மனம் கொத்தி மழைத்துளிகள் - (Panithulishankar - raindrops - kavithaigal)

மழை பற்றி கவிதை கேட்கின்றாய்....
உன் அன்பைப் பற்றி எழுதுகிறேன்...!
நின்று போகாத மழைக் காலம்
என் வாழ்வில் நீதான்.... 

அடிவானம் சிவந்து, 
மின்னலாய் வெட்கம் சிதறி,
புன்னகையுடன் என்னை 
தினம் தினம் நனைக்கும்
அடை மழை நீதான்....!. 

உன் நினைவுகள் சுமந்து 
நீளும் என் பயணங்கள் முழுவதும்
என் உடன் நீளும் வானம் நீதான்.....!
மழையில் நனையாமல், 
ஒற்றைக் குடை பிடித்து,
ஓரமாய் தெருவோரம் நீ செல்கையில்
என் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தே
முழுவதும் நனைகிறேன்... 
உன் காதல் மழையில்..... 

நான் அருகில் இல்லாத நேரத்தில்
வார்த்தைகளை அடைமழையாய் 
கொட்டித் தீர்க்கும் உன் உதடுகள்...
என்னை பார்க்கும் மறு நொடி 
மழை நின்றபின் மரக்கிளை துளியாய் 
சிறிது சிறிதாகவே தூரல்போடுவது ஏனோ....!?
அழுகின்ற போது அணைத்துப் பேசினாய்....
சிரிக்கின்ற போது மகிழ்ச்சி கூட்டினாய்.....
இதயம் சிறைபடும் நேரத்தில்
கனமின்றி பறக்கும் சிறகாய் 
இந்த உள்ளம் மாற்றினாய்.....
மொத்தத்தில் தொலைதூர 
உனது வருகையும்,
மழை தந்து செல்லும்
மண் வாசமும் ஒன்றுதான் என் வாழ்வினில்.....
இப்பொழுதெல்லாம் சிறு குழந்தையின்
விளையாட்டு பொம்மைப் போலவே
மாறிப்போனது உனது நினைவுகளும்.....
சிறிது நேரம் இல்லையென்றால்
அழுது அடம்பிடித்து 
தேடத் துவங்கிவிடுகிறேன் 
மீண்டும் உன் ஞாபகங்களில் 
நனைந்துபோக..............

- நேசமுடன்
பனித்துளி சங்கர்.-
* * * * * * *

8 மறுமொழிகள் to மனம் கொத்தி மழைத்துளிகள் - (Panithulishankar - raindrops - kavithaigal) :

MARI The Great said...

/////மலையில் நனையாமல் ஒற்றை குடைபிடித்து தெருவில் நீ நடக்கையில் என் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தே நான் முழுவதும் நனைகிறேன் ///////

அருமையான வரிகள் தல.. இந்த வரிகளுக்கு பிறகு வரும் அனைத்து வரிகளுமே அற்புதம் ...!

Anonymous said...

நான் அருகில் இல்லாத நேரத்தில்
வார்த்தைகளை அள்ளி அடைமழையாய்
கொட்டித்தீர்க்கும் உன் உதடுகள்......
என தொடர்ந்து செல்லும் வரிகள் ..
ரொம்ப அழகான அனுபவம் இது....
எனக்கும் அடிக்கடி நடக்கும்.

Prem S said...

மழை நின்ற பின் மரக்கிளை துளியாய் //அருமையான உவமை அன்பரே

Unknown said...

மழைக் காதல் கவி சூப்பர் சங்கர் அண்ணா... காதல் கவிஞரே

Unknown said...

மழைக் காதல் கவி சூப்பர் சங்கர் அண்ணா... காதல் கவிஞரே

kowsy said...

கவிதை கேட்டேன் சுவைத்தேன். அந்தக் காதலியை மழைத்துளிகளுடன் ஒப்புட்டுக் காட்டிய பாங்கு ரசிக்கக்கூடியதாக இருந்தது . உங்கள் குரலில் கவிதை மிக அருமை தொடருங்கள்

பால கணேஷ் said...

தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

Thoduvanam said...

உங்கள் மழையில் மனம் நனைந்தேன். அருமை.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்