தனிமைச் சிறையிலும் உயிர்த்தெழும் ஞாபகங்கள்..!! (Panithulishankar - Kavithaigal)

உன்னை தொடர்புகொள்ளும்
ஒவ்வொரு முறையும்
துண்டிக்கப் படுகிறேன்.!
நீ இன்றி நீளும் ஒவ்வொரு இரவுகளிலும்
உன் நினைவுகளால் தண்டிக்கப் படுகிறேன் .!
என் இதயத் துடிப்பின் ஓசையைவிட
உன்னைப் பற்றிய ஞாபகங்களின் ஓசைகள்
சற்று அதிகமாகவே கேட்கிறது
என் தனிமையான உலகத்தில் .!
நிழலோடு வாழ்ந்து நிஜத்தோடு வீழ்ந்து
மறந்தும் மறக்காமல் கடந்து போகிறேன்
நீ இல்லாத வாழ்க்கையை 
தினம் தினம் போலியாய் .!
ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை சத்தமிடும்
கடிகாரத்தின் ஓசையில் 
மீண்டும் துயில் கொண்டுவிடுகிறது
சற்றுமுன்வரை நான் மறந்து போனதாய் நினைத்த
உன் ஞாபகங்கள் !...

-நேசமுடன்
பனித்துளி சங்கர்-
* * * * * * *

7 மறுமொழிகள் to தனிமைச் சிறையிலும் உயிர்த்தெழும் ஞாபகங்கள்..!! (Panithulishankar - Kavithaigal) :

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா, நல்லாயிருக்கு வாழ்த்துகள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Anonymous said...

Niceeeeeeee..

மகேந்திரன் said...

ஞாபக ஊஞ்சல்...
காற்றோடு இணையாக
பறந்தாடுகிறது நண்பரே...

Unknown said...

சூப்பரான ஞாபகங்கள்
அருமையான கவி சங்கர் அண்ணா

DIN said...

பிரிவின் துயரை அறிய
உம் போன்ற எழுத்து சிற்பிகள் தேவை இக்காலத்தில்....

DIN said...

பிரிவின் துயரை அறிய
உம் போன்ற எழுத்து சிற்பிகள் தேவை இக்காலத்தில்....

arul said...

nice thoughts