறையில் திட்டமிட்டு, சிறந்த முறையில் பயன்படுத்தினால், சீர்மிகு இலக்குகளையும் குறிக்கோளையும் சிரமமின்றி அடையலாம்; சாதனை பல படைக்கலாம்..!!
சிறப்பான சிந்தனைப்பகிர்வுக்கு பாராட்டுக்கள்!!
அருமையான கருத்து...
சூப்பர் ஸ்டார் ஒரு விழாவில் சொன்னதைப் பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தலைவா...
எதிரதாக்காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிரவருவதோர் நோய்
என்னும் வள்ளுவனின் குறளுக்கேற்றதொரு
கதையாக இல்லை கவிதையாக இது
மிளிர்கிறது.
சுப்பு ரத்தினம்.
நான் உங்கள் பதிவுக்கு இப்பொழுது தான் முதல் தடவையாக வருகிறேன்.
லேட் ஆ இருந்தாலும் லேடஸ்ட் வாசகன்.
சூப்பர் மச்சி....
கருத்து அருமை.
குட்டிக்கதை அருமை.
idhukkutha arivullavan ariyanai eara venndum
நண்பரே உங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.. தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)
Post a Comment