பனித்துளி சங்கர் இன்று ஒரு தகவல் - ரவிந்திரநாத் தாகூர் - Rabindranath tagore thagavalgal

னைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம். இன்று நாம் இன்று ஒரு தகவலின் வாயிலாக ரவிந்திரநாத் தாகூர் பற்றிதான் பார்க்க இருக்கிறோம் : வெர் த மைண்ட் ஈஸ் வித்தவுட் பியர் அண்ட் த ஹெட் ஈஸ் ஹெல்டு ஹை...என்று தொடங்கும் புகழ்பெற்ற கவிதை சிறுவயதில் படித்த நினைவு. கீதாஞ்சலி தொகுப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தாகூருக்கு வழங்கப்பட்டதை நாம் அறிவோம். தேசீய கீதம் ஜனகனமன... இந்த மாபெரும் கவிஞன் தாகூரின் பாடல் தான் என்பதும் அனைவரும் அறிந்ததே.

1. தாகூரின் மரணத்தின் பின் 60 ஆண்டுகாலமாக அவரின் படைப்புகளுக்கான பதிப்புரிமை விஸ்வபாரதி பல்கலைகழகத்திடமே இருந்தது. 2001 இல் தான் பதிப்புரிமை நீக்கப்பட்டது. இப்போது தாகூரின் பாடல்களின் மொழி பெயர்ப்புகளும், அவற்றுக்கான புதிய விளக்கங்களும் வெளிவருகின்றன.

2. தாகூர் ஒரு சர்வதேச மனிதர். உலகெங்கும் அவருக்கு இரசிகர்கள் உள்ளனர். தாகூர் ஒப்பிலாத கவிஞராகவும், ஓவியராகவும், இருந்தாலும், அவரது இசையே முழு நாட்டையும் அதிசயிக்க வைத்தது.

3. வாழ்க்கை வரலாற்று நூல். அவரது கவிதை, நாவல்கள் மற்றும் ஒவியங்கள் யாவற்றிலும் அவரது இசை இழையோடுகிறது. எனவே தான் நான், வாசகர்கள் அவரது இசையினூடாக அவரை காண வேண்டும் என விரும்புகின்றேன். தாகூர் 2000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். நான் அவரது பாடல்களில் பலவகையிலிருந்தும் தெரிந்தெடுத்து அவரது பல்துறை திறன், அவரது இசையின் சக்தி என்பவற்றை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளேன்.

4. அவரது 150ஆவது ஆண்டு விழா, மே 2012 இல் வருகின்றது. இதையொட்டி பல கலை நிகழ்வுகளையும் அவரின் சித்திரங்களின் பொருட்காட்சியையும் பல நாடுகளில் நடத்தவுள்ளோம். இவற்றினூடாக தாகூரின் கருணை, சமத்துவம் என்னும் செய்திகளை உலகெங்கும் பரப்புவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

5. கிட்டத்தட்ட- ஆயிரமாண்டு பழமையான வங்காள இலக்கியத்தின் நாயகர்களில் ஒருவர். இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளிலும் மிக பரந்தளவில் புகழ்பெற்றவர். அவருடைய கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை மிகவும் பரந்த அளவில் உலகம் முழுவதும் வாசிக்கப்படுகின்றன. பாடல்களுக்கு அவர் அமைத்த இசை கிழக்கிந்தியாவை தாண்டி, தெற்காசியாவில் எதிரொலிலித்து, உலகம் முழுவதும் மணம் பரப்புகின்றன.

கல்கத்தா ரவீந்திரநாத் தாகூர் மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரோபா...அவர்கள்.

இரண்டு தேசிய கீதங்களை இயற்றிய பெருமை மிக்க உன்னத கவிஞன். நோபல் பரிசு பெற்ற தாகூர், இந்தியாவை, உலக இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தவர். கருணையே இவரது சமயம். தாகூரின் 150 ஆவது பிறந்த தினம், உலகளாவிய ரீதியில் கொண்டாடப் படுகிரது. அந்த மாபெரும் கவிஞனை நினைவு கூர்ந்து சில வரிகள்.

தகவலுக்கு நன்றி இணையம் !

3 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் இன்று ஒரு தகவல் - ரவிந்திரநாத் தாகூர் - Rabindranath tagore thagavalgal :

Anonymous said...

thanks for sharing

www.eraaedwin.com said...

மிக்க நன்றி தோழர்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அருமை சகோ. எனக்கும் அவரின் கவிதைகள் பிடிக்கும். இந்தியாவின் தேசிய கீதமே அவருடையது என்பது, புதிய தகவல். நன்றி.தொடருங்கள் வாழ்த்துகள்.